Bigg Boss 5 Tamil Finalist: யார் அந்த 5 இறுதிப் போட்டியாளர்கள்..? சீசன் 5 சிங்கங்கள் விவரம்...
Bigg Boss 5 Tamil Final Contestants: கடந்த 2 வாரம் முன்பு நடைபெற்ற ‘Ticket to Finale’ டாஸ்க்கில் வெற்றி பெற்று அமீர் முதல் போட்டியாளராக இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் இதுவரை நாடியா, அபிஷேக், சின்னப்பொண்ணு, ஸ்ருதி, மதுமிதா, இசைவாணி, ஐக்கி பெர்ரியை, அபிஷேக், இமான், அபினய், அக்ஷரா, வருண், சஞ்சீவ், இறுதியாக தாமரை என மக்களின் ஓட்டு எண்ணிக்கை மூலம் எலிமினேட் செய்யப்பட்டனர்.
கடந்த 2 வாரம் முன்பு நடைபெற்ற ‘Ticket to Finale’ டாஸ்க்கில் வெற்றி பெற்று அமீர் முதல் போட்டியாளராக இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். பிக் பாஸ் தமிழ் சீசன் 5-ல் தற்போது 102 நாட்கள் நிறைவடைந்த நிலையில், மீதம் இருந்த போட்டியாளர்களில், சிபி 12 லட்சம் ரூபாயை எடுத்துக்கொண்டு பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார்.
பிக் பாஸ் 5 தமிழ் நிகழ்ச்சி ஒரு முக்கிய கட்டமான இறுதிக்கட்டத்தை நோக்கிச் செல்கிறது. ஏற்கனவே, ஆறு போட்டியாளர்கள் இருந்த நிலையில், தாமரை வெளியேற்றத்திற்கு பிறகு, இறுதி போட்டியாளர்கள் பட்டியல் உறுதியானது. அமீர் முதல் போட்டியாளராக இறுதி போட்டிக்குள் நுழைந்ததை தொடர்ந்து, தற்போது மீதமுள்ள நான்கு பேர் இறுதிப் போட்டியாளர்களாக இறுதிப் போட்டியில் நுழைந்துள்ளனர்.
One of the best, trustworthy and energetic contestant till date is one and only #Thamaraiselvi. Hats off Amma for your future goals and ambitions. #BiggBossTamilSeason5 #BiggBoss5tamil https://t.co/TMpEbLG3cM pic.twitter.com/kP3V944Fcj
— Immanuel Rudhrakshan S (@IMMANUEL_0333) January 9, 2022
பிக் பாஸ் 5 தமிழ் இறுதிப் போட்டியாளர்கள் :
- அமீர்
- ராஜு
- பிரியங்கா
- நிருப்
- பாவனி
மேலும், ராஜு பிக் பாஸ் 5 தமிழ் டைட்டில் வெற்றியாளராக இருக்கலாம் என்றும், இரண்டாவது இடத்தை பிரியங்கா பிடிக்கலாம் என்றும் கருத்து கணிப்பில் தெரிகிறது. அதேபோல், 3 மற்றும் நான்காம் இடம் முறையே அமீர், பாவனிக்கு கிடைக்க அதிக வாய்ப்புள்ளது.
ராஜு வெற்றிபெற வேண்டும் என்று அவரது ஆர்மி இணையத்தில் லைக்ஸ்களை பறக்கவிட்டு வரும் புகைப்படமும் இணையத்தை கலக்கி வருகிறது.
Oore thunai irukku..🔥🔥
— Real Bigg Boss (@BiggBoss5Tamil) January 12, 2022
Vote for #Raju and make the deserving winner lift the #BiggBossTamil5 title..❤️❤️#BiggBossTamil #RajuWinningHearts pic.twitter.com/AYsyl3G1TB
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்