மேலும் அறிய

Rudra Thandavam | காதல்.. போதை.. பிசிஆர் சட்டம்..பா.ரஞ்சித்.. எச்.ராஜாவின் 'ருத்ரதாண்டவம்' ரிவ்யூ..!

ருத்ரதாண்டவம் திரைப்படத்தை பார்த்த பாஜகவின் எச்.ராஜா படம் குறித்து பேசினார்

சமூக ஊடகத்தில் மிகப்பெரிய விவாதத்தை கிளப்பிய படமான ‘திரௌபதி’ படத்தை தொடர்ந்து , மோகன் ஜி இயக்கியிருக்கும் திரைப்படம் ‘ருத்ர தாண்டவம்’. இந்த படத்தில் திரௌபதி படத்தில் கதாநாயகனாக நடித்த ரிச்சர்ட் ரிஷியே ஹீரோவாக நடித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அதுவே இந்த படம் மீதான எதிர்பார்ப்பு அதிகரிக்க காரணம். பொதுவாகவே மோகன் ஜி இயக்கும் படத்தில் சாதிய சாயல் இருக்கும் என்பது சிலரின் கருத்தாக உள்ளது.

முன்னதாக வெளியான திரௌபதி படத்தில் நாடக காதல் என்பதை மையமாக வைத்து , குறிப்பிட்ட சமுதாய மக்களை தாழ்த்திக்காட்டியதாக குற்றம் சாட்டப்பட்டது. இந்நிலையில் ருத்ர தாண்டவம் படமும் அப்படியான சாயலை ஏற்படுத்தும் என்றே பெரும்பாலானோர் சமூக வலைத்தளங்களில் விமர்சித்தனர். இந்நிலையில் இப்படம் வரும் அக்டோபரில் வெளியாகவுள்ளது. அதற்கு முன்னதாக சில அரசியல் கட்சியைச் சேர்ந்தவர்களுக்கு இப்படம் திரையிடப்பட்டது. அதன்படி பாஜகவின் ஹெச்.ராஜா, புதிய தமிழகம் கிருஷ்ணசாமி, இந்து மக்கள் கட்சியின் அர்ஜூன் சம்பத் உள்ளிட்ட பலரும் இப்படத்தை பார்த்தனர். படம் பார்த்த பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த ஹெச்.ராஜா, '' சினிமா என்பது பொழுதுபோக்கு மட்டுமல்ல. நல்வழிப்படுத்தவும் வேண்டும். உண்மையான ருத்ரதாண்டவத்தை நாங்கள் பார்த்தோம். 

Rudra Thandavam | காதல்.. போதை.. பிசிஆர் சட்டம்..பா.ரஞ்சித்.. எச்.ராஜாவின் 'ருத்ரதாண்டவம்' ரிவ்யூ..!

இப்படத்தில் மோகன் ஜி முக்கியமான விஷயங்கள் குறித்து பேசியுள்ளார். இளம் வயது காதல், போதை கலாசாரம்,  பிசிஆர் சட்டத்தை தவறாக பயன்படுத்துவது போன்ற விவகாரங்களை பேசியுள்ளார். அதாவது 18 வயதுக்கும் கீழ் உள்ளவர்கள் படிப்பில் கவனம் செலுத்த வேண்டுமே தவிர,காதலில் இல்லை. அதனை இப்படம் பேசுகிறது. அடுத்து போதைக்கலாசாரம். இன்று கருத்தரிப்பு மையங்கள் அதிகரித்துவிட்டது. அதற்கான காரணம் போதைக்கலாசாரம். அதனை புரிய வைக்கும் ஒரு படமாக இது இருக்கும். மூன்றாவதாக, பிசிஆர் சட்டத்தை தவறாக பயன்படுத்துபவர்களை தோலுரித்து காட்டியுள்ளது இப்படம். 

இந்தப்படம் எந்த மதத்தையும், சாதியையும் இழிவாக பேசவில்லை. சமூகத்துக்கு தேவையான நல்ல படமாகவே உள்ளது.  சாதாரண சட்ட ஒழுங்கு பிரச்னையை சாதி பிரச்னையாக மாற்றுபவர்களை இப்படம் எச்சரித்துள்ளது. இயக்குநர் மோகன் ஜி தேசிய கடமையை செய்துள்ளார். மாமன்னர் ராஜராஜ சோழன் குறித்து இழிவாக பேசியவர்கள் திரையுலகில் இருக்கத்தானே செய்கிறார்கள் என இயக்குநர் பா. ரஞ்சித் குறித்தும் எச்.ராஜா குறிப்பிட்டு பேசினார். 

Rudra Thandavam | காதல்.. போதை.. பிசிஆர் சட்டம்..பா.ரஞ்சித்.. எச்.ராஜாவின் 'ருத்ரதாண்டவம்' ரிவ்யூ..!

முன்னதாக, திரௌபதி படம் குறித்து இயக்குநர் மோகன் ஜி குறிப்பிடுகையில் , திரௌபதி படத்தில்  தனக்கு கதாநாயகன் ரிச்சர்ட் ரிஷி  மிகவும் உதவியதாக தெரிவித்துள்ளார். முன்னதாக படம் கிறிஸ்தவ மக்களுக்கு எதிரானது என்று விமர்சிக்கப்பட்டது. இதற்கு விளக்கமளித்த இயக்குநர் மோகன், படம் நிச்சயமாக கிறிஸ்தவர்களுக்கு எதிரானது அல்ல. எனக்கும் இயக்குநர் பா.ரஞ்சித்திற்கும் இடையில் எந்த போரும் கிடையாது. நான் அவருக்கு எதிரானவன் அல்ல எங்களுக்கிடையில் இருப்பது ஒரு ஆரோக்கியமான போட்டிதான் ” என குறிப்பிட்டுள்ளார். ‘ருத்ர தாண்டவம் ‘ திரைப்படம் வருகிற அக்டோபர் 1-ஆம் தேதி திரையரங்கில் வெளியாகவுள்ளது.

காட்சி ஊடகத்துறையில் 7 ஆண்டுகளுக்கு மேலாக அனுபவம் கொண்டவர். சோஷியல் மீடியா இன்சார்ஜ், டிக்கர் இன்சார்ஜ், கன்டண்ட் ரைட்டர், கன்டண்ட் இன் சார்ஜ் என பல்வேறு பிரிவுகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர் / பணியாற்றி வருபவர். அனைத்து பிரிவு செய்திகளையும் திறம்பட கையாளக் கூடிய நபர். குறிப்பாக சினிமா ரிவியூ, டெக்னாலஜி, ஆட்டோமொபைல் பிரிவுகளை அதிகம் பின்பற்றி எழுதுபவர். தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் கதை, கவிதை, கட்டுரை என தொடர்ந்து எழுதி வருபவர்.
Read More

தலைப்பு செய்திகள்

திமுக ஆட்சியில் ரூ.37 ஆயிரம் EB பில்.. இப்போ ரூ.13 ஆயிரம்.. எனக்கு அதிகமாக வரல.. வசமாக சிக்கிய வைஷாலி!
திமுக ஆட்சியில் ரூ.37 ஆயிரம் EB பில்.. இப்போ ரூ.13 ஆயிரம்.. எனக்கு அதிகமாக வரல.. வசமாக சிக்கிய வைஷாலி!
இந்த சூர்யா படத்திற்கும் சிக்கலா ? ‘விஸ்வநாத் & சன்ஸ்’ பல தியேட்டர்களில் ரிலீஸ் இல்லை!
இந்த சூர்யா படத்திற்கும் சிக்கலா ? ‘விஸ்வநாத் & சன்ஸ்’ பல தியேட்டர்களில் ரிலீஸ் இல்லை!
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
“அப்போ அந்த பதிவுகள் எல்லாம் என்ன?” – அனுபமாவை கேள்வி கேட்கும் நெட்டிசன்கள்
“அப்போ அந்த பதிவுகள் எல்லாம் என்ன?” – அனுபமாவை கேள்வி கேட்கும் நெட்டிசன்கள்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai Corporation: சொத்து வரி உயர்வு முடிவை கைவிட்ட சென்னை மாநகராட்சி.. பணம் கட்டியவர்கள் நிலை என்ன?
Chennai Corporation: சொத்து வரி உயர்வு முடிவை கைவிட்ட சென்னை மாநகராட்சி.. பணம் கட்டியவர்கள் நிலை என்ன?
Anbumani: பொய் சொல்லி ஏமாற்றி சென்ற திமுக - ரவுண்டு கட்டி அடித்த அன்புமணி - CM விஜய்க்கு கோரிக்கை
பொய் சொல்லி ஏமாற்றி சென்ற திமுக - ரவுண்டு கட்டி அடித்த அன்புமணி - CM விஜய்க்கு கோரிக்கை
CM Vijay DVAC: லஞ்ச ஒழிப்புத்துறையின் புதிய இயக்குனர்..! CM விஜய் டிக் அடித்தது யாரை தெரியுமா? காரணம் என்ன?
லஞ்ச ஒழிப்புத்துறையின் புதிய இயக்குனர்..! CM விஜய் டிக் அடித்தது யாரை தெரியுமா? காரணம் என்ன?
TN Weather News: இடி, மின்னலுடன் இன்று கனமழை எச்சரிக்கை - எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? வானிலை அறிக்கை
இடி, மின்னலுடன் இன்று கனமழை எச்சரிக்கை - எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? வானிலை அறிக்கை
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
Tasmac Shop Holiday : மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
Embed widget