மேலும் அறிய

Ram Charan: ராம்சரணின் ஓப்பனிங் காட்சி பயம் கொடுக்கும் பரமா.. RC 16 வீடியோ வைரல்

புஷ்பா படம் வெளியாகி சூப்பர் ஹிட்டானதால் அதன் 2 பாகத்தை எடுக்கும் பணியில்  சுகுமார் மும்முரமாக ஈடுபட்டுள்ளார். இதனால் ராம்சரண் படம் கிடப்பில் போடப்பட்டுள்ளது.

நடிகர் ராம்சரண் நடிக்கும் புதிய படத்தின் அறிமுக காட்சி குறித்து இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலி நேர்காணல் ஒன்றில் தெரிவித்த கருத்து இணையத்தில் வைரலாகியுள்ளது.

தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகராக உள்ள ராம்சரணின் நடிப்பில் கடைசியாக ராஜமௌலி இயக்கிய ஆர்.ஆர்.ஆர் படம் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் அவர் ஜூனியர் என்.டி.ஆருடன் சேர்ந்து நடித்திருந்த நிலையில் வசூலில் மாபெரும் சாதனைப் படைத்த ஆர்.ஆர்.ஆர். ஆஸ்கர் விருதுக்கான பரிந்துரை பட்டியலில் 10க்கும் மேற்பட்ட பிரிவுகளில் போட்டியிடுகிறது. 

இதனிடையே தமிழ் சினிமாவின் பிரமாண்ட இயக்குநர் என்றழைக்கப்படும் ஷங்கர் தற்போது தெலுங்கில் இயக்குநராக அறிமுகமாகியுள்ளார். ராம்சரண் ஹீரோவாக நடிக்கும் இப்படத்தில் ஹீரோயினாக கியாரா அத்வானி நடிக்கிறார். ’ஆர்சி15’ என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள தமன் இசையமைத்துள்ள நிலையில் அஞ்சலி, எஸ்.ஜே.சூர்யா, நாசர், சமுத்திரகனி உள்ளிட்ட பலரும் இப்படத்தில் நடித்துள்ளனர்.  விஜய்யின் வாரிசு படத்தை தயாரித்து வரும் தில் ராஜூவின் வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸின் 50வது படமாக இது உருவாகி வருகிறது. 

ரூ.170 கோடி பட்ஜெட்டில் உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த படத்தை தொடர்ந்து ‘புஷ்பா’ படத்தை இயக்கிய சுகுமார் இயக்கத்தில் ராம்சரண் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார். ஏற்கனவே இந்த கூட்டணி 2018 ஆம் ஆண்டு ரங்கஸ்தலம் படத்தில் இணைந்த நிலையில் அப்படம் மிகப்பெரிய வெற்றையை பெற்றது. இப்படத்தின் ராம் சரணின் பத்து நிமிட ஆரம்ப காட்சியை ஏற்கனவே சுகுமார் படமாக்கியுள்ளதாக கூறப்படுகிறது. RRR ரிலீஸுக்கு முன்பே இதன் படப்பிடிப்பு நடந்துள்ளது. 

ஆனால் புஷ்பா படம் வெளியாகி சூப்பர் ஹிட்டானதால் அதன் 2 பாகத்தை எடுக்கும் பணியில்  சுகுமார் மும்முரமாக ஈடுபட்டுள்ளார். இதனால் ராம்சரண் படம் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இந்நிலையில் சுகுமார் படத்தில் எடுக்கப்பட்ட ராம்சரண் காட்சி எப்படி இருக்கும் என்பதை இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலி நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார். அதில் மிகவும் கஷ்டப்பட்டு எடுக்கப்பட்டு இருக்கும் அந்த காட்சியை பார்க்கும் போது பார்வையாளர்கள் தங்கள் இருக்கைகளில் நடுங்குவார்கள் என தெரிவித்துள்ளார். 

 

தலைப்பு செய்திகள்

இதுவா...அதுவா...நெல்சன் இயக்கப்போகும் அடுத்த படம் எது?
இதுவா...அதுவா...நெல்சன் இயக்கப்போகும் அடுத்த படம் எது?
அனிருத் – காவ்யா மாறன் திருமணத்துக்கு கிரீஸ் ஏன் ? அந்த நாட்டில் என்ன ஸ்பெஷல்?
அனிருத் – காவ்யா மாறன் திருமணத்துக்கு கிரீஸ் ஏன் ? அந்த நாட்டில் என்ன ஸ்பெஷல்?
அனிருத் காவ்யா மாறன் திருமணம்: 4 தனி விமானங்கள்...கிரீஸுக்கு புறப்படும் 4 குடும்பங்கள்
அனிருத் காவ்யா மாறன் திருமணம்: 4 தனி விமானங்கள்...கிரீஸுக்கு புறப்படும் 4 குடும்பங்கள்
ரஜினி முதல் ஹாரிசன் ஃபோர்டு வரை...வயசானாலும் ஸ்டைல் மாறாத நடிகர்கள்
ரஜினி முதல் ஹாரிசன் ஃபோர்டு வரை...வயசானாலும் ஸ்டைல் மாறாத நடிகர்கள்

வீடியோ

MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்
Odisha Lorry Accident : அதிவேகமாக வந்த லாரி.. அடுத்தடுத்து மோதிய வாகனங்கள்! பகீர் சிசிடிவி காட்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மாணவர்களுக்கு ஜாலியோ ஜாலி.. பள்ளிகளுக்கு பறந்த முக்கிய உத்தரவு..!
மாணவர்களுக்கு ஜாலியோ ஜாலி.. பள்ளிகளுக்கு பறந்த முக்கிய உத்தரவு..!
CM Vijay: தவெக வெற்றி பெற்ற தாராபுரம், மதுராந்தகத்திற்கு சிறப்புத் திட்டங்கள்! முதலமைச்சர் விஜய் அறிவிப்பு!
CM Vijay: தவெக வெற்றி பெற்ற தாராபுரம், மதுராந்தகத்திற்கு சிறப்புத் திட்டங்கள்! முதலமைச்சர் விஜய் அறிவிப்பு!
ரூ.1 லட்சம் மிச்சம்.. கிரெட்டா முதல் கிராண்ட் i10 நியோஸ் வரை... ஆஃபரை அள்ளிக்கொடுக்கும் ஹூண்டாய்
ரூ.1 லட்சம் மிச்சம்.. கிரெட்டா முதல் கிராண்ட் i10 நியோஸ் வரை... ஆஃபரை அள்ளிக்கொடுக்கும் ஹூண்டாய்
Chennai Cooum: துர்நாற்றம் வீசாது..! க்ளீனா டூரிஸ்ட் ஸ்பாட் ஆகும் சென்னை கூவம் - டெண்டர் விட்ட தமிழ்நாடு அரசு
துர்நாற்றம் வீசாது..! க்ளீனா டூரிஸ்ட் ஸ்பாட் ஆகும் சென்னை கூவம் - டெண்டர் விட்ட தமிழ்நாடு அரசு
Trichy TVK Conference : ‘திருச்சியை குறி வைத்த முதல்வர் விஜய்’ விரைவில் பிரம்மாண்ட வெற்றி மாநாடு..!
‘திருச்சியை குறி வைத்த முதல்வர் விஜய்’ விரைவில் பிரம்மாண்ட வெற்றி மாநாடு..!
New Secretariat: சென்னைக்கு நடுவே..! பேருந்து, ரயில், மெட்ரோ வசதியுடன் புதிய தலைமை செயலகம் - 13.22 ஏக்கர் திட்டம்
சென்னைக்கு நடுவே..! பேருந்து, ரயில், மெட்ரோ வசதியுடன் புதிய தலைமை செயலகம் - 13.22 ஏக்கர் திட்டம்
MK Stalin : ‘தொடரும் கொலைகள் – போலீஸ் முதல்வர் விஜய் கட்டுப்பாட்டில் இல்லையா? திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பரபரப்பு அறிக்கை..!
MK Stalin : ‘தொடரும் கொலைகள் – போலீஸ் முதல்வர் விஜய் கட்டுப்பாட்டில் இல்லையா? திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பரபரப்பு அறிக்கை..!
Shai Hope: அடிச்ச அடி அப்டி..! ஷாய் ஹோப்பை ஏலத்தில் எடுக்க IPL அணிகள் போட்டா போட்டி!
Shai Hope: அடிச்ச அடி அப்டி..! ஷாய் ஹோப்பை ஏலத்தில் எடுக்க IPL அணிகள் போட்டா போட்டி!
Embed widget