மேலும் அறிய

Vanitha Vijayakumar: ‘பிரதீப்புக்கு ரெட் கார்டு கொடுப்பீங்களா?’ வனிதா விஜயகுமாரை தாக்கிய மர்ம நபர் யார்?

பிரபல நடிகை வனிதா விஜயகுமார் மீது மர்ம நபர் தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். 

பிரபல நடிகை வனிதா விஜயகுமார் மீது மர்ம நபர் தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். 

அதில், முகத்தில் அடிபட்டு காயம் ஏற்பட்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். மேலும் அந்த பதிவில், ‘ நான் என் மீதான தாக்குதலை தைரியமாக பதிவு செய்கிறேன் . பிக்பாஸ் நிகழ்ச்சி என்பது தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ஒரு கேம் ஷோ மட்டுமே. என்னை கொடூரமாக தாக்கியது யார் என்று கடவுளுக்கு மட்டுமே தெரியும். அந்த நபர் பிரதீப் ஆண்டனி ஆதரவாளர் என்று சொல்லி கொள்பவர்.

நான் பிக்பாஸ் நிகழ்ச்சியின் விமர்சனத்தை முடித்துவிட்டு இரவு உணவு சாப்பிட்டு விட்டு என் காரில் இறங்கி நடந்துக் கொண்டிருந்தேன். காரை என்னுடைய சகோதரி சௌமியா வீட்டருகே இருட்டான பகுதியில் நிறுத்தியிருந்தேன். அப்போது எங்கிருந்தோ வந்த ஒரு நபர், ‘பிரதீப்புக்கு ரெட் கார்டு கொடுக்குறீங்களா?’ என கேட்டார். 

அதுக்கு நீ வேற சப்போர்ட்டுக்கு வர்றீயா என சொல்லிவிட்டு என் முகத்தில் பலமாக தாக்கிவிட்டு தப்பி ஓடி விட்டார். இதனால் காயம் ஏற்பட்ட இடத்தில் ரத்தம் வழிந்து பயங்கர வலியாக இருந்தது. நள்ளிரவு 1 மணியளவில் நடந்த இந்த சம்பவத்தின்போது என் அருகில் யாரும் இல்லை. நான் என் சகோதரியை கீழே வரும்படி அழைத்த நிலையில், அவர் இந்தச் சம்பவத்தைப் போலீஸில் தெரிவிக்கும்படி வலியுறுத்தினார். ஆனால் நான் அவளிடம், போலீஸில் தெரிவிப்பதில் நம்பிக்கை இழந்து விட்டேன் என தெரிவித்தேன். 

View this post on Instagram
 
A post shared by Vanitha Vijaykumar (@vanithavijaykumar)

மேலும், காயம் ஏற்பட்ட இடத்தில் முதலுதவி செய்துவிட்டு நான்  கோபத்துடன் வீட்டை விட்டு வெளியேறி தாக்கியவரை அடையாளம் காண நினைத்தேன், முடியவில்லை. அந்த நபர் பைத்தியக்காரத்தனமாக சிரித்தது என் காதுகளில் கேட்டுக்கொண்டே இருக்கிறது.  நான் திரையில் தோன்றும் அளவுக்கு உடல் நலத்துடன் இல்லாததால் எல்லாவற்றிலிருந்தும் ஓய்வு எடுத்துக்கொள்கிறேன். இதுபோன்று விஷயங்களில் ஈடுபடுபவர்களை  ஆதரிப்பவர்களுக்கு ஆபத்து ஒரு அடி தூரத்தில் உள்ளது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என பதிவிட்டுள்ளார்.  இந்த சம்பவம் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

பிரதீப் ஆண்டனி விவகாரம் 

கடந்த அக்டோபர் 1 ஆம் தேதி முதல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7வது சீசனில் போட்டியாளர்களில் ஒருவராக நடிகர் பிரதீப் ஆண்டனி பங்கேற்றனர். ஆரம்பத்தில் இருந்து டாஸ்க்குகளில் சவாலான போட்டியாளராக விளங்கிய அவர், சக பெண்களின் பாதுகாப்பு பிரச்சினைக்கு காரணமாக இருந்ததாக கூறி ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றப்பட்டார். இந்த விவகாரம் பெரும் புயலை இணையத்தில் கிளப்பியது. பலரும் பிக்பாஸ் நிகழ்ச்சியையும், கமல்ஹாசனையும் பிரதீப் ஆண்டனிக்கு சப்போர்ட் செய்து விமர்சித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

தலைப்பு செய்திகள்

இது இல்லையென்றால் ரஜினி படமாக இருந்தாலும் தயாரிக்க மாட்டோம்..ஓப்பனாக பேசிய அர்ச்சனா கல்பாத்தி
இது இல்லையென்றால் ரஜினி படமாக இருந்தாலும் தயாரிக்க மாட்டோம்..ஓப்பனாக பேசிய அர்ச்சனா கல்பாத்தி
மிஸ் ஆகும் பழைய மேஜிக்...ஆல்பம் ஹிட் கொடுத்த ஜிவி பிரகாஷ் என்ன ஆனார்?
மிஸ் ஆகும் பழைய மேஜிக்...ஆல்பம் ஹிட் கொடுத்த ஜிவி பிரகாஷ் என்ன ஆனார்?
'செய்! செய்யாதே!' இசை, டிரெய்லர் வெளியீடு... சமூக விழிப்புணர்வு படத்திற்கு பிரபலங்கள் வாழ்த்து
'செய்! செய்யாதே!' இசை, டிரெய்லர் வெளியீடு... சமூக விழிப்புணர்வு படத்திற்கு பிரபலங்கள் வாழ்த்து
விஜயின் 'ஜன நாயகன்' வசூலை முந்திய ஸ்பைடர்மேன்... இந்தியாவில் ஹாலிவுட் படைத்த புதிய சாதனை!
விஜயின் 'ஜன நாயகன்' வசூலை முந்திய ஸ்பைடர்மேன்... இந்தியாவில் ஹாலிவுட் படைத்த புதிய சாதனை!

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
CM Vijay: ”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
அம்மாடியோவ்… கார் விலையில் கல்வி- மாருதி பிரெஸ்ஸா விலையில் ப்ரீஸ்கூல் கட்டணம்! எங்கே?
அம்மாடியோவ்… கார் விலையில் கல்வி- மாருதி பிரெஸ்ஸா விலையில் ப்ரீஸ்கூல் கட்டணம்! எங்கே?
Tata Nexon: டாப் சேல் கார்.. டாடா நெக்ஸான் வாங்க ரூ.2 லட்சம் முன்பணம்: EMI, வட்டி சேமிப்பு ரகசியம்
Tata Nexon: டாப் சேல் கார்.. டாடா நெக்ஸான் வாங்க ரூ.2 லட்சம் முன்பணம்: EMI, வட்டி சேமிப்பு ரகசியம்
Volkswagen Virtus Anniv., Edition: அழகுக்கு அழகை சேர்த்த ஃபோக்ஸ்வேகன்; ஆண்டுவிழா பதிப்பில் புதிய கலரில் மனதை மயக்கும் விர்டஸ்
அழகுக்கு அழகை சேர்த்த ஃபோக்ஸ்வேகன்; ஆண்டுவிழா பதிப்பில் புதிய கலரில் மனதை மயக்கும் விர்டஸ்
Chennai Power Cut: சென்னைல ஆகஸ்ட் 8-ம் தேதி சனிக்கிழமை எங்கெங்க மின்சாரத் தடை ஏற்படப் போகுது தெரியுமா.? லிஸ்ட் இதோ
சென்னைல ஆகஸ்ட் 8-ம் தேதி சனிக்கிழமை எங்கெங்க மின்சாரத் தடை ஏற்படப் போகுது தெரியுமா.? லிஸ்ட் இதோ
Japanese SUV: ரூ.9 லட்சம் பட்ஜெட்டில் எஸ்யுவியை இறக்கும் ஜப்பான் நிறுவனம் - டாடாவை மிஞ்சுமா? கார் எப்படி இருக்கும்?
ரூ.9 லட்சம் பட்ஜெட்டில் எஸ்யுவியை இறக்கும் ஜப்பான் நிறுவனம் - டாடாவை மிஞ்சுமா? கார் எப்படி இருக்கும்?
Embed widget