மேலும் அறிய

Kaithi Hindi Teaser: வெளியானது ‘கைதி’ இந்தி ரீமேக் டீசர்..என்னடா பண்ணி வைச்சிருக்கீங்க.. கழுவி ஊற்றும் நெட்டிசன்ஸ்!

Bholaa Teaser: 2019ஆம் ஆண்டு தமிழில் வெளியாகி மாஸ் ஹிட் அடித்த கைதி திரைப்படம், தற்போது போலா என்ற பெயரில் ஹிந்தியில் ரீ-மேக் ஆகியுள்ளது.

தமிழ் திரையுலகில் அறிமுகமான சில ஆண்டுகளிலேயே, அதிக ரசிகர்களை கவர்ந்த இயக்குனர்களுள் முதலிடத்தில் இருப்பவர் லோகேஷ் கனகராஜ். மாநகரம் படத்தை முதலில் இயக்கி சினிமாவில் அறிமுகமான இவர், பெரிதும் அறியப்பட்டது கைதி படம் மூலமாகத்தான்.

மாஸ் காட்டிய கைதி

Kaithi Hindi Teaser: வெளியானது ‘கைதி’ இந்தி ரீமேக் டீசர்..என்னடா பண்ணி வைச்சிருக்கீங்க.. கழுவி ஊற்றும் நெட்டிசன்ஸ்!

பிரபல நடிகர் கார்த்தியின் நடிப்பில், 2019 ஆம் ஆண்டு லோகேஷ் கனகராஜ்ஜின் இயக்கத்தில் உருவாகியிருந்த படம் கைதி. படத்தில், நாயகி இல்லை, பாடல் இல்லை, கார்த்தி-நரேனைத் தவிர பெரிய திரை நட்சத்திரங்களும் இல்லை. இப்படி, வழக்கமாக சினிமாவின் சிறப்பம்சமாக கூறப்படும் எதுவுமே, இப்படத்தில் இடம் பெறவில்லை. ஆனால் படமோ, சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. அதற்கான காரணம், படத்தின் கதைக்களமும் லோகேஷ் கனகராஜ்ஜின் கதை சொல்லிய விதமும்தான்.

ஓடும் லாரியில் சண்டை காட்சியை வைப்பது, வயதான காவல் அதிகாரியைக் கொண்டு ஒட்டு மொத்த கேங்க்ஸ்டர் கூட்டத்தையே அழிப்பது என பல சர்ப்ரைஸ் எலிமென்டை படத்தில் வைத்திருந்தார் லோகேஷ். இப்படத்தை பார்த்த பலர், “எங்கைய்யா இருந்த இத்தன நாளா” என்று கேட்கும அளவிற்கு படத்தை எடுத்திருந்தார் லோகேஷ் கனகராஜ். பல தரப்பட்ட ரசிகர்களை கவர்ந்து, ரிலீஸாகி 3 வருடங்களை கடந்த பின்பும் கவரக்கூடிய திறன் உடைய படம் கைதி. இப்படம், தற்போது இந்தியில் ரீ-மேக் ஆகியுள்ளது. 

இந்தியில் கைதி

தமிழ் ரசிகர்களின் பெரும் வரவேற்ப்பு பெற்ற படங்கள் பல்வேறு மொழிகளில் டப்பிங் செய்யப்படுவதைத் தாண்டி, இப்போது ரீ-மேக் செய்யும் அளவிற்கு வந்துவிட்டன. அப்படித்தான், சில வருடங்களுக்கு முன்பு தமிழில் வெளியான காஞ்சனா திரைப்படம் சமீபத்தில் இந்தியல் ரீ-மேக் செய்யப்பட்டது. இதில் பிரபல பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் நடித்திருந்தார். அதன் பிறகு, தமிழில் பலருக்கும் பயம் காட்டிய ராட்சசன் படம், இந்தியில் கட்புட்லி என்ற பெயரில் வெளியாகி நல்ல வரவேற்ப்பை பெற்றது. இதிலும், அக்ஷய் குமார் ஹீரோவாக நடித்திருந்தார். இந்த படங்களின் வரிசையில், தற்போது கைதி படமும் இணைந்துள்ளது. 

போலா டீசர்

கைதி படத்தின் இந்தி ரீ-மேக்கிற்கு போலா எனப் பெயரிடப்பட்டுள்ளது. இதில், நடித்துள்ள நடிகர் நடிகைகள் குறித்து எந்த தகவல்களும் வெளிவரப்படாத நிலையில், அஜய் தேவ்கன் கார்த்தியின் கதாப்பாத்திரத்தில் நடித்ததோடு மட்டுமில்லாமல் படத்தை இயக்கியும் தயாரித்தும் உள்ளார்.  இந்த செய்தி பலருக்கும் இன்ப அதிர்ச்சியை கொடுத்துள்ளது.  3 டியில் தயாராகியுள்ள இந்தப்படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது. 

நெட்டிசன்கள் வறுத்தெடுக்கும் டீசர்

போலா படத்தின் டீசர் வெளியானதிலிருந்து ட்விட்டரில் ட்ரெண்டிங்கில் உள்ளது. முன்னர் காஞ்சனா, ராட்சசன் ஆகிய படங்களை ரீ-மேக் என்ற பெயரில் பாலிவுட் உலகம் கொடுமை படுத்தியுள்ளதாக பரவலாக கருத்துகள் கூறப்பட்டது. இதனிடையே, தற்போது போலா படத்தின் டீசரையும் “ஏன்டா இப்படி பன்றீங்க..” எனக்கூறி மீம்ஸ் போட்டு தள்ளி வருகின்றனர், நம்ம ஊர் நெட்டிசன்கள்.  

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Pongal 2026: ”பொங்கலோ பொங்கல்” - தமிழ்நாடு முழுவதும் பொங்கல் பண்டிகை உற்சாக கொண்டாட்டம்!
Pongal 2026: ”பொங்கலோ பொங்கல்” - தமிழ்நாடு முழுவதும் பொங்கல் பண்டிகை உற்சாக கொண்டாட்டம்!
ஆசிரியர் தற்கொலை: 50 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் - இபிஎஸ் வலியுறுத்தல்
ஆசிரியர் தற்கொலை: 50 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் - இபிஎஸ் வலியுறுத்தல்
Video: சபரிமலை மகரஜோதி தரிசன வீடியோ... விண்ணைப்பிளந்த ஐயப்ப பக்தர்களின் சரண கோஷம்
சபரிமலை மகரஜோதி தரிசன வீடியோ... விண்ணைப்பிளந்த ஐயப்ப பக்தர்களின் சரண கோஷம்
பகுதி நேர ஆசிரியர் தற்கொலை: அரசு பொறுப்பேற்க வேண்டும்! அன்புமணி ராமதாஸ் கண்டனம்
பகுதி நேர ஆசிரியர் தற்கொலை: அரசு பொறுப்பேற்க வேண்டும்! அன்புமணி ராமதாஸ் கண்டனம்
ABP Premium

வீடியோ

”மானத்த பத்தி நீங்க பேசலாமா?” அடக்குமுறைகளை எதிர்க்கும் இஸ்லாமிய தமிழச்சி! | Wahitha Begum
அயோத்தி செல்லும் ராகுல்! காங்கிரஸ் பக்கா ப்ளான் கொந்தளிக்கும் பாஜகவினர் | Rahul Gandhi Visit Ayodhya
’’ரவுடிகள்..கோமாளிகள்’’விஜய் ரசிகர்களை திட்டிய சுதா கொங்கரா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Pongal 2026: ”பொங்கலோ பொங்கல்” - தமிழ்நாடு முழுவதும் பொங்கல் பண்டிகை உற்சாக கொண்டாட்டம்!
Pongal 2026: ”பொங்கலோ பொங்கல்” - தமிழ்நாடு முழுவதும் பொங்கல் பண்டிகை உற்சாக கொண்டாட்டம்!
ஆசிரியர் தற்கொலை: 50 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் - இபிஎஸ் வலியுறுத்தல்
ஆசிரியர் தற்கொலை: 50 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் - இபிஎஸ் வலியுறுத்தல்
Video: சபரிமலை மகரஜோதி தரிசன வீடியோ... விண்ணைப்பிளந்த ஐயப்ப பக்தர்களின் சரண கோஷம்
சபரிமலை மகரஜோதி தரிசன வீடியோ... விண்ணைப்பிளந்த ஐயப்ப பக்தர்களின் சரண கோஷம்
பகுதி நேர ஆசிரியர் தற்கொலை: அரசு பொறுப்பேற்க வேண்டும்! அன்புமணி ராமதாஸ் கண்டனம்
பகுதி நேர ஆசிரியர் தற்கொலை: அரசு பொறுப்பேற்க வேண்டும்! அன்புமணி ராமதாஸ் கண்டனம்
இந்தியா vs நியூசிலாந்து: ராகுலின் அதிரடி சதம்! 285 ரன்கள் இலக்குடன் நியூசிலாந்துக்கு சவால்!
இந்தியா vs நியூசிலாந்து: ராகுலின் அதிரடி சதம்! 285 ரன்கள் இலக்குடன் நியூசிலாந்துக்கு சவால்!
பராசக்தி சர்ச்சை: காங்கிரஸின் எதிர்ப்பை பயன்படுத்திக்கொண்ட பாஜக? - திமுக செந்தில்குமார் பரபரப்பு குற்றச்சாட்டு
பராசக்தி சர்ச்சை: காங்கிரஸின் எதிர்ப்பை பயன்படுத்திக்கொண்ட பாஜக? - திமுக செந்தில்குமார் பரபரப்பு குற்றச்சாட்டு
Mattu Pongal Kolam: மாட்டுப் பொங்கலுக்கு என்ன கோலம் போடலாம்..? இந்த டிசைன் ட்ரை பண்ணுங்க
Mattu Pongal Kolam: மாட்டுப் பொங்கலுக்கு என்ன கோலம் போடலாம்..? இந்த டிசைன் ட்ரை பண்ணுங்க
Iran Erfan Soltani: ஈரான் அரசுக்கு எதிராக போராட்டம்; விசாரணை இன்றி தூக்கு; தண்டனை பெற்ற எர்ஃபான் சோல்தானி யார்.?
ஈரான் அரசுக்கு எதிராக போராட்டம்; விசாரணை இன்றி தூக்கு; தண்டனை பெற்ற எர்ஃபான் சோல்தானி யார்.?
Embed widget