இமானும்-ராஜூவும் திருமணம் செய்யப் போகிறார்களா? பாவனிக்கு வெளியில் இருந்து மதுமிதா ஆதரவு!
‘அபினய்யும் பாவனியும் காதலிக்கிறார்கள் என்றால் அண்ணாச்சியும் ராஜூவும்தான் அடிக்கடி நிறையப் பேசிக்கொள்கிறார்கள் அவர்கள் அப்போது திருமணம் செய்துகொள்ளப்போகிறார்களா?
பிக்பாஸ் ரியாலிட்டி ஷோ என்றாலே அதில் காதல் கிசுகிசுக்களுக்குப் பஞ்சமிருக்காது. ஓவியா- ஆரவ் பற்றிய கிசுகிசுவில் தொடங்கியது மகத்-யாஷிகா எனத் தொடர்ந்தது. தற்போது சீசன் 5ல் போட்டியாளர்கள் பாவனி மற்றும் அபினையை வைத்து கிசுகிசு எழுந்துள்ளது. பிக்பாஸ் குறித்த அண்மைய ப்ரோமோவில் போட்டியாளர்கள் ராஜூ மற்றும் சிபியுடன் போட்டியாளர் பாவனி வாக்குவாதத்தில் தீவிரமாக ஈடுபடுவது ஓளிபரப்பாகியுள்ளது.
View this post on Instagram
கடந்த நிகழ்ச்சியில் ராஜூ அபினய்யிடம் ‘நீ பாவனியைக் காதலிக்கிறாயா?’ என நேரடியாகக் கேட்டதே இதற்குக் காரணம் எனக் கூறப்படுகிறது. பாவனி திருமணமாகிக் கணவனை இழந்தவர் மற்றும் அபினய் திருமணமாகி மனைவி மற்றும் குழந்தையுடன் வாழ்ந்து வருபவர். இவர்களை இணைத்து ராஜூ பேசியது தற்போது பிக்பாஸ் வீட்டில் பிரச்னையாக உருவெடுத்துள்ளது.
#Day67 #Promo3 of #BiggBossTamil #பிக்பாஸ் - திங்கள் முதல் வெள்ளி இரவு 10 மணிக்கு, சனி மற்றும் ஞாயிறு இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason5 #BiggBossTamil5 #பிக்பாஸ் #nipponpaintindia #PreethiPowerDuo #VijayTelevision pic.twitter.com/ZMnOLdnQDQ
— Vijay Television (@vijaytelevision) December 9, 2021
View this post on Instagram
இதற்கிடையே இந்த ப்ரோமோவில் பதில் அளித்துள்ள போட்டியிலிருந்து வெளியேற்றப்பட்ட மதுமிதா, ‘அபினய்யும் பாவனியும் காதலிக்கிறார்கள் என்றால் அண்ணாச்சியும் ராஜூவும்தான் அடிக்கடி நிறையப் பேசிக்கொள்கிறார்கள் அவர்கள் அப்போது திருமணம் செய்துகொள்ளப்போகிறார்களா? எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஐம்பதாவது நாளைக் கடந்து ஓடிக்கொண்டிருக்கும் பிக்பாஸ் சீசன் 5 இதனால் பரபரப்பாகியுள்ளது.