மேலும் அறிய

Bharathi Kannamma: படபடத்த கண்ணம்மா.. ஆதார் கார்டை வைத்து அப்பாவைக் கண்டுபிடிச்சிருவாரா குட்டி லட்சுமி..

அம்மாவின் ஆதார் கார்டில் இருக்கும் பழைய வீட்டின் அட்ரஸுக்கு தேடி சென்று நமது அப்பா யார் என்று அறிந்து கொள்ளலாம் என்று லட்சுமி எண்ணுகிறாள்.

விஜய் டிவியின் முக்கிய சீரியல்களில் ஒன்றான பாரதி கண்ணம்மாவிற்கென தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. பாரதி கண்ணம்மாவுடன் எப்போது சேர்வார் என ரசிர்கள் ஆவலுடன் எதிர்ப்பார்த்திருந்த நிலையில் தான் தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. ஒருபக்கம் ஹேமாவும் தனது அப்பா பாரதிக்கு திருமணம் செய்தே ஆக வேண்டும் என்ற நினைப்பில் உள்ளார். மறுபுறம் லட்சுமியின் அப்பா பாரதி தான் என்று சொல்லிவிடுவோம் என்று யோசித்துக்கொண்டிருக்கிறார் கண்ணம்மா.

அடுத்தடுத்த புதிய திருப்பங்களுடன் கதைக்களம் நகர இருக்கிறது. இந்நிலையில், சமீபத்தில் பாரதி கண்ணம்மா சீரியலுக்கான ப்ரோமோ ஒன்று வெளியாகியது. அதில், கண்ணம்மா வீட்டுக்கு அரசு அதிகாரி ஒருவர் வந்து உங்க வீட்டில் யார் யார் இருக்க என்ற கேள்வியை கண்ணமாவிடம் கேட்கிறார். இதற்கு பதிலளித்த கண்ணம்மா, என் பெயர் கண்ணம்மா, என் பொண்ணு பெயர் லட்சுமி என்று தெரிவிக்க, உடனே அந்த அரசு அதிகாரி ஆதார் கார்டு இருக்கா மேடம் என்று கேட்கிறார். 

கண்ணம்மாவும் ஆதார் கார்டு இருக்கு, ஒரு நிமிஷம் இருங்க எடுத்துட்டு வரேன் என்று உள்ளே சென்று எடுத்து வருகிறார். அந்த ஆதார் கார்டை பார்த்த அதிகாரி, என்னமா ஆதார் கார்டுல வேற அட்ரஸ் இருக்கு இன்னும் நீங்க இதை புதுப்பிக்கலையா என்று கேள்வி கேட்கிறார். 

உடனே கண்ணம்மா, ஆமா சார் இன்னும் நான் அப்டேட் பண்ணல என்று தெரிவிக்க, சரிங்க மேடம் சீக்கிரம் அப்டேட் பண்ணிருங்க என்று அரசு அதிகாரி சென்று விடுகிறார். அப்பொழுது, அங்கு நடந்த அனைத்தையும் கவனித்த லட்சுமிக்கு ஒரு புது ஐடியா ஓன்று தோன்றுகிறது. அதில், அம்மாவின் ஆதார் கார்டில் இருக்கும் பழைய வீட்டின் அட்ரஸுக்கு தேடி சென்று நமது அப்பா யார் என்று அறிந்து கொள்ளலாம் என்று எண்ணி, கண்ணம்மாவின் ஆதார் கார்டை எடுத்து விடுகிறார். தொடர்ந்து, அந்த வீட்டை தேடி பாதி வழியில் செல்லும்போது, இது பாரதி அங்கிள் வீட்டுக்கு செல்லும் வழியாச்சே, பாரதி அங்கிளுக்கு அதனால்தான் அப்பாவை நன்றாக தெரிந்து இருக்கிறது என்று கண்டுபிடிக்கிறார். 

இதற்கிடையில் பாரதியின் வீட்டுக்கு வந்த கண்ணம்மா, தனது மாமியாரிடம் லட்சுமி வர வர சரியில்லை. எதையோ ஒன்றை கண்டு பிடித்துவிட்டாள். ரொம்ப வித்தியாசமா நடந்துக்குறா. உங்க மேலயும், ஹேமா மேலயும் ரொம்ப பாசமாவும், அன்பாகவும் இருந்த அவ, இப்ப நமக்கு யாருமே வேணான்னு  சொல்லிட்டு இருக்கா. 

லட்சுமி அப்பா இல்லாத பொண்ணாவே இந்த சமூகத்துல கடைசி வர வாழனுமா..? என்று கேள்வி கேட்கும் கண்ணம்மா, இறுதியில் நான் லட்சுமிகிட்ட உண்மைய சொல்லதான் போறேன் என்று அனைவரது முன்பும் தெரிவிக்கிறார். தொடர்ந்து, பாரதியின் அம்மா சௌந்தர்யா, பாரதியிடம் 9 வருஷம் ஆச்சு இன்னும் அந்த ஒரு பொய்யத்தான் நம்பிட்டு இருக்கியாடா என்று கேள்வி கேட்க, வீட்டை கண்டுபிடித்த லட்சுமி கதவை திறந்து எதையை பார்த்து அதிர்ச்சியாக நிற்கிறார். அதோடு அந்த ப்ரோமோவும் முடிகிறது. 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூடிபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

அருள்நிதியின் அருள்வன் பட பத்திரிகையாளர் சந்திப்பு
அருள்நிதியின் அருள்வன் பட பத்திரிகையாளர் சந்திப்பு
நூறு சாமி திரைப்பட விமர்சனம்... மனதை உலுக்கும் கதையா ? விஜய் ஆண்டனி - சசியின் கூட்டணி வெற்றி பெற்றதா ?
நூறு சாமி திரைப்பட விமர்சனம்... மனதை உலுக்கும் கதையா ? விஜய் ஆண்டனி - சசியின் கூட்டணி வெற்றி பெற்றதா ?
ஆகாஷின் பையோபிக் தான் இந்த படம்..இதயம் முரளி படம் குறித்து இயக்குநர் அட்லீ
ஆகாஷின் பையோபிக் தான் இந்த படம்..இதயம் முரளி படம் குறித்து இயக்குநர் அட்லீ
பிரம்மாண்ட பட்ஜெட்டில் 'குற்றப் பரம்பரை'...பாரதிராஜா கனவு படத்தை இயக்கும் சசிகுமார்
பிரம்மாண்ட பட்ஜெட்டில் 'குற்றப் பரம்பரை'...பாரதிராஜா கனவு படத்தை இயக்கும் சசிகுமார்

வீடியோ

12 year girl death|சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை!சாக்கு மூட்டையில் சடலம்!கொடூரனை அடித்தே கொன்ற மக்கள்
Keerthana | ”ENGLISH-ல பேசுங்க” திகைத்து நின்ற மாணவி! பள்ளியில் கீர்த்தனா!எல்லை மீறும் ரீல்ஸ் மோகம்?
Tiruppur Crime News : 4 மாத கர்ப்பிணி.. மனைவியை கொன்ற கணவன்... திருப்பூரை உலுக்கிய கொடூரம்
Theni Theft Murder : பாட்டி கொலையில் மர்மம்.. நாடகமாடிய பேரன், பேத்தி! போலீஸ் அதிரடி கைது!
Trichy VAO: போதையில் சட்டையின்றி தூக்கம்.. அலுவலகத்தில் சிக்கிய VAO! வைரலாகும் வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Govt Lawyer: அரசு வழக்கறிஞர் பதவிக்கு ரூ.30 லட்சமா? அமைச்சர் நிர்மல் குமார் கொடுத்த விளக்கம் என்ன?
அரசு வழக்கறிஞர் பதவிக்கு ரூ.30 லட்சமா? அமைச்சர் நிர்மல் குமார் கொடுத்த விளக்கம் என்ன?
Gold and Silver Rate Today: வாரத்தின் 2-வது நாளிலும் குஷி.! தங்கம் விலை அதிரடி குறைவு; தற்போதைய விலை என்ன தெரியுமா.?
வாரத்தின் 2-வது நாளிலும் குஷி.! தங்கம் விலை அதிரடி குறைவு; தற்போதைய விலை என்ன தெரியுமா.?
CM Vijay: ”விஜய் கரூர் போகக்கூடாது” திமுக போட்ட மெகா ப்ளான் - இன்று உச்சநீதிமன்றம் சொல்லப்போவது என்ன?
”CM விஜய் கரூர் போகக்கூடாது” திமுக போட்ட மெகா ப்ளான் - இன்று உச்சநீதிமன்றம் சொல்லப்போவது என்ன?
Minister Keerthana:
Minister Keerthana: "நானே அரசுப்பள்ளி மாணவிதான்.. ஒரு தலைமுறையையே கேலி செய்யாதீர்கள்.." அமைச்சர் கீர்த்தனா ஆதங்கம்
TN Weather Update: தமிழ்நாட்டின் எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? - வானிலை அறிக்கை
தமிழ்நாட்டின் எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? - வானிலை அறிக்கை
Cristiano Ronaldo: ஓய்வை அறிவித்தாரா க்றிஷ்டியானோ ரொனால்டோ? தோல்விக்குப் பிறகு கண்ணீர் மல்க பேச்சு..
ஓய்வை அறிவித்தாரா க்றிஷ்டியானோ ரொனால்டோ? தோல்விக்குப் பிறகு கண்ணீர் மல்க பேச்சு..
"என் மீது பொய்யான கதைகள்..' சிவகாசி பள்ளிக்கு ஆய்வுக்குச் சென்றது ஏன்? அமைச்சர் கீர்த்தனா கேள்வி
Chennai Power Cut: சென்னையில ஜூலை 8-ம் தேதி (08.07.2026) எங்கெங்க மின்சாரத் தடை பண்ணப் போறாங்க.? லிஸ்ட் இதோ
சென்னையில ஜூலை 8-ம் தேதி (08.07.2026) எங்கெங்க மின்சாரத் தடை பண்ணப் போறாங்க.? லிஸ்ட் இதோ
Embed widget