Bharathi Kannamma Vinusha Devi : கருப்பா இருக்கேன்னு அவ்வளவு கேலி.. சீரியலுடன் ஐ.டி வேலை.. வினுஷாவின் பிரமிக்கவைக்கும் கதை
பாரதி கண்ணம்மா தொடரில் நாயகியாக நடித்து வந்த வினுஷா தனது நிறத்தால் கடும் கேலிகளுக்கு ஆளாகியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டிலே அதிக ரசிகர்களை கொண்ட தொலைக்காட்சி தொடர்களில் ஒன்றாக பாரதி கண்ணம்மா விளங்குகிறது. இந்த தொடரில் நாயகி கண்ணம்மா கதாபாத்திரத்தில் நடித்த ரோஷிணி விலகியபிறகு, அவருக்கு பதிலாக வினுஷா கண்ணம்மாவாக நடித்து வருகிறார்.
தொடக்கத்தில் அவரை ஏற்றுக்கொள்ளாத ரசிகர்கள் பின்னர் கண்ணம்மாவாக ஏற்றுக்கொண்டனர். இந்த நிலையில், கண்ணம்மா புகழ் வினுஷா பற்றி புதிய தகவல்கள் வெளியாகி உள்ளது. கண்ணம்மாவின் கதாபாத்திரம் புகழ்பெற்றதற்கு காரணமே கண்ணம்மா ஒரு டஸ்கி பியூட்டியாக தொடக்கம் முதலே காட்டப்பட்டிருப்பதே ஆகும்.
தற்போது கண்ணம்மாவாக நடிக்கும் வினுஷா ஐ.டி. துறையில் பணியாற்றி வருகிறார். இவர் கருப்பான தோற்றத்தில் இருப்பதால் ஐ.டி.துறையில் பல கேலிகளுக்கும், கிண்டல்களுக்கும் ஆளாகியுள்ளார். நடிகையாக உருவெடுத்த பிறகும், தொடக்கத்தில் தனது கருமை நிற தோற்றத்தினால் கேலிகளுக்கு ஆளாகியுள்ளார். இருப்பினும் தற்போது கண்ணம்மா கதாபாத்திரத்தின் காரணமாக வினுஷா மிகவும் புகழ்பெற்றுள்ளார். அவருக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளமே உருவாகியுள்ளனர்.
மேலும், பகலில் பாரதி கண்ணம்மா தொடரில் கண்ணம்மாவாக நடிப்பதுடன், இரவில் ஐ.டி. நிறுவனத்திலும் பணியாற்றி வருகிறார். வினுஷா இப்படி இரவும், பகலும் தூங்காமல் பிசியாக பணியாற்றுவதால் அவரது உடல்நலம் பாதிக்கப்படுமே என்று அவரது ரசிகர்கள் அக்கறையுடன் உடல்நலத்தில் கவனம் செலுத்துமாறு பதிவிட்டு வருகின்றனர்.
பாரதி கண்ணம்மா தொடரில் கண்ணம்மாவாக நடித்த ரோஷிணி விலகிய பிறகு, ரசிகர்கள் மிகவும் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் அவர் படங்களில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட நிலையில், குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்று வருகிறார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்