மேலும் அறிய

BiggBoss Ultimate: பாவப்பட்ட புருஷனும் இல்லை; பாசக்கார அப்பனும் இல்ல.. விளாசும் தாடி பாலாஜியின் மனைவி..

பாலாஜி ஒன்றும் பாவப்பட்ட புருஷனும் இல்லை; பாசக்கார தந்தையும் இல்லை என்று பளார், பளார் என விளாசி எடுக்கிறார் அவரது மனைவி நித்யா.

பாலாஜி ஒன்றும் பாவப்பட்ட புருஷனும் இல்லை; பாசக்கார தந்தையும் இல்லை என்று பளார், பளார் என விளாசி எடுக்கிறார் அவரது மனைவி நித்யா.

பிக்பாஸ் 5-வது சீசன் வெற்றிகரமாக முடிந்துவிட்ட நிலையில் தற்போது 24-மணி நேரமும் ஒடிடி தளமான ஹாஸ்டரில் ஒளிபரப்பாகும் வகையில் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. வழக்கம்போல கமல்ஹாசனே தொகுத்து வழங்கி வரும் இந்நிகழ்ச்சியில், நடந்து முடிந்த 5 சீசன்களில் இருந்தும் பல போட்டியாளர்கள் களமிறங்கியுள்ளனர். .இதில் தற்போது தாடி பாலாஜியும் பங்கேற்றுள்ளார்.

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில், தாடி பாலாஜி, தனது மகள் போர்ஷிகாவை மிகவும் மிஸ் செய்வதை வெளியிப்படுத்திய நிலையில், தனது முன்னாள் மனைவி நித்யாவையும் அவதூறாகப் பேசினார். பாலாஜியின் அவதூறுக்கு தற்போது நித்யா, போர்ஷிகாவுடன் இணைந்து கலாட்டா சேனலுக்கு பதிலளித்துள்ளனர்.

அதில் நித்யா பேசியிருப்பதாவது:

பாலாஜி, இப்போது பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் என்னைப் பற்றி ரொம்பவே தரக்குறைவாக பேசிக்கிட்டே இருக்கிறார். இதற்கு மேலும் என்னால் பொறுக்க முடியாது. பாலாஜி ஒன்றும் பாவப்பட்ட புருஷனும் இல்லை; பாசக்கார தந்தையும் இல்லை. அவர் என்னைப் பற்றி எவ்வளவு மோசமான ஆடியோ மெசேஜ் அனுப்பியிருக்கிறார் தெரியுமா? ஒருவேளை இனிமேலும் பாலாஜி என்னைப் பற்றி என் நடத்தையைப் பற்றி பேசினால் அந்த ஆடியோக்களை எல்லாம் வெளியிடுவேன். இவர் இப்போது மீடியாவை கையில் வைத்துக் கொண்டு பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் பேசுவதெல்லாம் கோர்ட்டில் அவருக்கு சாதகமாக முடியும். அதற்காகவே நடிக்கிறார். ஆனால் அவர் நடிக்கிறார் என்பதை என்னால் நிரூபிக்க முடியும். டிரைவரைவிட்டு என்னை கேவலாக பேசவிட்டு, அருகிலேயே இருந்து ரசித்தவர் பாலாஜி. என் மகள் போர்ஷிகாவை எவ்வளவு தகாத வார்த்தைகளில் பேசியிருக்கிறார் தெரியுமா? குடிபோதையில் போர்ஷிகாவிடம் பாலாஜி பேசிய மோசமான ஆடியோ டேப் என்னிடம் இருக்கிறது. இதையெல்லாம் நான் வெளியிடத் தயங்க மாட்டேன். பாலாஜி நடிக்க வேண்டாம்.

நான் மட்டும் வைல்ட் கார்டு என்ட்ரியில் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சிக்கு வந்தேன் என்றால் அவ்வளவு தான் நேருக்கு நேர் பாலாஜியை வறுத்து எடுத்துவிடுவேன். அப்புறம் இந்த வீடியோவை வைத்து நான் யூடியூபில் பிரபலமாக வேண்டும் என்றும் நினைக்கவில்லை. என்னைப் பற்றிய நெகடிவ் கமென்ட்ஸ் சொன்னாலும் கவலை இல்லை. எங்கள் பிரச்சனை முதிர்ந்த மனநிலை உடையவர்களுக்குத் தான் தெரியும். என்னை ஆதரிப்பவர்களுக்கு நன்றி சொல்லிக் கொள்கிறேன்.

இவ்வாறு நித்யா கூறியிருக்கிறார்.

இடையில் சிறிது நேரம் பேசும் போர்ஷிகா, நான் இப்போது வளர்ந்துவிட்டேன். எனக்கு முதிர்ச்சியுள்ளது. நான் எது நல்லது, எது கெட்டது என அறிந்து கொண்டேன். நீங்கள் பிக்பாஸ் வீட்டில் நடிக்கிறீர்கள். இனியும் அம்மாவைப் பற்றி அவதூறு பேசாதீர்கள். இல்லாவிட்டால் நாங்கள் தினமும் ஒரு யூடியூப் வீடியோ வெளியிட வேண்டியிருக்கும் என்று குழந்தை படபடத்தார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Stalin on NEET: நீட் தேர்வு விவகாரம்.. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முக்கிய அறிவிப்பு...
நீட் தேர்வு விவகாரம்.. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முக்கிய அறிவிப்பு...
TNSTC Ticket Booking: கிராம மக்களே கவனியுங்க.. அரசுப் பேருந்து டிக்கெட்ட இனி ஈசியா புக் பண்ணலாம்... எங்க தெரியுமா.?
கிராம மக்களே கவனியுங்க.. அரசுப் பேருந்து டிக்கெட்ட இனி ஈசியா புக் பண்ணலாம்... எங்க தெரியுமா.?
Waqf Amendment Bill: வக்பு மசோதா - ஜி.கே. வாசன் ஆதரவு, அன்புமணி ஆப்சென்ட் - அதிமுக நிலைப்பாடு என்ன? தமிழக எம்.பிக்கள்..
Waqf Amendment Bill: வக்பு மசோதா - ஜி.கே. வாசன் ஆதரவு, அன்புமணி ஆப்சென்ட் - அதிமுக நிலைப்பாடு என்ன? தமிழக எம்.பிக்கள்..
Ajith Son: புலிக்கு பிறந்த சூரப்புலி.. அப்பா அஜித் வழியில் அசத்தும் ஆத்விக்...
புலிக்கு பிறந்த சூரப்புலி.. அப்பா அஜித் வழியில் அசத்தும் ஆத்விக்...
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Murugan Temple Theft CCTV | மருதமலை கோவிலில் திருட்டு!சாமியார் வேடத்தில் வந்த திருடன்TVK Leader Vijay Next Plan: நல்ல நேரம் குறிச்சாச்சு.. Operation 234! ஆட்டத்தை தொடங்கும் விஜய்!CV Shanmugam: அமித்ஷா - சி.வி.சண்முகம் சந்திப்பு.. வக்பு சட்டத்துக்கு ஆதரவா? அதிர்ச்சியில் எடப்பாடிஓசி டிக்கெட் கேட்ட கிரிக்கெட் சங்கம் காவ்யா மாறனுக்கு மிரட்டல்! HOME GROUND-ஐ மாற்றும் SRH?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Stalin on NEET: நீட் தேர்வு விவகாரம்.. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முக்கிய அறிவிப்பு...
நீட் தேர்வு விவகாரம்.. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முக்கிய அறிவிப்பு...
TNSTC Ticket Booking: கிராம மக்களே கவனியுங்க.. அரசுப் பேருந்து டிக்கெட்ட இனி ஈசியா புக் பண்ணலாம்... எங்க தெரியுமா.?
கிராம மக்களே கவனியுங்க.. அரசுப் பேருந்து டிக்கெட்ட இனி ஈசியா புக் பண்ணலாம்... எங்க தெரியுமா.?
Waqf Amendment Bill: வக்பு மசோதா - ஜி.கே. வாசன் ஆதரவு, அன்புமணி ஆப்சென்ட் - அதிமுக நிலைப்பாடு என்ன? தமிழக எம்.பிக்கள்..
Waqf Amendment Bill: வக்பு மசோதா - ஜி.கே. வாசன் ஆதரவு, அன்புமணி ஆப்சென்ட் - அதிமுக நிலைப்பாடு என்ன? தமிழக எம்.பிக்கள்..
Ajith Son: புலிக்கு பிறந்த சூரப்புலி.. அப்பா அஜித் வழியில் அசத்தும் ஆத்விக்...
புலிக்கு பிறந்த சூரப்புலி.. அப்பா அஜித் வழியில் அசத்தும் ஆத்விக்...
Pamban Bridge: புதிய பாம்பன் பாலமும், 1964 புயலின் கதையும் - 200 பயணிகளுடன் அடித்துச் செல்லப்பட்ட ரயில்
Pamban Bridge: புதிய பாம்பன் பாலமும், 1964 புயலின் கதையும் - 200 பயணிகளுடன் அடித்துச் செல்லப்பட்ட ரயில்
Waqf Amendment Bill: இரவோடு இரவாக நிறைவேற்றம் - விரைவில் அமலாகிறது புதிய வக்பு வாரிய சட்டம் - ஆதரவும், எதிர்ப்பும்
Waqf Amendment Bill: இரவோடு இரவாக நிறைவேற்றம் - விரைவில் அமலாகிறது புதிய வக்பு வாரிய சட்டம் - ஆதரவும், எதிர்ப்பும்
” என் பெயர் ஸ்டாலின்” அதிர்ந்த அரங்கம்..கட்சி மாற கட்டாயப்படுத்துறீங்க- சிபிஎம் மாநாட்டில் சூளுரை
” என் பெயர் ஸ்டாலின்” அதிர்ந்த அரங்கம்..கட்சி மாற கட்டாயப்படுத்துறீங்க- சிபிஎம் மாநாட்டில் சூளுரை
"முஸ்லிம்கள் மீதான உளவியல் தாக்குதல்" பாஜகவுக்கு எதிராக பொங்கி எழுந்த தவெக விஜய்
Embed widget