திருமணம் செய்துகொள்வதாக ஏமாற்றிய பிக்பாஸ் முத்துக்குமரன்..பெண் வெளியிட்ட அதிர்ச்சி வீடியோ
பிக்பாஸ் முத்துக்குமரன் தன்னை திருமணம் செய்துகொள்வதாக கூறி தன்னுடன் பாலியல் உறவில் ஈடுபட்டதாக இன்ஸ்டாகிராம் பிரபலம் குற்றசாட்டு வைத்துள்ளார்

வகிதா அக்தர் என்கிற இன்ஸ்டாகிராம் பிரபலம் ஒருவர் பிக்பாஸ் முத்துக்குமரன் மீது பாலியல் குற்றச்சாட்டை வைத்துள்ளார். ஏற்கனவே மன உளைச்சலில் இருந்த தன்னை தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று திருமணம் செய்துகொள்வதாக கூறி பாலியல் உறவில் இருந்ததாகவும் பின் தனக்கு திருமணம் செய்வதில் விருப்பமில்லை என்று முத்துக்குமரன் கூறியதாகவும் வகிதா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவை வெளியிட்டப் பின் வகிதா தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சரியான நேரத்தில் நண்பர்களின் உதவியால் வகிதா காப்பாற்றப்பட்டு தற்போது மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.
முத்துக்குமரன் ஜெகதீசன் சமூக வலைதளப் பிரபலம், யூடியூபர் மற்றும் பேச்சாளராக அறியப்பட்டவர். விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘தமிழ் பேச்சு எங்கள் மூச்சு’ நிகழ்ச்சியின் மூலம் கவனம் பெற்ற இவர், பின்னர் ‘பிக்பாஸ் தமிழ்’ சீசன் 8 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றார். 105 நாட்கள் நடைபெற்ற போட்டியில் தனது பேச்சுத் திறன் மற்றும் ஆட்டத்தின் மூலம் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்ற முத்துக்குமரன், இறுதியில் டைட்டிலை வென்று ரூ.40.5 லட்சம் பரிசுத் தொகையையும் பெற்றார்.
பாலியல் குற்றச்சாட்டு
இன்ஸ்டாகிராமில் சுமார் 1.4 மில்லியன் ஃபாலோவர்களை கொண்ட முத்துக்குமரன் பெண்கள் மத்தியில் அதிகம் பிரலமானவர் . முத்துக்குமரன் மீது மற்றொரு இன்ஸ்டாகிராம் பிரபலமான வகிதா பேகம் என்பவர் பாலியல் குற்றச்சாட்டு வைத்து வீடியோ வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவில் அவர் " நான் கடந்த சில மாதங்களாக பிரேக் அப்பில் மனமுடைந்து இருந்தேன். அப்போது சென்னை கத்திபாராவில் எதெச்சையாக முத்துக்குமரனை சந்தித்தேன். அப்போது அவர் ரொம்ப க்யூட்டாக சில விஷயங்களை செய்தார் . என்னை அவர் வீட்டிற்கு அழைத்துச் சென்று அன்பையும் முத்தங்களையும் பொழிந்தார் . நான் ஏற்கனவே திருமணமானவள் எனக்கு ஒரு குழந்தை இருப்பது தெரிந்தும் என்னை அடுத்த நாளே திருமணம் செய்துகொண்டார். என்னுடன் உடலுறவு வைத்துக்கொண்டார். அடுத்த நாள் காலை நான் என் வீட்டிற்கு கிளம்பிச் சென்றேன். மீண்டும் அவரிடம் திருமணம் பற்றி கேட்டபோது அவர் அதைப்பற்றி பேசுவதை தவிர்த்து வந்தார். பின் தனக்கு திருமணத்தில் விருப்பமில்லை என்று கூறினார். " என கூறியுள்ளார்.
இந்த வீடியோவை வெளியிட்டப்பின் வகிதா தற்கொலைக்கு முயன்றுள்ளார். அவரது நண்பர்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்து தற்போது வகிதா சிகிச்சைப் பெற்று வருகிறார். மேலும் முத்துக்குமரன் உடன் நெருக்கமாக இருக்கும் வீடியோ ஒன்றையும் வகிதா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதுகுறித்து முத்துக்குமரன் தரப்பில் இருந்து இதுவரை எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை.
View this post on Instagram
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்






















