மேலும் அறிய

Atlee Latest Tweet: "உங்களால் 1000 குடும்பங்களுக்கு நன்மை.." ஷாருக்கானுக்கு உருக்கமாக நன்றி சொன்ன அட்லீ..!

ஷாருகான் என்றும் ஒரு கிங் தான் என்றும், 30 நாட்களாக சென்னையில் படப்பிடிப்பில் கலந்து கொண்டதற்கு நன்றி என இயக்குனர் அட்லீ ட்வீட் செய்துள்ளார்.

ராஜா ராணி, மெர்சல், பிகில் போன்ற பல திரைப்படங்களை இயக்கிய அட்லீ தற்போது பாலிவுட் கிங் ஷாருகான் நடிப்பில் "ஜவான்" என பெயரிடப்பட்டுள்ள ஹிந்தி திரைப்படத்தை இயக்கி வருகிறார். ரெட் சில்லி நிறுவனத்தின் சார்பில் நடிகர் ஷாருகான் இப்படத்தை தயாரித்துள்ளார். கடந்த 30 நாட்களாக சென்னையில் நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்துள்ளது. இது குறித்து நடிகர்  ஷாருகான் ஒரு ட்வீட் பகிர்ந்து இருந்தார். 

 

Atlee Latest Tweet:

 

அட்லீ பிறந்தநாள் கொண்டாட்டம்:

ஜவான் திரைப்படத்தின் நடிகை நயன்தாரா மற்றும் விஜய் சேதுபதி ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மேலும் இப்படத்தில் கேமியோ ரோலில் நடித்துள்ளார் இளைய தளபதி விஜய். தெறி, மெர்சல் படங்களின் மூலம் விஜய்யும் அட்லியும் நெருங்கிய நண்பர்களாக மாறியுள்ள நிலையில், விஜய்யும் இதற்கு சம்மதம் தெரிவித்து நடித்துள்ளார். இயக்குனர் அட்லியின் பிறந்தநாள் கொண்டாட்டம் சில நாட்கள் முன்னர் நடைபெற்றது. இந்த பார்ட்டியில் நடிகர் ரஜினிகாந்த், விஜய், விஜய் சேதுபதி, நயன்தாரா, அனிருத் ரவிச்சந்திரன் கலந்து கொண்டனர். 

 

 

ஷாருகான் ட்வீட்:

மும்பை திரும்பியதும் நடிகர் ஷாருகான் தனது சோசியல் மீடியா மூலம் தென்னிந்திய நடிகர்களுக்கு தன்னுடைய வாழ்த்துக்களையும், அனுபவித்த அற்புதமான தருணங்களையும் பகிர்ந்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். தனது ட்விட்டர் பக்கம் மூல ஜவான் படக்குழுவினருக்கு ட்வீட் செய்து இருந்தார். அட்லீ மனைவி பிரியாவிற்கு அவரின் சிக்கன் 65க்காக நன்றி கூறினார். அந்த ட்விட்டிற்கு பதில் அளிக்கும் விதமாக தனது நன்றிகளை ட்வீட் மூலம் பகிர்ந்துள்ளார். 

 

 

அட்லீ ட்வீட் :

"நீங்கள் சென்னை வந்து படப்பிடிப்பில் கலந்து கொண்டதற்கு மிக்க நன்றி. என்னுடைய திரை கேரியரில் இந்த 30 நாள் ஷெட்யூலை என்னால் மறக்கவே முடியாது. உங்களால் 1000 குடும்பங்கள் பயனடைந்தனர். "கிங் என்றுமே கிங்". என்றுமே உங்கள் மீது மரியாதை இருக்கும். லவ் யூ சார்! விரைவில் மும்பையில் சந்திப்போம்" என ட்வீட் செய்து இருந்தார் இயக்குனர் அட்லீ. இந்த ட்வீட் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலானது. 

அனிருத் இசையமைக்கும் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார் ஜி.கே.விஷ்ணு.  மேலும் இப்படம் தமிழ், ஹிந்தி, தெலுங்கு, மலையாளம், , கன்னடம் என அனைத்து மொழிகளிலும் பான் இந்திய படமாக வரும் ஜூன் மாதம் 2ம் தேதி  வெளியாகவுள்ளது. பாலிவுட் சூப்பர் ஸ்டார் நடிக்கும் இப்படம் குறித்த அப்டேட்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.   

தலைப்பு செய்திகள்

அந்நியன் கூட மாதிரி இருக்க மாதிரி இருக்கும்...காதலன் குறித்து கொட்டி தீர்த்த அனுபமா பரமேஸ்வரன்
அந்நியன் கூட மாதிரி இருக்க மாதிரி இருக்கும்...காதலன் குறித்து கொட்டி தீர்த்த அனுபமா பரமேஸ்வரன்
“மூன்று மாதங்களிலேயே நிச்சயதார்த்தம் பற்றி பேசினார்கள்” – அனுபமா பரமேஸ்வரன் பகிர்ந்த அதிர்ச்சி அனுபவம்
“மூன்று மாதங்களிலேயே நிச்சயதார்த்தம் பற்றி பேசினார்கள்” – அனுபமா பரமேஸ்வரன் பகிர்ந்த அதிர்ச்சி அனுபவம்
இரண்டு ஆண்டு வலி..உடம்பெல்லாம் நடுக்கம்..காதலில் சந்தித்த டார்ச்சர் குறித்து அனுபமா
இரண்டு ஆண்டு வலி..உடம்பெல்லாம் நடுக்கம்..காதலில் சந்தித்த டார்ச்சர் குறித்து அனுபமா
Kamal Hassan : 67 ஆண்டுகள் சினிமா பயணம்… இந்திய சினிமாவில் கமல்ஹாசன் அறிமுகப்படுத்திய தொழில்நுட்பங்கள்!
Kamal Hassan : 67 ஆண்டுகள் சினிமா பயணம்… இந்திய சினிமாவில் கமல்ஹாசன் அறிமுகப்படுத்திய தொழில்நுட்பங்கள்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அரசு கஜானாவிற்கு 15,000 கோடி வந்தது உண்மையா? அந்தர் பல்டி அடித்த மரிய வில்சன் – இன்று சொன்னது என்ன?
அரசு கஜானாவிற்கு 15,000 கோடி வந்தது உண்மையா? அந்தர் பல்டி அடித்த மரிய வில்சன் – இன்று சொன்னது என்ன?
Vijay vs Udhayanidhi : சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
Marie Wilson: சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
Imran Khan News: இம்ரான் கான் இறந்துவிட்டாரா.?! உண்மை என்ன.? பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்ட முக்கிய அறிக்கை
இம்ரான் கான் இறந்துவிட்டாரா.?! உண்மை என்ன.? பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்ட முக்கிய அறிக்கை
Trump Great Escape: உணவு லாரியில் பதுங்கிச் சென்ற ட்ரம்ப்; ரகசியமாக விமானம் மாறியது ஏன்.? வெளியான பரபரப்பு தகவல்
உணவு லாரியில் பதுங்கிச் சென்ற ட்ரம்ப்; ரகசியமாக விமானம் மாறியது ஏன்.? வெளியான பரபரப்பு தகவல்
Honda Rebel 300 Vs RE Goan Classic 350: பாபர் பைக் பிரிவில் புதிய போட்டி.! என்ஃபீல்ட் கோவன் கிளாசிக் 350 உடன் மோதும் ஹோண்டா ரெபெல் 300
பாபர் பைக் பிரிவில் புதிய போட்டி.! என்ஃபீல்ட் கோவன் கிளாசிக் 350 உடன் மோதும் ஹோண்டா ரெபெல் 300
பெஸ்ட் மிட் சைஸ் SUV ஹூண்டாய் கிரெட்டா: மாதம் ரூ.16000 EMI-ல் சொந்தமாக்கலாம்- விவரம்!
பெஸ்ட் மிட் சைஸ் SUV ஹூண்டாய் கிரெட்டா: மாதம் ரூ.16000 EMI-ல் சொந்தமாக்கலாம்- விவரம்!
டாடா பஞ்ச் காருக்கு நேரடிப் போட்டி; அமோக விற்பனையில் ஹூண்டாய் எக்ஸ்டர்- விலை, மைலேஜ்!
டாடா பஞ்ச் காருக்கு நேரடிப் போட்டி; அமோக விற்பனையில் ஹூண்டாய் எக்ஸ்டர்- விலை, மைலேஜ்!
Embed widget