மேலும் அறிய

Bharathi Kannamma : கண்ணம்மா.. என்னம்மா.. ஹேமா யாருன்னு பாரதிக்கு தெரியப்போகுதா? குபீர் கடுப்பை கொடுக்கும் பாரதி கண்ணம்மா..

ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்று நீண்ட ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா தொடரில் லேட்டஸ்ட் எபிஸோட் என்னவென்று பார்க்கலாம்.

சின்னத்திரையில் ட்ரெண்டிங்கில் இருந்து தொடர்ந்து ரசிகர்களை ஈர்த்துக்கொண்டிருக்கும் சீரியலாக பாரதி கண்ணம்மா உள்ளது. டிஆர்பியில் கலக்கி வரும் இந்த சீரியலில் பாரதி மற்றும் கண்ணம்மாவுக்கு அடுத்தபடியாக புகழ் வெளிச்சத்தில் இருந்தவர் ’வெண்பா’ தான். இவர் செய்யும் சூழ்ச்சிகளாலேயே சீரியல் பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் சென்று கொண்டிருக்கிறது. 

இப்படியாக, ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்று நீண்ட ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா தொடரில் லேட்டஸ்ட் எபிஸோட் என்னவென்று பார்க்கலாம்.

பாரதி கண்ணம்மா சீரியலின் மையப்புள்ளியே பாரதியின் சந்தேகம் தான். மனைவி கண்ணம்மாவின் கர்ப்பத்தில் தான் அவருக்கு இந்த சந்தேகம் தொடங்குகிறது. இதனால் மனைவியைப் பிரிகிறார். கண்ணம்மாவுக்கு பிறந்த குழந்தைக்கு தான் அப்பா இல்லை என்று சொல்லும் பாரதி, தனக்கு குழந்தை பிறக்காது என்று தெரிந்தும் வெண்பாவை திருமணம் செய்ய 2 முறைய முயற்சி செய்கிறார். அதுவும் இவர் எப்போது திருமணத்திற்கு அழைப்பார் என்ற எதிர்பார்ப்போடு காத்திருக்கிறார் வெண்பா.  

இது ஒருபுறம் இருக்க பாரதியிடம் இருக்கும் ஹேமா கண்ணம்மாவின் குழந்தை என்று வீட்டில் உள்ள அனைவருக்குமே தெரியும் ஆனால் பாரதிக்கு அவள் யார் எனறு தெரியாது. அது யார் குழந்தை என்று தெரிந்துகொள்ள பாரதி ஒருபோது முயற்சி செய்ததே இல்லை. இதைப் பயன்படுத்திக்கொள்ளும் வெண்பா பாரதியை திருமணம் செய்துகொள்ள ஹேமாவிடம் அன்பு காட்டி பாசாங்கு செய்கிறார். ஹேமாவுக்கு சாப்பாடு கொடுத்து அந்தச் சின்னப் பெண்ணை தன் வசப்படுத்து முயற்சி செய்கிறார். இப்படி சீரியல் போய்க்கொண்டிருக்க, நேற்றைய ஹேமாவுக்கு பிரியாணி கொடுக்க அவர், கண்ணம்மாவை விட்டுவிட்டு வெண்பாவிடம் சென்று சாப்பிடுகிறாள்.

Bharathi Kannamma : கண்ணம்மா.. என்னம்மா.. ஹேமா யாருன்னு பாரதிக்கு தெரியப்போகுதா? குபீர் கடுப்பை கொடுக்கும் பாரதி கண்ணம்மா..

இன்றும் அதேபோல் வெண்பா வர கண்ணம்மா அவளை எச்சரிக்க இருவருக்கும் வாய் தகராறு ஏற்பட்டு கண்ணம்மா வெண்பா அடித்துவிடுகிறார். தமிழ் சினிமா போலீஸ் கடைசிக் காட்சியில் சரியாக வருவதுபோல், கண்ணம்மா வெண்பாவை அடிக்கும் நேரத்தில் சரியாக அங்கு பாரதியின் என்ட்ரி கொடுக்க பிரச்சினை பூதாகரமாகிறது. வழக்கம் போல் பாரதி அங்கு வந்து கண்ணம்மாவை திட்ட அதைப் பார்த்து வெண்பா ஆனந்தத்தில் துள்ளுகிறார். அப்போது எல்லை மீறும் பாரதி, ஹேமா மீது உனக்கென்ன பாசம். அவள் மீது அக்கறை காட்ட நீ யார்? வெண்பா போல ஹேமாவுக்கு நீ யாரோதான். என்று சொல்லிவிடுகிறார்.

இதைக் கேட்டு கண்ணம்மா அமைதியாக நிற்க வெண்பாவை அழைத்துக்கொண்டு பாரதி கிளம்பிவிடுகிறார். இதனால் இனி வரும் எபிஸோடுகளில் ஹேமா கண்ணம்மாவின் குழந்தை என்பது பாரதிக்குத் தெரியவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஒருவேளை.. பாரதி கண்ணம்மாவை முடித்துவிட சீரியல் குழு முடிவு செய்துள்ளதோ!

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
CPI-M: சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்..   உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்.. உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

சு.வெங்கடேசனுக்கு நெஞ்சுவலி! PHONE போட்ட மூர்த்தி! HEALTH REPORTபொன்முடிக்கு செருப்பு மாட்டிவிட்ட நிர்வாகி! மஸ்தான் ரியாக்‌ஷன்ரெய்டில் சிக்கிய கோடிகள்! தலைவலியில் அண்ணாமலை! பற்றவைத்த ஆளுங்கட்சியினர்”அரியணை நோக்கி கனிமொழி” மகளிரணியின் சம்பவம்! ஷாக்கான திமுகவினர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
CPI-M: சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்..   உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்.. உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
"பிரியங்கா காந்தியின் கன்னங்கள்.." சர்ச்சையாக பேசிய பாஜக தலைவர்!
Chennai Fog: சென்னையில் நாளை குளிர் எந்தளவு இருக்கும்? வானிலை மையம் சொல்வது என்ன?
Chennai Fog: சென்னையில் நாளை குளிர் எந்தளவு இருக்கும்? வானிலை மையம் சொல்வது என்ன?
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
"ரெக்க கட்டி பறக்குதடி" அண்ணாமலை ரஜினி போன்று சைக்கிள் ஓட்டிய மன்சுக் மாண்டவியா!
Embed widget