மேலும் அறிய

பாராட்டுகளை அள்ளும் அபிஷன் ஜீவிந்த் அனஸ்வரா ராஜன் நடித்த வித் லவ் திரைப்படம்!

வித் லவ் படத்தின் படத்திரிகையாளர் சந்திப்பில் கலந்துகொண்ட பிரபலங்கள் படம் மிக சிறப்பாக வந்திருப்பதாகவும் நிச்சயம் ப்ளாக்பஸ்டர் அடிக்கும் என்றும் பாராட்டியுள்ளார்கள்.

Zion Films சார்பில் சௌந்தர்யா  ரஜினிகாந்த் மற்றும் MRP Entertainment  இணைந்து வழங்கும், பசிலியான் நாசரேத், மகேஷ் ராஜ் பசிலியான் தயாரிப்பில், டூரிஸ்ட் ஃபேமிலி'  இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் மற்றும் அனஸ்வரா  ராஜன் நடிப்பில் உருவாகியுள்ள,  “வித் லவ் ( With Love )” திரைப்படம் வரும் 2026 பிப்ரவரி 6 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.  இப்படத்தின் முன் வெளியீட்டு விழா படக்குழுவினருடன் திரை பிரபலங்கள் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக பண்பலை நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது 

இயக்குநர் தேசிங் பெரியசாமி  பேசியதாவது..,  

சிவாஜி திரைப்படத்தின் ரீ-ரிலீஸ் நிகழ்ச்சியில்தான் தயாரிப்பாளர் மகேஷ்ராஜ் அவர்களை முதன்முறையாக சந்தித்தேன். அன்றிலிருந்து நாங்கள் நல்ல நண்பர்களாகிவிட்டோம். அப்போது இவர் இப்படியொரு திறமையான, முன்னணி தயாரிப்பாளராக வளர்வார் என்று நான் நினைக்கவே இல்லை”  இப்போது அற்புதமான படங்கள் செய்கிறார். சௌந்தர்யா மேடம் இந்தப் படத்தை ரசிகர்களுக்கு பிடிக்க வேண்டுமென, ஒவ்வொரு அம்சத்தையும் பார்த்து பார்த்து செய்துள்ளார். அவரின் அந்த நேர்மை காரணமாகவே இந்தப் படம் நிச்சயம் வெற்றி பெறும்”. இயக்குநர் மதன் அவர்களின் முதல் படம்  போலவே தெரியவில்லை. மிகச் சிறப்பாக உருவாக்கியிருக்கிறார். அபிஷந்த் அபாரமான நடிப்பை வழங்கியுள்ளார். எதிர்காலத்தில் அவர் ஒரு பெரிய ஹீரோவாக வருவார். அனஸ்வரா ராஜன்  மிக அருமையாக நடித்துள்ளார் . ஷான் ரோல்டன் மிக அழகான இசையைத் தந்துள்ளார். படம் மிகப்பெரிய வெற்றி பெற வாழ்த்துக்கள். 

இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடி பேசியதாவது..,  

வித் லவ் ஒரு பக்காவன ஹிட் திரைப்படம். அபிஷந்த் அனஸ்வரா ஜோடி, மிகவும் க்யூட்டாக இருக்கிறது. காவ்யா அபாரமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.இந்தப் படத்தின் எடிட்டிங் சிறப்பாக இருக்கிறது. அவரது முதல் படம் போலவே தெரியவில்லை. எடிட்டருக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள். இந்த திரைப்படம் நிச்சயம் மிகப் பெரிய வெற்றியைப் பெறும். அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

தயாரிப்பாளர் அருண் விஷ்வா பேசியதாவது..,

ஒரு உண்மையான சினிமா ரசிகனுக்கு, படம் மூலம் கிடைக்கும் பணத்தை விட, ஒரு நல்ல படத்தை பார்த்த பிறகு மனதில் உருவாகும் திருப்திதான் பெரியது. அந்த படத்தை பார்த்து, அதை மனதில் அசைபோட்டு யோசிக்கும் ஒரு நிறைவு கிடைக்கும். அந்த உணர்வை நான் சிறை படத்தை பார்த்த பிறகு அனுபவித்தேன். அதே உணர்வு வித் லவ் படத்தை பார்த்த பிறகும் மீண்டும் கிடைத்தது. தயாரிப்பாளர் மகேஷ்ராஜ் தொடர்ந்து புதுமுக இயக்குநர்களுக்கு ஆதரவளித்து வருகிறார். மகேஷ் போன்ற தயாரிப்பாளர்கள் வெற்றி பெறும்போதுதான், மேலும் மேலும் புதுமுக இயக்குநர்களுக்கு வாய்ப்புகள் கிடைக்கும். ஆகவே, இப்படிப்பட்ட தயாரிப்பாளர்களுக்கு நாம் அனைவரும் முழுமையான ஆதரவு வழங்க வேண்டும். தயாரிப்பாளர் சௌந்தர்யா மேடமுக்கு என் வாழ்த்துக்கள். படம் வெற்றி பெற வாழ்த்துக்கள். 

நடிகர் மணிகண்டன் பேசியதாவது..,

நான் இரண்டு நாள் முன்னால் இந்தப் படத்தை பார்த்தேன். உண்மையிலேயே படம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. காரணம், இதோட சிம்பிளிஸிட்டி. சின்ன சின்ன எமோஷன்ஸை எவ்வளவு அழகா, பிரமாண்டமா படமாக்கியிருக்காங்கன்னு பார்க்கும்போது ஆச்சர்யமா இருந்தது. பெர்ஃபார்மன்ஸ், ரைட்டிங், சினிமேட்டோகிராஃபி, எடிட்டிங்—எல்லாமே ஸ்கிரிப்ட்டுக்காக வேலை செய்திருக்கிறார்கள். எதுவுமே ஸ்கிரிப்ட்டை கெடுக்காமல் மிக அழகாக இணைந்திருந்தது இந்தப் படத்தோட பெரிய பலம். அபிஷந்த் நடிப்பு , அனஸ்வராவின் நடிப்பு, ஜாஃபர் பண்ணிய கேரக்டர், அனிஷா ரோல்—எல்லாமே ரொம்ப பிரமாதம். குறிப்பா ஒரு சீன், இரண்டு நாள் கழிச்சும் மனசை விட்டு போக வில்லை. இயக்குநர் மதன், மோகன் ராஜ் ஐயா, ஷான் ஐயா, புரொட்யூசர்ஸ்—எல்லாருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள். இந்த வெற்றிகள் தொடர்ந்து வரட்டும் வரணும். இந்த படம் ஒரு பெரிய வெற்றி பெற வாழ்த்துக்கள்.


இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் பேசியதாவது..,

இந்தப் படத்தில் பணியாற்றிய ஒருவராகச் சொல்கிறேன், இந்த படம் பல காரணங்களுக்காக எனக்கு மிகவும் நெருக்கமானது. டூரிஸ்ட்ஃபேமிலி படத்தின் கதையை முதலில் அபிஷன் சொல்ல வந்த போது, கொஞ்சம் தயக்கமாக இருந்தார். ஆனால் கதை சொல்ல ஆரம்பித்ததும், அவர் ஒரு புதிய ஆளாக மாறிவிட்டார். ஒவ்வொரு காட்சியையும் நடித்துக் காட்டுவார். கண்டிப்பாக ஒரு நடிகராக அவர் மிகப் பெரிய உயரத்திற்கு செல்வார். ஒரு பெண் கதாபாத்திரத்திற்காக நான் விசில் அடிப்பேன் என்று நான் நினைத்ததே இல்லை. ஆனால் இந்தப் படத்தில் அனஸ்வராவின் நடிப்பு என்னை அவரின் ரசிகனாக மாற்றிவிட்டது. எனக்கு ரொம்-காம் படங்கள் மிகவும் பிடிக்கும். ஆனால் இவ்வளவு ஆழமான விஷயத்தை பேசிக்கொண்டே, அதே நேரத்தில் லேசான, ரசிக்கத்தக்க எண்டர்டெய்னராக உருவான ஒரு ரோம்-காம் படமாக இப்படம்  இருக்கும் என்று நான் நினைக்கவே இல்லை. படம் மிக அருமையாக வந்துள்ளது. சௌந்தர்யா ரஜினிகாந்த் மேம், ரஜினி சார்க்கு மகளாக  இருப்பது அத்தனை எளிதல்ல. அவருக்கு எந்தவிதமான ஆடம்பரமும் இல்லை. சினிமா துறையில் எனக்கு கிடைத்த ஒரு உண்மையான நண்பர் அவர். அவருக்கு என் நன்றி. இப்படம் கண்டிப்பாக எல்லோருக்கும் பிடிக்கும் நன்றி.

இயக்குநர் மதன் பேசியதாவது..,

இந்தப் படத்திற்கு உறுதுணையாக நின்ற முழு உதவி இயக்குநர்கள் குழுவிற்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். நான் அபிஷந்தின் டூரிஸ்ட் ஃபேமிலி  படத்தில் பணியாற்றினேன். அப்போது அவர் அந்தப் படத்தில் வேலை செய்து கொண்டிருந்த சமயத்தில், என்னுடைய இந்தக் கதையை வாசித்தார். கதையைப் படித்த பிறகு, ‘ரொம்ப நல்ல ஸ்கிரிப்ட்’ என்று சொன்னார். நான் அவரிடம் இந்தப் படத்தில் நாயகனாக நடிப்பீர்களா என்று கேட்டபோது, அதை லைட்டாக எடுத்துக்கொண்டு, ‘கதை நல்லா இருக்கு… ஒரு நல்ல நடிகரை நடிக்க வை’ என்று சொன்னார். அந்த நேரத்தில் அவர் தனது முதல் படத்தின் ரிலீஸுக்காக ஒரு இயக்குநராகவே பெரிய மன அழுத்தத்தில் இருந்தார். அதற்குப் பிறகு, நாயகனைத் தேட ஆரம்பித்தேன். பலரைப் பார்த்தோம்… ஆனால் எதுவுமே சரியாக அமையவில்லை. இதற்கிடையில் டூரிஸ்ட்ஃபேமிலி   படம் வெளியானது, அதன்பிறகு அபிஷந்த் ஒரு பெரிய இயக்குநராக உருவெடுத்தார். அதனால் அவரை மீண்டும் அந்த கதாபாத்திரத்திற்காக அணுக கூட எனக்குத் தயக்கமாக இருந்தது. .ஒரு நாள் நான் மனம் தளர்ந்த நிலையில் இருந்தபோது, என் நண்பர் பாலாவை சந்தித்தேன். ஸ்கிரிப்ட்டை மதிப்பிடுவதில் அவரை நான் மிகவும் உயர்வாக மதிக்கிறேன். அவர் என் ஸ்கிரிப்ட்டை வாசித்து, மிகவும் பாராட்டினார். அதே நேரத்தில், ‘இந்த கதைக்கு அபிஷந்த்தான் சரியான தேர்வு’ என்று சொன்னார். அதற்கு நான், ‘இப்போ அவர் பெரிய இயக்குநர் ஆகிட்டாரே’ என்று கூறினேன். அதற்கு பாலா, ‘நான் உன் சார்பாக அவரிடம் பேசுகிறேன்’ என்றார். பாலா பேசினதும், அபிஷந்த் மிக சந்தோசமாக ஒப்புக் கொண்டார். ஆனால், ‘முதலில் மதனுக்கு  ஓகேவா  கேளுங்க’ என்று பாலாவிடம் சொன்னார். நான் முழு மனதோடு சம்மதம் தெரிவித்தேன்.அபிஷந்தை நாயகனாக முடிவு செய்த பிறகு, தயாரிப்பாளர் மகேஷ் அண்ணாவை சந்தித்து இந்தப் படத்தை தயாரிக்க கேட்டோம். அவர் ஸ்கிரிப்ட்டை மிகவும் ரசித்தார். ஆனால், ‘இந்தப் படத்தை நான் சௌந்தர்யா ரஜினிகாந்த் மேடம் உடன்தான் செய்யப்போகிறேன். அவருக்கு ஸ்கிரிப்ட் பிடித்தால்தான் நான் தயாரிப்பேன்’ என்று கூறினார்.அதற்கு பிறகு, சௌந்தர்யா மேடமிடம் கதை சொல்ல ஆரம்பித்தோம். இரண்டாம் பாதியை நான் சொல்ல ஆரம்பிப்பதற்குள், ‘இந்தப் படத்தை நாம பண்ணலாம்’ என்று அவர் சொன்னது எனக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியாக இருந்தது. உடனே பரபரப்பாக ஆரம்பித்தோம், ஒரே வேகத்தில் படம் முடிந்துவிட்டது. எல்லோரது உழைப்பு தான் காரணம். மேனேஜர் பிரசாந்த், சுரேஷ் எனக்கு மிக உதவியாக இருந்தார்கள். எல்லோரும் தங்கள் சொந்தப்படம் போல வேலை பார்த்தார்கள். ஷான் ரோல்டன் மிக அற்புதமான இசையைத் தந்துள்ளார். அபிஷந்திற்கு என்னைப் பிடிக்கும், அவர் என்னை உடனே படம் செய்யுங்கள் என ஊக்கப்படுத்திக் கொண்டே இருந்தார். அவர் எனக்கு மிக நெருங்கிய நண்பராகிவிட்டார். அனஸ்வரா மிக நன்றாக நடித்துள்ளார். இந்தப்படம் கண்டிப்பாக அனைவருக்கும் பிடிக்கும் நன்றி.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

யூத் பட வெற்றிக்காக தயாரிப்பாளர் கருப்பையா கென்னிற்கு கொடுத்த பரிசு என்ன தெரியுமா ?
யூத் பட வெற்றிக்காக தயாரிப்பாளர் கருப்பையா கென்னிற்கு கொடுத்த பரிசு என்ன தெரியுமா ?
TVK ELECTION CAMPAIGN SONG : மெரள போகுது ஸ்டேட்டு...தவெக பிரச்சார பாடல் லிரிக்ஸ் இதோ
TVK ELECTION CAMPAIGN SONG : மெரள போகுது ஸ்டேட்டு...தவெக பிரச்சார பாடல் லிரிக்ஸ் இதோ
Ramayana Glimpse : 4000 கோடி செலவில் ஹாலிவுட் தரத்தில் வெளியான ராமாயணா படத்தின் க்ளிம்ப்ஸ் வீடியோ
Ramayana Glimpse : 4000 கோடி செலவில் ஹாலிவுட் தரத்தில் வெளியான ராமாயணா படத்தின் க்ளிம்ப்ஸ் வீடியோ
GV Prakash : வேண்டவே வேண்டாம்!
GV Prakash : வேண்டவே வேண்டாம்!" - அரசியலைத் தள்ளி வைத்த ஜி.வி. பிரகாஷ்!
Advertisement
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Counting Day 4th MAY 2026 | Monday

Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ஆதவ் கார் மோதி விபத்து! வலியால் துடித்த காவலர் உதவிய தவெக-வினர்
விடுதலை ஆன பொன்முடி.. கண்ணீர் விட்ட சிகாமணி! செம்மண் முறைகேடு வழக்கு
Vijay Copies MGR | அன்று MGR.. இன்று விஜய்! 2 தொகுதி போட்டி STRATEGY அரசியல் REWIND
Congress | காங்கிரஸில் நீயா நீனா போட்டி! பவரை கையில் எடுத்த ராகுல்! வேட்பாளர்கள் தாமதம் ஏன்?
வேட்பாளர் தேர்வில் இழுபறி..மாணிக்கம் தாகூர் திடீர் விலகல்!பரபரக்கும் காங்கிரஸ் கூடாரம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
“செந்தில் பாலாஜி என்றாலே செயல்வீரர், செயல்வீரர் என்றாலே செந்தில் பாலாஜி” - கோவை பிரச்சாரத்தில் புகழ்ந்து தள்ளிய முதல்வர் ஸ்டாலின்
“செந்தில் பாலாஜி என்றாலே செயல்வீரர், செயல்வீரர் என்றாலே செந்தில் பாலாஜி” - கோவை பிரச்சாரத்தில் புகழ்ந்து தள்ளிய முதல்வர் ஸ்டாலின்
Chennai Bus ; பேருந்து பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு !! காத்திருப்பு நேரம் குறைய புதிய திட்டம்
Chennai Bus ; பேருந்து பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு !! காத்திருப்பு நேரம் குறைய புதிய திட்டம்
Tamil Nadu New DGP: தமிழக தேர்தல் களம் பரபரப்பு! புதிய DGP நியமனம்: விஜய்க்கு பாதுகாப்பு குறைபாடு குற்றச்சாட்டு காரணமா?
தமிழக தேர்தல் களம் பரபரப்பு! புதிய DGP நியமனம்: விஜய்க்கு பாதுகாப்பு குறைபாடு குற்றச்சாட்டு காரணமா?
சிறுபான்மையினர் நிறுவனங்களை முடக்க சதி? ஏன் இந்த பிடிவாதம்? - மத்திய அரசுக்கு எதிராக கொந்தளித்த விஜய்
சிறுபான்மையினர் நிறுவனங்களை முடக்க சதி? ஏன் இந்த பிடிவாதம்? - மத்திய அரசுக்கு எதிராக கொந்தளித்த விஜய்
திமுக வேட்பாளர் சண். ராமநாதனுக்கு பெருகும் ஆதரவு: வல்லத்தில் தேர்தல் அலுவலகம் திறப்பு
திமுக வேட்பாளர் சண். ராமநாதனுக்கு பெருகும் ஆதரவு: வல்லத்தில் தேர்தல் அலுவலகம் திறப்பு
ரயில் பயணிகளுக்கு குட் நியூஸ்: நாளை முதல் எழும்பூர் ரயில் சேவை மீண்டும் தொடக்கம்; பணியை முன்பே முடித்து தெற்கு ரயில்வே அசத்தல்
ரயில் பயணிகளுக்கு குட் நியூஸ்: நாளை முதல் எழும்பூர் ரயில் சேவை மீண்டும் தொடக்கம்; பணியை முன்பே முடித்து தெற்கு ரயில்வே அசத்தல்
வஞ்சித்த மத்திய அரசு! திமுக கூட்டணிக்கு ஆதரவு: கொந்தளித்த விவசாயிகள்
வஞ்சித்த மத்திய அரசு! திமுக கூட்டணிக்கு ஆதரவு: கொந்தளித்த விவசாயிகள்
தெற்கில் மோடி அதிரடி: புதுவையில் ரோடு ஷோ... சென்னையில் ஆலோசனை... நாளை கேரளா பயணம்!
தெற்கில் மோடி அதிரடி: புதுவையில் ரோடு ஷோ... சென்னையில் ஆலோசனை... நாளை கேரளா பயணம்!
Embed widget