மேலும் அறிய

Bigg Boss 7 Tamil: பிரதீப்பை தூக்கி அடித்த விஜய்! ரெட் கார்டுடன் எலிமினேட்? போட்டியாளர்களுக்கு ஷாக் கொடுப்பாரா கமல்?

இந்த வாரம் விஜய்க்கு ரெட் கார்டு கொடுத்து அவரை வெளியேற்ற வேண்டும் என ரசிகர்கள் பிக்பாஸிடம் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

Bigg Boss 7 Tamil:  பிக்பாஸ் சீசன் 7 இன் இன்றைய ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதில், போட்டியாளர்கள் புத்தி, சக்தியை வைத்து விளையாடினார்கள் என்றும், அதில் யாருக்கு சாதகம், யாருக்கு பாதகமாக அமைய போகிறது என்பதை பார்க்கலாம் என கமல்ஹாசன் கூறியுள்ளார். அதேநேரம் இந்த வார எலிமினேட் செய்யும் நபராக விஜய் இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

யாருக்கு சாதகம்? யாருக்கு பாதகம்?

கடந்த 1ம் தேதியில் இருந்து கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியின் புரோமோ வெளியாகியுள்ளது. முதல் புரோமோவில் பேசியுள்ள கமல்ஹாசன், ”இந்த வாரம் முழுவதும் புத்தியை வைத்து ஒரு விளையாட்டு விளையாடினார்கள். சக்தியை வைத்து ஒரு விளையட்டு விளையாடினார்கள். ரொம்ப அக்ரஸ்சிவாக இருந்தது. புத்தியை வைத்து விளையாடியவர்களுக்கு என்ன பலன், சக்தியை வைத்து விளையாடியவர்களுக்கு என்ன பலன். யாருக்கு சாதகமாக அமையப் போகிறது. யாருக்கு இது பாதகமாக அமையப்போகிறது என்பதை பார்க்கலாம் “ என கூறியுள்ளார். 

நேற்று போட்டியாளர்களுக்கு ஆக்ஸிஜன் சிலிண்டர் டாஸ்க் வைக்கப்பட்டது. அதில், ஆக்சிஜன் சிலிண்டரை கைப்பற்ற ஒவ்வொரு போட்டியாளரும் முயன்றது கிட்டதட்ட மல்யுத்த போட்டியை போல இருந்தது. விக்ரம், ரவீனாவின் கால்களைப் பிடித்துக்கொண்டு அவரை நகரவிடாமல் தடுத்தார். இன்னொருபக்கம் விஜய் விஷ்ணுவை நகரவிடாமல் தடுக்க,  நிக்ஸன் மற்றும் மணி ஆகியோர் ஸ்மால் பாஸ் வீட்டிலிருந்தவர்களின் கைகளிலிருந்து ஆக்ஸிஜன் பாட்டில்களை எடுத்துச்செல்வதில் கவனத்தை செலுத்தினர்.

விஜய் ரெட் கார்டு:

அப்போது நிக்ஸன் எடுத்துவந்த ஆக்சிஜன் பாட்டில்களை எடுத்து வரும்போது, மூடியிருக்கும் கண்ணாடி கதவில் மோதியதால்,  கண்ணாடி நொறுங்கி விழுந்தது. அதனால் பிரதீப்பும், நிக்ஸனும் சிறுகாயம் அடைந்தனர். அடுத்த ரவுண்டில், விஜய்க்கும் பிரதீப்பிற்கும் பலத்த போட்டி ஏற்பட்டதில் இருவரும், ஒருவருக்கு ஒருவர் ஆக்ரோஷமாக மோதிக்கொண்டனர். இதில் விஜய் ஒருபடி மேலே போய் பிரதீப்பை தூக்கி தரையில் அடித்தார்.

இதன் காரணமாக இந்த வாரம் விஜய்க்கு ரெட் கார்டு கொடுத்து அவரை வெளியேற்ற வேண்டும் என ரசிகர்கள் கமெண்ட் கூறி வருகின்றனர். ஏற்கெனவே என்மீது கை வைத்தால் வெளியே உள்ள ஆட்கள் வகுந்து விடுவார்கள் என போட்டியாளர்களிடம் வன்முறையாக பேசிய விஜய் மஞ்சள் கார்டு வாங்கி இருந்தார். இந்த நிலையில் இந்தவார டாஸ்கில் பிரதீப்பை விஜய் தாக்கி இருப்பதாலும், அவருக்கு குறைந்த வாக்குகள் கிடைத்தாலும் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. 

அதேநேரம் இன்று வெளியான இரண்டாவது புரோமோவில், ஆக்சிஜன் பாட்டிலை யுகேந்திரன் தராமல் இருந்தது குறித்து கமல்ஹாசனிடம் சக போட்டியளர்கள் குற்றம்சாட்டினர். மூன்றாவது புரோமோவில், விசித்ரா தனது வளர்ச்சிக்கு தடை என்று பிரதீப்பும், பிரதீப் தனது வளர்ச்சிக்கு தடை என்றும் கூறி ப்ளாக் ஸ்டோன் கொடுத்துள்ளனர். அதேபோல், கூல் சுரேஷ், ரவீனா ஆகியோர் தங்களுக்கு தடையாக மாயா இருப்பதாக கூறி பிளாக் ஸ்டோன் கொடுத்துள்ளனர். 

 

தலைப்பு செய்திகள்

அருள்நிதியின் அருள்வன் பட பத்திரிகையாளர் சந்திப்பு
அருள்நிதியின் அருள்வன் பட பத்திரிகையாளர் சந்திப்பு
நூறு சாமி திரைப்பட விமர்சனம்... மனதை உலுக்கும் கதையா ? விஜய் ஆண்டனி - சசியின் கூட்டணி வெற்றி பெற்றதா ?
நூறு சாமி திரைப்பட விமர்சனம்... மனதை உலுக்கும் கதையா ? விஜய் ஆண்டனி - சசியின் கூட்டணி வெற்றி பெற்றதா ?
ஆகாஷின் பையோபிக் தான் இந்த படம்..இதயம் முரளி படம் குறித்து இயக்குநர் அட்லீ
ஆகாஷின் பையோபிக் தான் இந்த படம்..இதயம் முரளி படம் குறித்து இயக்குநர் அட்லீ
பிரம்மாண்ட பட்ஜெட்டில் 'குற்றப் பரம்பரை'...பாரதிராஜா கனவு படத்தை இயக்கும் சசிகுமார்
பிரம்மாண்ட பட்ஜெட்டில் 'குற்றப் பரம்பரை'...பாரதிராஜா கனவு படத்தை இயக்கும் சசிகுமார்

வீடியோ

12 year girl death|சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை!சாக்கு மூட்டையில் சடலம்!கொடூரனை அடித்தே கொன்ற மக்கள்
Keerthana | ”ENGLISH-ல பேசுங்க” திகைத்து நின்ற மாணவி! பள்ளியில் கீர்த்தனா!எல்லை மீறும் ரீல்ஸ் மோகம்?
Tiruppur Crime News : 4 மாத கர்ப்பிணி.. மனைவியை கொன்ற கணவன்... திருப்பூரை உலுக்கிய கொடூரம்
Theni Theft Murder : பாட்டி கொலையில் மர்மம்.. நாடகமாடிய பேரன், பேத்தி! போலீஸ் அதிரடி கைது!
Trichy VAO: போதையில் சட்டையின்றி தூக்கம்.. அலுவலகத்தில் சிக்கிய VAO! வைரலாகும் வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather Update: தமிழ்நாட்டின் எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? - வானிலை அறிக்கை
தமிழ்நாட்டின் எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? - வானிலை அறிக்கை
"என் மீது பொய்யான கதைகள்..' சிவகாசி பள்ளிக்கு ஆய்வுக்குச் சென்றது ஏன்? அமைச்சர் கீர்த்தனா கேள்வி
CM Vijay Letter to PM: அந்தியோதயா அன்ன யோஜனா திட்டம்; தமிழ்நாடு நலனுக்குகந்த நடவடிக்கை தேவை; பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்
அந்தியோதயா அன்ன யோஜனா திட்டம்; தமிழ்நாடு நலனுக்குகந்த நடவடிக்கை தேவை; பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்
“திமுகவில் சேரச் சொல்லி ரூ.50 கோடிக்கு மேல் பேரம் பேசினார்கள்''; ஸ்ரீவைகுண்டம் தவெக MLA புகாரால் பரபரப்பு
“திமுகவில் சேரச் சொல்லி ரூ.50 கோடிக்கு மேல் பேரம் பேசினார்கள்''; ஸ்ரீவைகுண்டம் தவெக MLA புகாரால் பரபரப்பு
Yamaha R2 Price Features: KTM, Hero-க்கு சவால்.! செம ஸ்டைலான R2 பைக்கை களமிறக்கும் Yamaha; சக்தி, அம்சங்கள், விலை என்ன.?
KTM, Hero-க்கு சவால்.! செம ஸ்டைலான R2 பைக்கை களமிறக்கும் Yamaha; சக்தி, அம்சங்கள், விலை என்ன.?
செந்தில் பாலாஜி தலைமறைவு.. ஆட்சி கவிழ்ப்பு புகார்! வாயைத் திறக்காத மு.க.ஸ்டாலின், உதயநிதி!
செந்தில் பாலாஜி தலைமறைவு.. ஆட்சி கவிழ்ப்பு புகார்! வாயைத் திறக்காத மு.க.ஸ்டாலின், உதயநிதி!
Hero Xoom 110: சிட்டில ஓட்ட கச்சிதமான ஸ்கூட்டர்; ஹீரோ ஜூம் 110 வாங்க பிளானா.? இந்த 6 முக்கிய விஷயங்கள தெரிஞ்சுக்கோங்க
சிட்டில ஓட்ட கச்சிதமான ஸ்கூட்டர்; ஹீரோ ஜூம் 110 வாங்க பிளானா.? இந்த 6 முக்கிய விஷயங்கள தெரிஞ்சுக்கோங்க
முரட்டு குறட்டை ஒலி, முட்டாள் சொதப்பும் ஒலி, திருட்டுத் தீட்டொலி.. திமுக-வின் முரசொலியை சரமாரியாக விமர்சித்த தவெக!
முரட்டு குறட்டை ஒலி, முட்டாள் சொதப்பும் ஒலி, திருட்டுத் தீட்டொலி.. திமுக-வின் முரசொலியை சரமாரியாக விமர்சித்த தவெக!
Embed widget