மேலும் அறிய

Super Singer In Biggboss| பிக்பாஸில் சூப்பர் சிங்கர் பிரபலமா? ஏறும் ஹைப்..

ஐபிஎல், சர்வைவர் போன்ற நிகழ்ச்சிகள் தற்போது ஒளிப்பரப்பாகிவரும் நிலையில் பிக்பாஸ் சீசன் 5-க்கு எந்தளவிற்கு ரேட்டிங் இருக்கும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

தமிழ் ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்துக் காத்திருக்கக்கூடிய பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் சூப்பர் சிங்கர் சாம் விஷால், மாஸ்டர் திரைப்படத்தில் நடித்த சிபி புவனசந்திரன், கானா பாடகி இசைவாணி ஆகியோர் கலந்துகொள்ளவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மக்களிடைய எதிர்மறைக் கருத்துக்கள் நிலவிய போதும் டெலிவிஷன் ரேட்டிங்கில் இந்நிகழ்ச்சியை அடித்துக்கொள்வதற்கு யாருமே இல்லை என்று தான் கூற வேண்டும். அந்தளவிற்கு கடந்த 2017-ஆம் ஆண்டு முதல் பிரபலமாகிவருகிறது பிக்பாஸ் நிகழ்ச்சி.  நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் இந்நிகழ்வில் முதல் சீசனிலிருந்தே காதல், சண்டை, நட்பு, பாசம் என எதற்குமே பஞ்சம் இல்லை என்றுதான் கூற வேண்டும். அதேப்போன்று தான் பிக்பாஸ் சீசன் 5 இருக்கும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகளவில் எழும்பியுள்ளது. இந்த எதிர்பார்ப்பை நிவர்த்தி செய்யும் வகையில் இன்னும் 3 நாள்களில் பிக்பாஸ் நிகழ்ச்சி கோலாகலமாகத் தொடங்கவுள்ளது.

Super Singer In Biggboss| பிக்பாஸில் சூப்பர் சிங்கர் பிரபலமா? ஏறும் ஹைப்..

இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இருந்தே யார் யார் சீசன் 5-இல் கலந்துகொள்ளப்போகிறார்கள் என்ற எதிர்ப்பார்ப்பும், வதந்திகளும் அதிகரிக்கத் தொடங்கியது. குறிப்பாக குக்வித் கோமாளி டைட்டில் வின்னர் கனி, நிகழ்ச்சித் தொகுப்பாளர் பிரியங்கா, நடிகை ஷகிலாவின் மகள் திருநங்கை மிலா, பாபா பாஸ்கர், இமான் அண்ணாச்சி, விஜே பப்பு உள்ளிட்ட பலர் கலந்துகொள்வார்கள் என்ற பெயர்கள் அனைத்தும் இடம் பெற்றுள்ளது. மேலும் கடந்த சில தினங்களுக்கு முன்னதாக மிலா, கோபிநாத் ரவி, ஷாலு ஷாமு, கண்மணி ஆகியோரின் வெளியான புகைப்படம் ஒன்று  சமூக  வலைத்தளத்தில் வைரலானது. அவர்கள் போட்டியில் பங்கேற்பதற்காக நட்சத்திர ஓட்டலில் தனிமைப்படுத்தப்பட்டிருப்பதாகக் கூறப்பட்டது.

இந்நிலையில் தான் மீண்டும் சிலரின் பெயர் தற்போது பெயர் உறுதியாகியுள்ளது. அதில், சூப்பர் சிங்கர் சாம் விஷால், மாஸ்டர்  திரைப்படத்தில் நடித்த சிபி புவனசந்திரன், கானா பாடகி இசைவாணி ஆகியோர்களின் பெயர்களும் சேர்க்கப்பட்டிருக்கின்றன. குறிப்பாக சூப்பர் சிங்கர் சாம் விஷாலின் குரலுக்கு பல ரசிகர்கள் உள்ள நிலையில் பிக்பாஸ் போட்டியில் எப்படியெல்லாம் அனைத்து போட்டியாளர்களையும் மற்றும் ரசிகர்களையும் தனது பாடலின் மூலம் அசத்தப்போகிறார் என்ற எதிர்ப்பார்ப்பு அதிகளவில் உள்ளது. இதேபோன்று 2020-ஆம் ஆண்டில் பிபிசி 100 மகளிர் விருதுகளில் ஒருவரான பிரபல கானா பாடகி இசைவாணியும் கலந்துகொள்ளவுள்ளார். எனவே இவரின் பங்களிப்பு எப்படி இருக்கப்போகிறது? என்ற ஆர்வம் தமிழ் பார்வையாளர்களிடையே அதிகளவில் ஏற்பட்டுள்ளது.

Super Singer In Biggboss| பிக்பாஸில் சூப்பர் சிங்கர் பிரபலமா? ஏறும் ஹைப்..

மேலும், மாஸ்டர் படத்தில் விஜய்யின் மாணவராக நடித்தத் தமிழ் நடிகர் சிபி புவனசந்திரன் இந்நிகழ்ச்சியில் போட்டியாளராகப் பங்குபெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது பிக்பாஸ் போட்டியில் பங்கேற்கவுள்ள அனைத்துப் போட்டியாளர்களும் கொரோனா விதிமுறையின் படி நட்சத்திர ஓட்டல் ஒன்றில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில் தான் பிக்பாஸின் தொடக்க நிகழ்ச்சி அக்டோபர் 3-ஆம் தேதி தொடங்கவுள்ளதை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர். ஆனாலும் தற்போது ஐபிஎல், சர்வைவர் போன்றவை ஒளிபரப்பாகிவரும் நிலையில் இந்த சீசனுக்கு எந்தளவிற்கு ரேடிங் இருக்கும் என்பதைப் பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

Bigg Boss: மக்கள் செல்வன் என்றும் பாராமல்..! விஜய் சேதுபதியை நக்கல் செய்த ஜேசன்! பிக்பாஸில் பரபரப்பு
Bigg Boss: மக்கள் செல்வன் என்றும் பாராமல்..! விஜய் சேதுபதியை நக்கல் செய்த ஜேசன்! பிக்பாஸில் பரபரப்பு
Bigg Boss Tamil: நீலாம்பரி இஸ் பேக்! ஜேசனை தெறிக்க விட்ட ரம்யாகிருஷ்ணன்! அனல் பறந்த பிக்பாஸ்!
Bigg Boss Tamil: நீலாம்பரி இஸ் பேக்! ஜேசனை தெறிக்க விட்ட ரம்யாகிருஷ்ணன்! அனல் பறந்த பிக்பாஸ்!
அந்த பையனுக்கு பயமில்ல...மீண்டும் தவெக ஆதரவாளர்களை சீண்டிய விஜய் சேதுபதி
அந்த பையனுக்கு பயமில்ல...மீண்டும் தவெக ஆதரவாளர்களை சீண்டிய விஜய் சேதுபதி
Vijay Sethupathi: பிக்பாஸ் வீட்டைத்தான் பேசுனேன்.. வேற யாரையும் பேசல.. விளக்கம் அளித்த விஜய் சேதுபதி
Vijay Sethupathi: பிக்பாஸ் வீட்டைத்தான் பேசுனேன்.. வேற யாரையும் பேசல.. விளக்கம் அளித்த விஜய் சேதுபதி

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
சென்னைக்கு ஆரஞ்ச் அலர்ட் - வெளியானது முக்கிய வானிலை எச்சரிக்கை... மக்களே அலர்ட்!
சென்னைக்கு ஆரஞ்ச் அலர்ட் - வெளியானது முக்கிய வானிலை எச்சரிக்கை... மக்களே அலர்ட்!
Chennai Power Cut: அட கடவுளே... சென்னையில் நாளை (17.11.2026) ஒரே நேரத்தில் இவ்வளவு இடங்களில் மின்தடையா?
Chennai Power Cut: அட கடவுளே... சென்னையில் நாளை (17.11.2026) ஒரே நேரத்தில் இவ்வளவு இடங்களில் மின்தடையா?
Weekly Horoscope: யாருக்கெல்லாம் வீண் செலவு, அலைச்சல்.. கஷ்டம் நீங்கி குஷியாக இருக்க என்ன செய்யணும்?
Weekly Horoscope: யாருக்கெல்லாம் வீண் செலவு, அலைச்சல்.. கஷ்டம் நீங்கி குஷியாக இருக்க என்ன செய்யணும்?
CM Vijay: முதலமைச்சருக்கு அரோகரா.. சூரசம்ஹாரத்தில் எல்லை மீறிய வர்ணணையாளர்! குவியும் கண்டனங்கள்
CM Vijay: முதலமைச்சருக்கு அரோகரா.. சூரசம்ஹாரத்தில் எல்லை மீறிய வர்ணணையாளர்! குவியும் கண்டனங்கள்
Aadhav Arjuna: 14 வருட திருமண வாழ்க்கை ஓவர்..! விவாகரத்து அறிவித்த ஆதவ் அர்ஜுனா மனைவி டெய்சி மார்டின்
14 வருட திருமண வாழ்க்கை ஓவர்..! விவாகரத்து அறிவித்த ஆதவ் அர்ஜுனா மனைவி டெய்சி மார்டின்
முருகனுக்கு இணையாக முதலமைச்சர் விஜயை புகழ்ந்து பாடிய பாடகர்கள் - ஆவேசமாக டிடிவி தினகரன் போட்ட பதிவு
முருகனுக்கு இணையாக முதலமைச்சர் விஜயை புகழ்ந்து பாடிய பாடகர்கள் - ஆவேசமாக டிடிவி தினகரன் போட்ட பதிவு
Madurai Robbery: நகைக்கடை கொள்ளை; மீனாட்சியின் அம்மாவுக்கு இப்படி ஒரு ஃப்ளாஷ்பேக்கா? வைரலாகும் வீடியோக்கள்
Madurai Robbery: நகைக்கடை கொள்ளை; மீனாட்சியின் அம்மாவுக்கு இப்படி ஒரு ஃப்ளாஷ்பேக்கா? வைரலாகும் வீடியோக்கள்
49 ஆண்டுகளாகத் தனிமையில் பயணம்! 2590 கோடி கி.மீ. தொலைவில் வாயேஜர்-1:  விண்வெளியில் ஒலிக்கும் தமிழின் பெருமை
49 ஆண்டுகளாகத் தனிமையில் பயணம்! 2590 கோடி கி.மீ. தொலைவில் வாயேஜர்-1:  விண்வெளியில் ஒலிக்கும் தமிழின் பெருமை
Embed widget