மேலும் அறிய

Biggboss 5 | இன்னா பிரச்சின உனக்கு...? வம்பிழுக்கும் அபிஷேக்கிடம் எகிறும் இசைவாணி

பிக்பாஸ் சீசன் 5ன் மூன்றாவது புரோமோ வெளியாகியிருக்கிறது

பிக்பாஸ் சீசன் 5ன் மூன்றாவது புரோமோ வெளியாகியிருக்கிறது. அதில் ஒவ்வொருவரின் பெயருக்கும் முன்னால் அடைமொழி வைக்கலாமா என ஆரம்பிக்கிறார் அபிஷேக். அனாமத்து அண்ணாச்சி, பாவம் பாவனி, நெருப்பு நிரூப், அசால்ட்டு அக்‌ஷரா, தலைவி தாமரை, வவ்வால் வருண், இம்சை இசை என ஒவ்வொருவருக்கும் அடைமொழியோடு பெயர் சூட்டுகிறார்.

எல்லாருக்கும் பாசிடிவ் பெயர்கள் கொடுத்த நிலையில் இசைவாணியை மட்டும் நெகட்டிவ் முறையில் பொருள்படுகிற பெயரை சூட்டியது இசைவாணியை சூடாக்கியது... என்ன பாத்தா மட்டும் இன்னா உனக்கு என அழகான சென்னை தமிழோடு அபிஷேக்கிடம் கேள்வி கேட்கிறார் அவர். ஏற்கெனவே நேற்றைய எபிசோடில் மதுமிதாவிடம் பேசிக்கொண்டிருந்த இசைவாணி என்னை ஏன் எல்லாரும் ஒதுக்கறாங்கனே புரியல என தெரிவித்து ஆதங்கப்பட்டார். அதனை நிரூபிக்கும் வகையில் எல்லாருக்கும் பாசிடிவ் பெயர் கொடுத்த அபிஷேக், இசைவாணிக்கு இம்சை என பெயரிட்டுள்ளார். 

சரி.. அபிஷேக் எல்லாருக்கும் பெயர் வைக்கிறாரே நாமும் அவருக்கு பெயர் வைப்போம் என நினைத்த பிக்பாஸ் ஆடியன்ஸ் கமெண்டுகளில் அலட்டல் அபிஷேக் என அடைமொழியைக் கொடுத்து கலாய்த்து வருகிறார்கள்.

முன்னதாக ஒன்பதாவது நாளுக்கான இரண்டாவது ப்ரோமோ வெளியானது. இதில், ப்ரியங்கா, நிரூப், அபிஷேக் கேங் மீட்டில் பேசிக் கொள்வது போல ப்ரோமோ வெளியாகியுள்ளது. ப்ரியங்கா, நிரூப், அபிஷேக் ஆகியோர் கார்டன் ஏரியாவில் உட்கார்ந்து கொண்டு பேசி வருகின்றனர். அப்போது ப்ரியங்கா, “நம்ம கேங் ஃபார்ம் பண்ணனும்னு ஃபார்ம் பண்ணல” என சொல்கிறார். அதற்கு கவுண்டர் கொடுத்த அபிஷேக், “இந்த ட்ரியோலாம் இன்னும் கொஞ்ச நாள்தான். மூனு பேர் சீக்கிரம் டபுள் டக்கர் ஆக மாறிடும்” என சொன்னவுடன் நிரூப் நடுவில் புகுந்து, “ஏன்னா, அதுக்குள்ள நீ கிளம்பிடுவே” என சொல்ல சிரிப்புகளை அலறவிடுகின்றனர் ப்ரியங்காவும், நிரூப்பும். கவுண்டருக்கு பதில் தர முடியாமல் சோகமாய் பார்த்து கொண்டிருக்கிறார் அபிஷேக். கேங், நாமினேஷன், மீட்-அப் என பிக் பாஸ் வீட்டிற்குள் சண்டைகள் வருவதற்கான அனைத்து அறிகுறிகளும் தென்பட தொடங்கியுள்ளது. இதனால், இன்றைய எபிசோடில் பல எதிர்ப்பாராத சம்பவங்கள் இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

  ஒன்பதாவது நாளுக்கான முதல் ப்ரோமோ வெளியானது. யூட்யூப் சேனலில் ரிவ்யூ சொல்லி வந்த அபிஷேக், இன்று முதல் பிக் பாஸ் வீட்டு போட்டியாளர்கள் பற்றிய ரிவ்யூவை தர தொடங்கியுள்ளார். ஒவ்வொரு போட்டியாளர் பற்றியும், தன்னுடைய கருத்துகளை தெறிக்கவிடும் அபிஷேக்கிற்கு கை கொடுத்து ‘தம்ப்ஸ் அப்’ காட்டுகிறார் இமான் அண்ணாச்சி. ப்ரோமோவில் பேசி கொண்டிருக்கும் அபிஷேக், “நடியா சங், வணிதா விஜயகுமார் போல வெளிப்படைத்தன்மையாக இருப்பவர், ஐக்கி பெர்ரியோடு யாராலும் நட்பு பாராட்ட முடியவில்லை, நிரூப் ஒரு விநோத பிறவி, பாவனி நாமினேஷனில் இடம் பெறாததற்கு அவருடைய கதை ஒரு முக்கிய காரணம், மக்களின் பார்வையில் இசை வாணிக்கு நிறைய சோகம் உண்டு. ஆனால், அதை அடிக்கடி வெளியே சொல்லிவிடுகிறார்” என பிக் பாக் போட்டியாளர்களை பற்றி தன்னுடைய கருத்துகளை தெரிவித்து வருகிறார். அபிஷேக் பேசுவதை பார்த்தால், பிக் பாஸ் வீடு பழைய பிக் பாஸ் வீடாக உருமாறி வருகின்றது என்பது தெளிவாக தெரிகிறது. 

தலைப்பு செய்திகள்

TN Governor Rajendra Arlekar: தமிழகத்திற்கு முழு நேர ஆளுநராக அர்லேகர் நியமனம்.. யார் இவர்?
TN Governor Rajendra Arlekar: தமிழகத்திற்கு முழு நேர ஆளுநராக அர்லேகர் நியமனம்.. யார் இவர்?
CM Vijay: கோவை செல்லும் முதல்வர் விஜய்.. பயணத் திட்டம் விவரம் இதோ!
CM Vijay: கோவை செல்லும் முதல்வர் விஜய்.. பயணத் திட்டம் விவரம் இதோ!
DMK: தவெக போடும் பிஸ்கட்டுக்காக திமுகவை விமர்சிக்க வேண்டாம்! ரஜினி ஸ்டைலில் மாணிக்கம் தாகூருக்கு பதிலடி!
DMK: தவெக போடும் பிஸ்கட்டுக்காக திமுகவை விமர்சிக்க வேண்டாம்! ரஜினி ஸ்டைலில் மாணிக்கம் தாகூருக்கு பதிலடி!
EPS-க்கு எதிராக ரகசிய மீட்டிங்..! அதிமுக-வில் விரைவில் வெடிக்கப்போகும் பூகம்பம்!
EPS-க்கு எதிராக ரகசிய மீட்டிங்..! அதிமுக-வில் விரைவில் வெடிக்கப்போகும் பூகம்பம்!

வீடியோ

Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!
அன்று இந்தியாவுக்கு நெருக்கடி இன்று ரஷ்யாவுடன் டீல் அந்தர் பல்டி அடித்த ட்ரம்ப்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Governor Rajendra Arlekar: தமிழகத்திற்கு முழு நேர ஆளுநராக அர்லேகர் நியமனம்.. யார் இவர்?
TN Governor Rajendra Arlekar: தமிழகத்திற்கு முழு நேர ஆளுநராக அர்லேகர் நியமனம்.. யார் இவர்?
CM Vijay: கோவை செல்லும் முதல்வர் விஜய்.. பயணத் திட்டம் விவரம் இதோ!
CM Vijay: கோவை செல்லும் முதல்வர் விஜய்.. பயணத் திட்டம் விவரம் இதோ!
DMK: தவெக போடும் பிஸ்கட்டுக்காக திமுகவை விமர்சிக்க வேண்டாம்! ரஜினி ஸ்டைலில் மாணிக்கம் தாகூருக்கு பதிலடி!
DMK: தவெக போடும் பிஸ்கட்டுக்காக திமுகவை விமர்சிக்க வேண்டாம்! ரஜினி ஸ்டைலில் மாணிக்கம் தாகூருக்கு பதிலடி!
EPS-க்கு எதிராக ரகசிய மீட்டிங்..! அதிமுக-வில் விரைவில் வெடிக்கப்போகும் பூகம்பம்!
EPS-க்கு எதிராக ரகசிய மீட்டிங்..! அதிமுக-வில் விரைவில் வெடிக்கப்போகும் பூகம்பம்!
Holiday: தொடர்ந்து 4 நாட்கள் பள்ளிகள் விடுமுறை... குஷியில் மாணவர்கள், அரசு ஊழியர்கள்!
Holiday: தொடர்ந்து 4 நாட்கள் பள்ளிகள் விடுமுறை... குஷியில் மாணவர்கள், அரசு ஊழியர்கள்!
ரூபாய் 3.5 லட்சம்தான் பட்ஜெட்.. வாகன ஓட்டிகளின் ட்ரீம் பைக் Harley-Davidson X440 T..! சிறப்புகள் இத்தனையா?
ரூபாய் 3.5 லட்சம்தான் பட்ஜெட்.. வாகன ஓட்டிகளின் ட்ரீம் பைக் Harley-Davidson X440 T..! சிறப்புகள் இத்தனையா?
விருதுநகர் கல்லூரி மாணவர்களுக்கு நேரடி பேருந்து சேவை: அமைச்சர் கீர்த்தனா தொடங்கி வைத்தார்!
விருதுநகர் கல்லூரி மாணவர்களுக்கு நேரடி பேருந்து சேவை: அமைச்சர் கீர்த்தனா தொடங்கி வைத்தார்!
Gold Rate: தங்கம் வாங்க இதுதான் சரியான நேரம்.! மாலை நேரத்தில் இன்ப அதிர்ச்சி கொடுத்த விலை!
Gold Rate: தங்கம் வாங்க இதுதான் சரியான நேரம்.! மாலை நேரத்தில் இன்ப அதிர்ச்சி கொடுத்த விலை!
Embed widget