யாஷிகா வெளியிட்ட போட்டோ... ‛சைஸ்’ கேட்ட பெண் ரசிகை... பொங்கி எழுந்த மற்றொரு ரசிகை!
Yashika Anand: ஒரு பெண்ணே, இன்னொரு பெண்ணை இப்படி கேட்பதை பார்த்த மற்றொரு பெண் ரசிகையான தன்யா என்பவர்...
பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் யாஷிகா ஆனந்த். இளம் வயதில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நுழைந்த அவர், அதன் பின் சில சினிமாக்களிலும் நடித்து வந்தார். கவர்ச்சி மற்றும் இரட்டை வசனம் கொண்ட படங்களில் அவர் நடித்ததால், கவர்ச்சி நாயகியாகவே யாஷிகா அறியப்படுகிறார்.
இந்நிலையில், தன் தோழி உடன் புதுச்சேரிக்கு பார்ட்டிக்குச் சென்ற யாஷிகாவின் கார் விபத்திற்கு உள்ளானது. அதில், யாஷிகாவின் தோழி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயம் அடைந்த யாஷிகா, தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு, நீண்ட நாள் சிகிச்சைக்குப் பின் குணமடைந்தார்.
குணமடைந்தும், கால்களில் அளிக்கப்பட்ட சிகிச்சை காரணமாக நடக்க முடியாமல் சிரமப்பட்டார். பின்னர் ஒரு வழியாக எல்லாம் சரியாக, பழைய நிலைக்கு திரும்பினார் யாஷிகா. டிசைன், டிசைனான போட்டோக்களை வெளியிட்டு வழக்கம் போல தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தை மெருகேற்றத் தொடங்கினார். முதலில் சாதாரணமாக இருந்த பதிவுகள், பின்னர் கவர்ச்சியின் உச்சத்திற்குச் சென்றது.
View this post on Instagram
இதன் மூலம் இழந்த அல்லது மறந்த தனது மார்க்கெட்டை மீண்டும் தக்க வைக்க யாஷிகா தீவிரமாக செயல்படுகிறார் என்பது மட்டும் தெளிவாக புரிந்தது. இதெல்லாம் போதாதென, மற்றொரு பிக்பாஸ் பிரபலமான நிரூப் நந்தக்குமாருடன் காதலில் இருப்பதும் டிவி நிகழ்ச்சி மூலம் வெளிச்சத்திற்கு வந்தது. காதல் ஒரு பக்கம், சினிமா ஒரு பக்கம், இன்ஸ்டா பதிவுகள் மறு பக்கம் என , யாஷிகா இப்போது பிஸி.
இந்த நிலையில், வழக்கம் போல, வழக்கத்தை விட கூடுதல் கிளாமருடன் யாஷிகா ஒரு போட்டோவை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டார். படுகவர்ச்சியான அந்த போட்டாவை பலரும் ரசித்துக் கொண்டிருக்க, சுமித்ர என்கிற பெண் ரசிகை, ‛என் சைஸ் என்று யூகிக்க முடிகிறதா’ என்று, யாஷிகா மார்பகத்தை சுட்டிக்காட்டி ரிப்ளை செய்திருந்தார். ஒரு பெண்ணே, இன்னொரு பெண்ணை இப்படி கேட்பதை பார்த்த மற்றொரு பெண் ரசிகையான தன்யா என்பவர், ‛உன்னுடைய சைஸ், 38 தான் அவளுக்கும்’ என்று, பதிலளிக்க, யாஷிகா பக்கம், பத்தி எரிய ஆரம்பித்தது.
View this post on Instagram
பிறகென்ன, ‛அடுச்சுக்காட்டுங்க’ என்பது போல, ஒரே வார்த்தைப் போர் போய்க் கொண்டிருக்கிறது. இதற்கு பெயர் தான், ‛ஹாட்’ போட்டோவா என்று நக்கலடிப்பவர்களும் ஒதுங்கி நின்று ரசித்துக் கொண்டு தான் இருக்கின்றனர்.