மேலும் அறிய

ShanthiPriya : அம்மா படின்னு சொன்னாங்க.. பிடிவாதம் பிடிச்சேன்.. இப்போ இந்த சீரிஸ்.. சாந்திப்ரியா சொன்ன சீக்ரெட்

நான் நடிக்க வந்ததில் என் அம்மாவுக்கு கொஞ்சமும் விருப்பமில்லை என்று கூறியுள்ளார் நடிகை பானுப்ரியாவின் தங்கை சாந்திப்ரியா.

நான் நடிக்க வந்ததில் என் அம்மாவுக்கு கொஞ்சமும் விருப்பமில்லை என்று கூறியுள்ளார் நடிகை பானுப்ரியாவின் தங்கை சாந்திப்ரியா.

அம்பிகா - ராதா, ராதிகா - நிரோஷா வரிசையில் 1980-களில் கலக்கிய நட்சத்திர சகோதரிகளில் பானுப்ரியா – சாந்திப்ரியாவும் பிரபலமானவர்கள். பானுப்ரியாவுக்கு அறிமுகமே தேவையில்லை. அவரின் தங்கை சாந்திப்ரியா, ‘எங்க ஊரு பாட்டுக்காரன்’ படத்தில் அறிமுகமாகி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழி தாண்டி பாலிவுட்டிலும் பெயர் எடுத்தவர். மும்பையில் வசிக்கும் சாந்திப்ரியா, சமீபத்தில் சென்னை வந்திருந்தபோது ஒரு யூடியூப் சேனலுக்கு சுவாரஸ்ய பேட்டியளித்தார்.

அந்தப் பேட்டியில் இருந்து..

எங்கள் வீட்டில் என் அக்கா தான் முதலில் நடிக்க வந்தார். இருவருமே நன்றாக நடனமாடுவோம். முறைப்படி நாங்கள் பரதம் கற்றுக்கொண்டோம். அக்காவை ஒரு பரதநாட்டிய நிகழ்வில் பார்த்த இயக்குநர் பாரதிராஜா அவரை சினிமாவுக்குக் கொண்டுவந்தார். அக்காவோட உண்மையான பெயர் பானு. அவர்தான் அந்தப் பெயரின் பின்னால் ப்ரியா என்பதைச் சேர்த்து பானுப்ரியா என்று மாற்றினார். நான் 9வது படித்துக் கொண்டிருந்தேன். அப்போது எங்க ஊரு பாட்டுக்காரன் பட வாய்ப்பு வந்தது. கங்கை அமரன் சார் இயக்கம். அவர் என் அம்மாவிடம் வந்து என்னை ஹீரோயினாக நடிக்கவைக்க அனுமதி கேட்டார். அம்மாவுக்கு சுத்தமாக விருப்பமில்லை. ஏற்கனவே அக்கா நடிகையாக இருக்கிறார். அதனால் அவர் மட்டும் நடிக்கட்டும் நீ படி என்றார். ஆனால் நான் நடிக்கச் செல்வேன் என்று பிடிவாதம் காட்டினேன். அதனால் அவர் ரொம்பவே மனம் வேதனைப்பட்டார். என் பிடிவாதத்திற்காக சம்மதம் சொன்னார். நான் அம்மாவிடம் படிப்பைக் கைவிடமாட்டேன் என்று உறுதி கூறினேன்.  ஆனால் அப்படி நடக்கவில்லை. 9வதுக்குப் பின் நான் படிக்கவே இல்லை.

ShanthiPriya : அம்மா படின்னு சொன்னாங்க.. பிடிவாதம் பிடிச்சேன்.. இப்போ இந்த சீரிஸ்.. சாந்திப்ரியா சொன்ன சீக்ரெட்

நிஷாந்தி பெயர் எப்படி வந்தது?

எனது முதல் இயக்குநர் கங்கை அமரன் சார். அவர்தான் எனக்கு முதலில் நிஷாந்தி என்று பெயர் வைத்தார். அப்புறம் அதில் ஒரு னி சேர்த்து நிஷாந்தினி என்று ஆனது. அதன் பின்னர் தெலுங்கில் ரேகா என்ற பெயர் இருந்தது. மீண்டும் தமிழுக்கு வந்தபோது அம்மா சொன்னார் பெயரில் எதற்கு இத்தனை குழப்பம் பானுப்ரியா மாதிரி உன் பெயரின் பின்னால் ப்ரியா சேர்த்து சாந்தி ப்ரியா என்று ஆக்கிவிடு என்றார். அப்புறம் சாந்திப்ரியாவே நிலைத்துவிட்டது. ஆனால் இப்பவும் என்னைப் பார்க்கும் தமிழர்கள் செண்பகமே பாடல் எங்க ஊரு பாட்டுக்காரன் படம் மூலம் தான் அறிகிறார்கள். இல்லாவிடால் பானுப்ரியா தங்கை என்பார்கள்.

தமிழில் நான் ரகுவரன், பாண்டியராஜன், அர்ஜூன், ராம்கி போன்ற ஹீரோக்களுடன் நடித்திருக்கிறேன். தெலுங்கில் தாசரி நாராயணன் சார் இயக்கத்தில் நானும் அக்காவும் விஸ்வாமித்ரா என்ற படத்தில் நடித்தோம். அதைப்பார்த்தே எனக்கு இந்தியில் வாய்ப்பு வந்தது. அது அக்‌ஷய் குமாருக்கு முதல் படம். அதன் பின்னர் இந்தியிலும் ஒரு ரவுண்ட் வந்தேன். இப்போது நான் இந்தியில் நிறைய ஓடிடி தள சீரிஸ்களில் நடித்து வருகிறேன். 1992ல் நான் நடித்தது தான் தமிழில் கடைசி படம். அதன் பிறகு தெலுங்கு, இந்தி என்று என் ஏரியா மாறிவிட்டது.

இவ்வாறாக சாந்திப்ரியா விறுவிறுப்பாக பேசினார்.

தலைப்பு செய்திகள்

ஜெயிலர் 2 ஆல்பம் ரிவியூ: மாஸ் முதல் கிளாசிக்கல் வரை கலக்கும் அனிருத்
ஜெயிலர் 2 ஆல்பம் ரிவியூ: மாஸ் முதல் கிளாசிக்கல் வரை கலக்கும் அனிருத்
பென்ஸ் திரைப்படத்தில் இடம்பெறும் LCU கதாப்பாத்திரங்கள் - நிவின் பாலி சொன்ன சீக்ரெட்...
பென்ஸ் திரைப்படத்தில் இடம்பெறும் LCU கதாப்பாத்திரங்கள் - நிவின் பாலி சொன்ன சீக்ரெட்...
Jailer 2 : அந்த ஒரு காட்சியை நீக்க சொன்ன சென்சார் போர்ட்..முடியாது என்ற நெல்சன்..ஆர்டர் போட்டர் ரஜினி
Jailer 2 : அந்த ஒரு காட்சியை நீக்க சொன்ன சென்சார் போர்ட்..முடியாது என்ற நெல்சன்..ஆர்டர் போட்டர் ரஜினி
Karthik Subbaraj: விக்ரமுடன் மீண்டும் இணையும் கார்த்திக் சுப்பராஜ்.. இந்த முறை தியேட்டர் தான்.. அதுவும் இந்த படம் தான்!
Karthik Subbaraj: விக்ரமுடன் மீண்டும் இணையும் கார்த்திக் சுப்பராஜ்.. இந்த முறை தியேட்டர் தான்.. அதுவும் இந்த படம் தான்!

வீடியோ

VS Babu in Hospital : ICU-வில் V.S பாபு.. சுவாச கருவியில் தீவிர சிகிச்சை! HOSPITAL பரபரப்பு அறிக்கை
Tiruvotriyur CRIME : மிரட்டிய போலீஸ்! பேட்டி கொடுத்த மறுநாளே இளைஞர் கொலை! திருவொற்றியூரில் பயங்கரம்!
Oothangarai News : பள்ளி மாணவியிடம் அத்துமீறல்! பேருந்தை மறித்து கண்டக்டரை ஓட ஓட அடித்த பொதுமக்கள்!
Vijay London Trip : Phone போட்ட ஆளுநர்! ”லண்டனுக்கு போகாதீங்க ” பயணத்தை மாற்றிய CM விஜய்
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Seeman Speech: ”நான் படத்துக்கே போறன் போங்கடா. தம்பி சிவகார்த்திகேயன் வர சொல்றாரு
”நான் படத்துக்கே போறன் போங்கடா. தம்பி சிவகார்த்திகேயன் வர சொல்றாரு" சீமான் திடீர் முடிவு
Rohit Gill: ஒரே போட்டியில் மலையாய் குவிந்த சாதனைகள்..! ரோகித் - கில் மரண அடி, பஞ்சரான மே.தீவுகள்
ஒரே போட்டியில் மலையாய் குவிந்த சாதனைகள்..! ரோகித் - கில் மரண அடி, பஞ்சரான மே.தீவுகள்
Vijay Speech: ”திமுகவின் பரம்பரை சொத்து..! ஒருமையில் பேசும் ஸ்டாலின்” - முதலமைச்சர் விஜய் குற்றச்சாட்டு
Vijay Speech: ”திமுகவின் பரம்பரை சொத்து..! ஒருமையில் பேசும் ஸ்டாலின்” - முதலமைச்சர் விஜய் குற்றச்சாட்டு
FlyDubai Flight: 180 உயிர்களை காப்பாற்றிய இந்தியர்? விமான பயணிகளை கொல்ல முயன்ற கேப்டன் , 17,000 அடியில் பயங்கரம்
180 உயிர்களை காப்பாற்றிய இந்தியர்..! விமான பயணிகளை கொல்ல முயன்ற கேப்டன் - 17,000 அடியில் பயங்கரம்
Pressure Cooker: பிரஷர் குக்கரில் சமைப்பது இவ்வளவு ஆபத்தா? எந்தெந்த உணவு விஷமாக மாறும்? இல்லத்தரசிகளுக்கு அதிர்ச்சி எச்சரிக்கை!
Pressure Cooker: பிரஷர் குக்கரில் சமைப்பது இவ்வளவு ஆபத்தா? எந்தெந்த உணவு விஷமாக மாறும்? இல்லத்தரசிகளுக்கு அதிர்ச்சி எச்சரிக்கை!
Crime: ஃபுல் மப்பிலும் அடங்காத தமிழ்செல்வன்.. தடம் மாறிய பூவரசியால் 9 வயது மகனுக்கு நேர்ந்த சோகம்.!
Crime: ஃபுல் மப்பிலும் அடங்காத தமிழ்செல்வன்.. தடம் மாறிய பூவரசியால் 9 வயது மகனுக்கு நேர்ந்த சோகம்.!
திமுகவை சொன்ன இபிஎஸ்-க்கு எதுக்கு கோவம் வருது.. ஒரே வார்த்தை சொல்லி ஸ்டாலினை காலி செய்த விஜய்.!
திமுகவை சொன்ன இபிஎஸ்-க்கு எதுக்கு கோவம் வருது.. ஒரே வார்த்தை சொல்லி ஸ்டாலினை காலி செய்த விஜய்.!
Dharapuram By Election: என்னை கேவலமா பேசுறாங்க.. நான் எந்த தப்பும் பண்ணல.. விஜய் முன்னால் கண்ணீர் விட்ட சத்யபாமா!
Dharapuram By Election: என்னை கேவலமா பேசுறாங்க.. நான் எந்த தப்பும் பண்ணல.. விஜய் முன்னால் கண்ணீர் விட்ட சத்யபாமா!
Embed widget