Baby Manasvi: கொட்டாச்சி மகளுக்கு பாலிவுட் வாய்ப்பு... மாமனிதன் மூலம் ஜாக்பாட்!
மாமனிதன் படத்தில் மானஸ்வி அசத்தியதால் அவருக்கு பாலிவுட்டில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது.
![Baby Manasvi: கொட்டாச்சி மகளுக்கு பாலிவுட் வாய்ப்பு... மாமனிதன் மூலம் ஜாக்பாட்! Baby Manasvi got oppurtunity to act in Bollywood industry Baby Manasvi: கொட்டாச்சி மகளுக்கு பாலிவுட் வாய்ப்பு... மாமனிதன் மூலம் ஜாக்பாட்!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/09/01/51e31d92e3474b9db9b68f46a9a429eb1662036545276102_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
காமெடி நடிகர் கொட்டாச்சியின் மகளான குழந்தை நட்சத்திரம் மானஸ்வி கொட்டாச்சிக்கு ஹிந்தி சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. அஜய் ஞானமுத்துவின் இமைக்கா நொடிகள் படத்தில் மானஸ்வி அறிமுகமானார். இந்தப்படத்தில் நடிகை நயனின் குழந்தையாக நடித்திருப்பார். சொட்ட சொறிகிடுவேன் என்று க்யூடாக பேசி அனைவரையும் சிரிக்க வைத்திருப்பார். தர்பார், எனிமி, மாமனிதன் ஆகிய படங்களிலும் நடித்தார்.
#மாமனிதன்
— Dr.Seenu Ramasamy (@seenuramasamy) September 1, 2022
டெல்லி சர்வதேச திரைப்படவிழா
திரையிடல் காரணமாக
படத்தில் சிறப்பாக நடித்த
பேபி #மானஸ்வி -க்கு
ஹிந்திப் படத்தில் உடனே
நடிக்க அழைப்பு வந்தது,மகிழ்ச்சி.
வாழ்த்துக்கள்
💐@Actor_Kottachi @Kottachi4 #Manasvi #maamanithan @VijaySethuOffl@ahatamil @onlynikil @Riyaz_Ctc pic.twitter.com/LMNRjULdxr
விஜய் சேதுபதி மற்றும் காயத்ரி நடித்த மாமனிதன் படத்தில் மானஸ்வி அசத்தியதால் அவருக்கு பாலிவுட்டில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. நற்செய்தியை பகிர்ந்த இயக்குநர் சீனு ராமசாமி “டெல்லி சர்வதேச திரைப்படவிழா திரையிடல் காரணமாக படத்தில் சிறப்பாக நடித்த பேபி மானஸ்விக்கு ஹிந்திப் படத்தில் உடனே நடிக்க அழைப்பு வந்தது,மகிழ்ச்சி. வாழ்த்துக்கள் என்று ட்வீட் செய்துள்ளார்.
View this post on Instagram
View this post on Instagram
குழந்தை நட்சத்திரம் மானஸ்வி தமிழ், மலையாளம் படங்களில் நடித்துள்ளார். இவர் நகைச்சுவை நடிகர் கொட்டாச்சியின் மகள் ஆவார். மானஸ்வி பத்து தல, சதுரங்க வேட்டை 2, கும்கி 2 ஆகிய படங்களில் நடிக்கவுள்ளார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)