மேலும் அறிய

ஓடிடி ரிலீஸுக்கு தயாரானது சார்பட்டா பரம்பரை ! அப்செட்டில் ஆர்யா?

குத்துச்சண்டை வீரர் போல இருக்க வேண்டும் என்பதற்காக , கட்டு மஸ்தான தோற்றத்திற்காக கடுமையாக உழைத்துள்ளார் ஆர்யா

கொரோனா இரண்டாம் அலை பரவல்  காரணமாக தமிழகத்தில் திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன. மேலும் படப்பிடிப்புகளும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில் கடந்த மாதம் செய்யப்பட்ட ஊரடங்கு தளர்வுகளில் திரைத்துறைக்கும் சில விலக்குகள் அளிக்கப்பட்டன. அதன் அடிப்படையில் அரசின் நெறிகாட்டு வழிமுறைகளை பின்பற்றி , படப்பிடிப்புகளை நடத்திக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது. இதனால் பலரும் நிறுத்தி வைக்கப்பட்ட ஷூட்டிங்கை தொடங்க ஆயத்தமானார்கள் . இந்நிலையில்   திரையரங்குகள் மட்டும் தொடர்ந்து மூடப்பட்டுள்ளன. பாரதிராஜா போன்றவர்கள் திரையரங்குகளையும் கட்டுப்பாடுகளுடன் தொடங்க அனுமதிக்க வேண்டும் என தமிழக அரசிற்கு கோரிக்கை வைத்திருந்தனர். இதனையடுத்து கொரோனா பரவல் குறைந்து வருவதால் விரைவில் திரையரங்குகள் திறக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. எனவே சில படங்களின் தியேட்டர் வருகைக்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர் . அதில் ஒன்றுதான் பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி வரும் சார்பட்டா பரம்பரை. இந்த படத்தில் ஆர்யா குத்துச்சண்டை வீரராக நடித்துள்ளார்.

ஓடிடி ரிலீஸுக்கு தயாரானது சார்பட்டா பரம்பரை ! அப்செட்டில் ஆர்யா?

குத்துச்சண்டை வீரர் போல இருக்க வேண்டும் என்பதற்காக , கட்டு மஸ்தான தோற்றத்திற்காக கடுமையாக உழைத்துள்ளார் ஆர்யா. ஆர்யாவுடன் நடித்தவர்களும் இந்தப் படத்தின் கதைக்களம் எதார்த்தமாக இருக்க வேண்டும் என கடுமையாக மெனக்கெட்டுள்ளனர்.அவ்வபோது வெளியிடப்படும் சார்பாட்டா பரம்பரை  புரமோஷன் போஸ்டர்கள் படத்தின் மீதான எதிர்பார்ப்பை கூடுதலாக்கின. தியேட்டர்கள் திறந்த பின்னர் இந்த படம் முதல் வெளியீட்டு பட்டியலில் இருக்கும் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு, தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பு அதிர்சியை ஏற்படுத்தியுள்ளது. நேற்று  படம் ஒடிடியில் வெளியாகும் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. பிரபல ஒடிடி தளமான அமேசான் பிரைமில் சார்பாட்டா பரம்பரை  படத்தினை வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளனர். இது  ரசிகர்கர்கள் மத்தியில் சுணக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. விரைவில் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது.

ஓடிடி ரிலீஸுக்கு தயாரானது சார்பட்டா பரம்பரை ! அப்செட்டில் ஆர்யா?

ஆர்யா கதாநாயகனாக நடித்துள்ள இந்த படத்தில் துஷாரா விஜயன், சஞ்சனா நடராஜன், பசுபதி, கலையரசன், ஜான் விஜய் உள்ளிட்ட ஏராளமான நடிகர்கள் நடித்துள்ளனர். படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். இயக்குநர் பா.ரஞ்சித்தின் நீலம்  புரொடக்ஸன்ஸ் கே 9 ஸ்டூடியோஸ்  படத்தை தயாரிக்கிறது. படத்திற்கு முரளி ஒளிப்பதிவு செய்கிறார். பிரபல இரட்டை சண்டை பயிற்சி இயக்குநர்களான அன்பறிவு மாஸ்டர்ஸ்  படத்தின் அதிரடி காட்சிகளை இயக்கியுள்ளனர். முன்னதாக ஆர்யா நடிப்பில் உருவான டெடி படமும்   டிஸ்னி மற்றும் ஹாட்ஸ்டார் ஒடிடி தளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. திரையரங்கில் வெளியிட்டிருந்தால் நல்ல வசூலை குவித்திருக்கும் என பலராலும் பேசப்பட்ட நிலையில், ஆர்யாவின் அடுத்த படமும் ஒடிடியில் ரிலீஸ் செய்யப்படுவது அவருக்கு அப்செட் அடைய செய்துள்ளதாக ஆர்யாவிற்கு நெருக்கமானவர்கள் தெரிவிக்கின்றனர். 

தலைப்பு செய்திகள்

2 நிமிடப் காட்சிக்காக நோக்கியா அலுவலகத்திற்கே சென்ற ஷங்கர்! கண்ணும் கண்ணும் நோக்கியா பாடல் பின்னணி
2 நிமிடப் காட்சிக்காக நோக்கியா அலுவலகத்திற்கே சென்ற ஷங்கர்! கண்ணும் கண்ணும் நோக்கியா பாடல் பின்னணி
 “யுவர்ஸ் லவ்விங்லி” … இறுதிக்கட்டத்தை நெருங்கும் படப்பிடிப்பு!
 “யுவர்ஸ் லவ்விங்லி” … இறுதிக்கட்டத்தை நெருங்கும் படப்பிடிப்பு!
விஜய் மில்டனின் ‘தொண்டர் படை – Chapter 1: Gods and Soldiers’ படத்தின் முதல் பாடல் ‘நந்தினி’ வெளியீடு!
விஜய் மில்டனின் ‘தொண்டர் படை – Chapter 1: Gods and Soldiers’ படத்தின் முதல் பாடல் ‘நந்தினி’ வெளியீடு!
Karthigai Deepam: ரேஷன் கடைக்காரரை வைத்து புதிய சதி.. விசாரணையில் இறங்கிய கார்த்திக்! கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: ரேஷன் கடைக்காரரை வைத்து புதிய சதி.. விசாரணையில் இறங்கிய கார்த்திக்! கார்த்திகை தீபத்தில் இன்று

வீடியோ

Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!
அன்று இந்தியாவுக்கு நெருக்கடி இன்று ரஷ்யாவுடன் டீல் அந்தர் பல்டி அடித்த ட்ரம்ப்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay:
CM Vijay: "தளபதி விஜய்.." ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு சொன்னதும் அதிர்ந்த அரங்கம்!
Special Bus: ஆயுதபூஜைக்கு ஊருக்கு போறீங்களா? 15 ஆயிரம் பஸ் ரெடி - எந்த ஊருக்கு போக எங்கே ஏறணும்?
Special Bus: ஆயுதபூஜைக்கு ஊருக்கு போறீங்களா? 15 ஆயிரம் பஸ் ரெடி - எந்த ஊருக்கு போக எங்கே ஏறணும்?
Udhayanidhi: ஒரு யூனிட் மின்சாரம் ரூபாய் 35; நாட்டின் நம்பர் 1 டுபாக்கூர் விஜய் - விமர்சித்த உதயநிதி
Udhayanidhi: ஒரு யூனிட் மின்சாரம் ரூபாய் 35; நாட்டின் நம்பர் 1 டுபாக்கூர் விஜய் - விமர்சித்த உதயநிதி
CM Vijay: உள்ளே வரும் பாமக? திருமாவை சமாதானப்படுத்த முயற்சி! கழட்டிவிட அமைச்சர்கள் ஐடியா! விஜய் முடிவு என்ன?
CM Vijay: உள்ளே வரும் பாமக? திருமாவை சமாதானப்படுத்த முயற்சி! கழட்டிவிட அமைச்சர்கள் ஐடியா! விஜய் முடிவு என்ன?
அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் எல்.முருகன் - ஏன் இந்த திடீர் முடிவு?
அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் எல்.முருகன் - ஏன் இந்த திடீர் முடிவு?
திருநெல்வேலி, தூத்துக்குடியில் நாளை மறுநாள் (15.10.2026) மின்தடை ! முழு விவரம்!
திருநெல்வேலி, தூத்துக்குடியில் நாளை மறுநாள் (15.10.2026) மின்தடை ! முழு விவரம்!
கமிஷன் வாங்குவதற்காக ஆந்திரா சென்றுள்ளீர்களா? முதலமைச்சர் விஜய்க்கு முன்னாள் சபாநாயகர் கேள்வி
கமிஷன் வாங்குவதற்காக ஆந்திரா சென்றுள்ளீர்களா? முதலமைச்சர் விஜய்க்கு முன்னாள் சபாநாயகர் கேள்வி
சினிமா துறையினருக்கு அரசுப் பதவி... தகுதி இல்லையா? - ஆவேசமடைந்த பிரபல பாடகர்
சினிமா துறையினருக்கு அரசுப் பதவி... தகுதி இல்லையா? - ஆவேசமடைந்த பிரபல பாடகர்
Embed widget