மேலும் அறிய

Preethi Asrani: 7 மொழிகள் தெரியும்.. வெவ்வேறு மொழிகள் கற்பது உதவுகிறது.. அயோத்தி நடிகை ப்ரீத்தி அஸ்ரானி!

Actress Preethi Asrani: அயோத்தி படத்தில் நாயகியாக நடித்த நடிகை ப்ரீத்தி அஸ்ரானி தன்னைப் பற்றிய சுவாரஸ்யமான தகவல்களைப் பகிர்ந்துகொண்டுள்ளார்

ப்ரீத்தி அஸ்ரானி

அயோத்தி படத்தில் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் ப்ரீத்தி அஸ்ரானி (Preethi Asrani). குழந்தை நட்சத்திரமாக நடித்து பின் துணை கதாபாத்திரங்கள், பின் கதாநாயகி என படிப்படியாக வளர்ந்து வருகிறார். அயோத்தி படத்தின் வெற்றிக்குப் பின் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில்  நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்ட ப்ரீத்து அஸ்ரானி தன்னைப் பற்றிய பல சுவாரஸ்யமான தகவல்களைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.

எனக்கு ஏழு மொழிகள் தெரியும் 

இந்த நேர்காணலில் வெவ்வேறு மொழி படங்களில் நடிப்பது குறித்து அவர் பேசுகையில் ”தொடச்சியாக வெவ்வேறு மொழி படங்களில் நடிப்பது எனக்கு பிடிக்கும். புதிய மொழிகளைக் கற்பது தான் என்னுடைய ஹாபி. நான் என்னுடைய ஓய்வு நேரத்தில் என்ன செய்வேன் என்று என்னிடம் யாராவது கேட்டால் நான் வேறு மொழிகளைக் கற்பேன் என்றுதான் பதில் சொல்வேன்.

புதுப்புது இடங்களுக்கு சென்று அங்கு உள்ள மக்களிடம் நீங்கள் அவர்களின் மொழியில் பேசும்போது உங்களுக்கு இடையிலான உரையாடல் சுலபமாகிறது. நான் ஹைதராபாத்தைச் சேர்ந்தவள் என்றாலும் நன்றாக தமிழ் பேசுவேன். சென்னை வரும்போது இங்கிருப்பவர்களிடம்  நான் தமிழில் பேசும்போது அவர்கள் மகிழ்ச்சியடைகிறார்கள். என்னால் மொத்தம் ஏழு மொழிகளைப் பேச முடியும். வெவ்வேறு மொழிகளை கற்பது ஒரு நடிகராக எனக்கு நிறைய உதவியாக இருக்கிறது. மொழி தெரியும்போது நடிப்பில் உணர்ச்சிகளை எளிதாக கொண்டு வரமுடியும். அதே நேரம் மொழி தெரியும் போது நீங்கள் என்ன பேசுகிறீர்கள் என்பதை கவனிக்காமல் உங்கள் நடிப்பில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தலாம்” என்று கூறியுள்ளார்.

அயோத்தி படம் குறித்தி

அயோத்தி படம் குறித்து பேசியபோது “அயோத்தி நான் தமிழில் நடித்த முதல் படம். இந்தப் படத்தில் நடிக்கும்போது நான் படத்தின் வெற்றியைப் பற்றி நினைக்கவில்லை. என்னுடை 100 சதவீத உழைப்பை நான் இந்தப் படத்திற்கு கொடுக்க வேண்டும் என்று முயற்சி செய்தேன். அயோத்தி படம் வெளியானபோது அதற்கு வந்த ரெஸ்பான்ஸ் என்னை ஆச்சரியப்படுத்தியது. இன்று என்னிடம் பேசும் இயக்குநர்கள் எல்லாரும் அயோத்தி படத்தில் என்னுடைய கதாபாத்திரம் ஏற்படுத்திய தாக்கத்தைப் பற்றிதான் பேசுகிறார்கள். விளைவை எதிர்பார்க்காமல் ஒரு வேலையை செய்வது நல்லது என்று நினைக்கிறேன்.

அயோத்தி படத்தின் கதையில் ஒரு நல்ல மெசேஜ் இருந்தது. என்னைப் பொறுத்தவரை ஒரு படத்தின் கதை ரொம்ப முக்கியம். நான் நடிக்கத் தேர்வு செய்யும் கதாபாத்திரங்களுக்கு ஒரு தனித்துவம் இருக்கவேண்டும் என்று எதிர்பார்க்கிறேன்” என்று அவர் கூறியுள்ளார். தற்போது ப்ரீத்தி அஸ்ரானி சதீஷ் இயக்கத்தில் உருவாகும் படத்தில் கவினுக்கு ஜோடியாக நடித்துள்ளார். 

தலைப்பு செய்திகள்

Jananayagan: படுதோல்வியுடன் விடை பெற்ற முதல்வர் விஜய்.. மண்ணைக் கவ்விய ஜனநாயகன்!
Jananayagan: படுதோல்வியுடன் விடை பெற்ற முதல்வர் விஜய்.. மண்ணைக் கவ்விய ஜனநாயகன்!
பணத்துக்காக எல்லாமே செய்ய மாட்டேன்.. என் அம்மா அப்படி வளர்க்கல.. முருகன் சாட்சி.. தர்ஷா குப்தா வேதனை!
பணத்துக்காக எல்லாமே செய்ய மாட்டேன்.. என் அம்மா அப்படி வளர்க்கல.. முருகன் சாட்சி.. தர்ஷா குப்தா வேதனை!
DC movie Collection: ஹீரோவாகவும் மாஸ் காட்டிய லோகேஷ் கனகராஜ்! ! 'DC' படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
ஹீரோவாகவும் மாஸ் காட்டிய லோகேஷ் கனகராஜ்! ! 'DC' படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
DC படத்தில் லோகேஷ் கனகராஜூக்கு பதிலாக இந்த தெலுங்கு நடிகர் நடிக்க இருந்தாரா?
DC படத்தில் லோகேஷ் கனகராஜூக்கு பதிலாக இந்த தெலுங்கு நடிகர் நடிக்க இருந்தாரா?

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
Mojtaba Khamenei Video: ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
Trump Vs Netanyahu: ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
TVK Kanimozhi: ”தவெக அரசை நாயுடன் ஒப்பிட்டு பேச்சு” பாஜக கூட்டணியை உறுதி செய்த கனிமொழி?
”தவெக அரசை நாயுடன் ஒப்பிட்டு பேச்சு” பாஜக கூட்டணியை உறுதி செய்த கனிமொழி?
Minister Ramesh: DMKவினர் தூங்கிக் கொண்டு இருந்தார்களா? பஞ்ச் பேசினார்களே? - அமைச்சர் ரமேஷ் அதிரடி கேள்விகள்
DMKவினர் தூங்கிக் கொண்டு இருந்தார்களா? பஞ்ச் பேசினார்களே? - அமைச்சர் ரமேஷ் அதிரடி கேள்விகள்
இந்த தலத்துக்கு வந்தாலே போதும் நவக்கிரக தோஷமும் நீங்கிவிடும்... எந்த தலம் தெரியுங்களா?
இந்த தலத்துக்கு வந்தாலே போதும் நவக்கிரக தோஷமும் நீங்கிவிடும்... எந்த தலம் தெரியுங்களா?
Pulsar N160 S-N160 SS First Look: அதிக சக்தி, புதிய அம்சங்கள்; புதிய பஜாஜ் பல்சர் N160 S, N160 SS எப்படி இருக்கு.? இதோ முதல் பார்வை
அதிக சக்தி, புதிய அம்சங்கள்; புதிய பஜாஜ் பல்சர் N160 S, N160 SS எப்படி இருக்கு.? இதோ முதல் பார்வை
Embed widget