Kriti Sanon : வாவ்.. அனுராக் காஷ்யப் படத்தில் பரமசுந்தரியா? ஒரு மாஸ் அப்டேட்..
பாலிவுட் நடிகை கிருதி சனோன், அனுராக் காஷ்யப் இயக்கும் அடுத்த அதிரடி படத்திற்காக தயாராகி வருகிறார்!
![Kriti Sanon : வாவ்.. அனுராக் காஷ்யப் படத்தில் பரமசுந்தரியா? ஒரு மாஸ் அப்டேட்.. Bollywood actress Kriti Sanon has started prepping for next movie directed by Anurag Kashyap. Kriti Sanon : வாவ்.. அனுராக் காஷ்யப் படத்தில் பரமசுந்தரியா? ஒரு மாஸ் அப்டேட்..](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/09/12/10a621616be8e210a2703f4bfab96da01662982047790501_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
பாலிவுட் நடிகை கிருதி சனோன், அனுராக் காஷ்யப் இயக்கும் தனது அடுத்த அதிரடி படத்துக்காக தயாராகி வருகிறார்.
பிரபல இயக்குநர் காஷ்யப்பின் வழிகாட்டுதலின் கீழ், கிருதி ஏற்கனவே நடிப்பு வொர்க்க்ஷாப் மற்றும் உரையாடல் மற்றும் மொழிப் பயிற்சியைத் தொடங்கியுள்ளார். தகவல்களின் படி, காஷ்யப்பால் இந்தி சினிமாவில் இதுவரை எழுதப்பட்ட மிக வலுவான பெண் கதாபாத்திரங்களில் இதுவும் ஒன்று.
View this post on Instagram
"இது மிகவும் உணர்ச்சிகரமான படம் மற்றும் கிருதியின் கதாபாத்திரத்தால் ஒரு வலுவான பழிவாங்கும் படமாக இருக்கும். திரையில் இதுவரை வராத விஷயமாக இருக்கும்" என்று ஆதாரங்கள் கூறுகின்றன.
View this post on Instagram
'வீர் டி வெடிங்' என்ற பெண்கள் நாடகத்தின் மூலம் தயாரிப்பாளராக மாறி, பாக்ஸ் ஆபிஸில் தங்கத்தை வென்ற நிகில் திவேதி, இந்த படத்தைத் தயாரிக்கிறார். ஹாலிவுட்டில் பிரபல படமான 'கில் பில்' படத்தின் ரீமேக் என்று வதந்தி பரவியது, ஆனால் காஷ்யப் எப்போதும் அதை மறுத்து வந்தார். இப்படத்தின் படப்பிடிப்பு நவம்பர் மாதம் தொடங்குகிறது.
View this post on Instagram
கிருதி சனோனின் 'பேடியா', 'கணபத்', 'ஆதிபுருஷ்' மற்றும் 'ஷேஜாதா' ஆகிய படங்கள் வெளியாக உள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)