மேலும் அறிய

Biggboss 7 Tamil: மிக்ஜாம் புயல் எதிரொலி! இந்த வாரம் எலிமினேஷன் இல்லை...பிக்பாஸ் எடுத்த அதிரடி முடிவு!

மிக்ஜாம் புயலால் பெரும்பான்மையான மக்கள் வாக்களிக்க இயலாததால், இந்த வார எலிமினேஷன் ரத்து செய்யப்படுகிறது என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பிக்பாஸ் சீசன் 7

சின்னத்திரையில் ரசிகர்களின் மனம் கவர்ந்த நிகழ்ச்சிகளில் ஒன்று விஜய் தொலைக்காட்சியில் பிக்பாஸ் நிகழ்ச்சி. இதன் 7வது சீசன்  கடந்த அக்டோபர் 1 ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகி வருகிறது. தற்போது 65 நாள்களைக் கடந்து பிக்பாஸ் நிகழ்ச்சி சென்று கொண்டிருக்கிறது.மொத்தம் 23 போட்டியாளர்கள் பங்கேற்ற இந்நிகழ்ச்சியில் தற்போது, விஷ்ணு விஜய், விசித்ரா, விஜே அர்ச்சனா, சரவண விக்ரம், தினேஷ், மணி சந்திரா, ரவீணா, மாயா கிருஷ்ணன், பூர்ணிமா, கூல் சுரேஷ், நிக்சன், விஜய் வர்மா, அனன்யா ராவ் ஆகியோர் இருக்கின்றனர்.  நீண்ட நாள் ஆசைக்குப் பிறகு ஒரு வழியாக இந்த வாரம் விஷ்ணு கேப்டனாகியுள்ள நிலையில், தன் முன்கோபத்தைக் கட்டுப்படுத்தி விஷ்ணு கேப்டன்சி செய்வாரா என சக போட்டியாளர்கள் எதிர்பார்த்துக் காத்துள்ளனர்.

நோ எவிக்ஷன்:

View this post on Instagram
 
A post shared by Vijay Television (@vijaytelevision)

அதே போல, இந்த வாரம் நாமினேஷன் லிஸ்டில் நிக்சன், அர்ச்சணா, விசித்ரா, மணி, தினேஷ் ஆகியோர் உள்ள நிலையில், இந்த வாரம் எலிமினேஷன் இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, மிக்ஜாம் புயல் காரணமாக இந்த பெரும்பான்மையான மக்கள் வாக்களிக்க இயலாததால், இந்த வார எலிமினேஷன் ரத்து செய்யப்படுகிறது என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இந்த வாரம் எலிமினேஷனில் இருந்து 5 பேருக்கு எஸ்கேப் ஆகியுள்ளனர்.  இந்த வாரம் எலிமினேஷன் இல்லாததால் அடுத்த வாரம் டபுள் எவிக்ஷன் இருக்க வாய்ப்புள்ளது என்று சொல்லப்படுகிறது.

 புரட்டி போட்ட மிக்ஜாம் புயல்:

மிக்ஜாம் புயல் நேற்று முன் தினம் வட கடலோர தமிழகத்தில் கடுமையான சேதாரத்தை ஏற்படுத்தியது. குறிப்பாக சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்கள் மிக்ஜாம் புயலால் கடும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது. கடந்த 47 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கனமழை பெய்து இருக்கிறது. நேற்று முன்தினம் பெய்த கனமழையால் சென்னை மாநகரமே முடங்கியுள்ளது.  தற்போது சென்னையில் மழை இல்லாத சூழலில், தண்ணீர் சில இடங்களில் வடிந்துள்ளது. ஆனால், பல்வேறு பகுதிகளில் தண்ணீர் வடியாமல் தேங்கி நிற்கிறது. பலரும் தங்கள் குடியிருப்புகளை இழந்து தவித்து வருகின்றனர். உண்ண உணவின்றி, இருக்க இடமின்றி தண்ணீரில் தத்தளித்து வருகின்றனர். 

இதனால் மாநகராட்சி பணியாளர்கள், தீயணைப்பு வீரர்கள், மாநில பேரிடர் மீட்புப் படை, இந்திய விமானப்படை, கடலோர காவல் படை, தேசிய பேரிடர் மீட்பு படையைச் சேர்ந்தவர்கள் மீட்புப் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். படகுகளை வாடகைக்கு எடுத்தது மட்டுமின்றி, மீனவர்களின் படகுகளும் மீட்பு பணிக்காக பயன்படுத்தப்பட்டுள்ளன.  இது ஒரு பக்கமிருக்க வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் ஹெலிகாப்டர் மூலம் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. 4 ஹெலிகாப்டர்கள் மூலம் 16 இடங்களில் இதுவரை 950 கிலோ உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மிக்ஜாம் புயல் காரணமாக இதுவரை 17 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தலைப்பு செய்திகள்

TASMAC Liquor Ban: குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
Thangami vs EPS : எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
Viswanath & Sons Review: விஸ்வநாத் அண்ட் சன்ஸ் விமர்சனம்... சூர்யாவின் படம் வெற்றியா? தோல்வியா?
விஸ்வநாத் அண்ட் சன்ஸ் விமர்சனம்... சூர்யாவின் படம் வெற்றியா? தோல்வியா?
பல் விளக்கிட்டே கதை கேட்ட பிரபல தயாரிப்பாளர்.. அசராமல் கதை சொன்ன ப்ளாக்பஸ்டர் பட இயக்குனர்கள்! யாருப்பா அது?
பல் விளக்கிட்டே கதை கேட்ட பிரபல தயாரிப்பாளர்.. அசராமல் கதை சொன்ன ப்ளாக்பஸ்டர் பட இயக்குனர்கள்! யாருப்பா அது?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TASMAC Liquor Ban: குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
Thangami vs EPS : எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
Viswanath & Sons Review: விஸ்வநாத் அண்ட் சன்ஸ் விமர்சனம்... சூர்யாவின் படம் வெற்றியா? தோல்வியா?
விஸ்வநாத் அண்ட் சன்ஸ் விமர்சனம்... சூர்யாவின் படம் வெற்றியா? தோல்வியா?
பல் விளக்கிட்டே கதை கேட்ட பிரபல தயாரிப்பாளர்.. அசராமல் கதை சொன்ன ப்ளாக்பஸ்டர் பட இயக்குனர்கள்! யாருப்பா அது?
பல் விளக்கிட்டே கதை கேட்ட பிரபல தயாரிப்பாளர்.. அசராமல் கதை சொன்ன ப்ளாக்பஸ்டர் பட இயக்குனர்கள்! யாருப்பா அது?
TN Govt: ”உங்களுக்கு என்ன பிரச்னை” கரூர் அரசுப்பணி விவகாரம் - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு - விஜய் ஹாப்பி
”உங்களுக்கு என்ன பிரச்னை” கரூர் அரசுப்பணி விவகாரம் - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு - விஜய் ஹாப்பி
கேரளாவா, ஜப்பானா? மின்னும் தரை.. முகமே பார்க்கலாம்! வியக்கவைத்த காசர்கோடு- வைரல் வீடியோ
கேரளாவா, ஜப்பானா? மின்னும் தரை.. முகமே பார்க்கலாம்! வியக்கவைத்த காசர்கோடு- வைரல் வீடியோ
Upcoming Hybrid SUVs: அடேங்கப்பா.! 1000 கிமீ வரை மைலேஜா.?! இந்தியாவில் வரவிருக்கும் 4 புதிய ஹைப்ரிட் எஸ்யூவி-க்கள்; முழு விவரம்
அடேங்கப்பா.! 1000 கிமீ வரை மைலேஜா.?! இந்தியாவில் வரவிருக்கும் 4 புதிய ஹைப்ரிட் எஸ்யூவி-க்கள்; முழு விவரம்
IND vs SL: இந்தியாவை சமாளிக்குமா இலங்கை? காலேவில் நாளை தொடங்குது முதல் டெஸ்ட்! வெற்றி யாருக்கு?
IND vs SL: இந்தியாவை சமாளிக்குமா இலங்கை? காலேவில் நாளை தொடங்குது முதல் டெஸ்ட்! வெற்றி யாருக்கு?
Embed widget