மேலும் அறிய

Enemy Arya Vishal | நாங்க வந்துட்டோம்னு சொல்லு! - ’எனிமி’ படத்தின் புதிய அப்டேட்!

அரிமா நம்பி, இருமுகன் போன்ற ஆக்‌ஷன் படங்களின் இயக்குநர் ஆனந்த் ஷங்கர் ஆர்யா, விஷாலை வைத்து புதிய படம் இயக்க போவதாக அறிவித்தார்

பாலா இயக்கத்தில் வெளியான அவன் இவன் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்தது. எதார்த்த கதைக்களம் என்பதை தாண்டி ஆர்யா மற்றும் விஷால் மாறுபட்ட நடிப்பை வெளிப்படுத்தியிருந்தனர். இருவரும் இணைந்து நடித்திருந்த காட்சிகளை ரசிகர்கள் கொண்டாடினார்கள். ஆர்யா மற்றும் விஷால் இருவருமே நீண்ட கால நண்பர்கள்தான். திரையில் மட்டுமல்லாமல் திரைக்கு பின்னால் பல மேடைகளிலும் கூட  ஒருவரை ஒருவர் கலாய்த்துக்கொள்வதும் இயல்பான ஒன்றுதான். இந்த நிலையில் இவர்கள் இருவரின் காம்பினேஷனில் ஒரு திரைப்படம் வெளிவந்தால் சிறப்பாக இருக்கும் என்ற ஆசை விஷால், ஆர்யா ரசிகர்களுக்கு உண்டு. அதனை நிறைவேற்றும் வகையில் அரிமா நம்பி, இருமுகன் போன்ற ஆக்‌ஷன் படங்களின் இயக்குநர் ஆனந்த் ஷங்கர் ஆர்யா, விஷாலை வைத்து புதிய படம் இயக்க போவதாக அறிவித்தார்.

“எனிமி” என பெயர் வைக்கப்பட்ட  இந்த புதிய படத்தில் விஷால் ஹீரோவாகவும், ஆர்யா வில்லனாகவும் நடித்துள்ளனர். டிக்டாக் புகழ் மிருனாளினி கதாநாயகியாக நடித்துள்ளார். படத்தின் முதற்கட்ட படப்பிடிப்புகள் குறிப்பாக ஆர்யாவின் காட்சிகளை படமாக்கிவிட்டார் இயக்குநர். கொரோனா ஊரடங்கு காரணமாக கிடப்பில் போடப்பட்ட படங்களுள் “எனிமி” படமும் ஒன்றுதான்.

Enemy Arya Vishal | நாங்க வந்துட்டோம்னு சொல்லு! - ’எனிமி’ படத்தின் புதிய அப்டேட்!

இந்நிலையில் படத்தின் இறுதிக்காட்சிகளை படமாக்க படக்குழு ஆயத்தமாகியுள்ளது. வருகிற 9-ஆம் தேதி முதல் அடுத்தக்கட்ட படப்பிடிப்புகள் ஐதராபாத்தில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு வாரத்தில் படத்தின் காட்சிகளை எடுத்து முடித்து போஸ்ட் புரடொக்‌ஷன் வேலைகளை தொடங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. விஷால் தனது 31 வது படத்தின் படப்பிடிப்பிற்காக தற்போது ஐதராபாத் சென்றுள்ளார்.  தற்போது ஷெடியூல் செய்யப்பட்ட எனிமி படத்தின் படப்பிடிப்பையும் முடித்துக்கொண்டுதான் சென்னை திரும்புவார் என தெரிகிறது. விஷால் 31 படத்தை அறிமுக இயக்குநர் ஒருவருக்கு கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. சக்கரா படத்திற்கு பிறகு படங்களை எதிர்பார்த்து காத்திருந்த விஷால்  தற்போது எனிமி, விஷால்31 மற்றும் துப்பறிவாளன் 2 உள்ளிட்ட படங்களில் படு பிஸியாக நடித்துக்கொண்டிருக்கிறார். 

Enemy Arya Vishal | நாங்க வந்துட்டோம்னு சொல்லு! - ’எனிமி’ படத்தின் புதிய அப்டேட்!


அதேபோல ஆர்யா கோலிவுட்டின் பிஸி நடிகர்கள் பட்டியலில் இடம் பிடித்துள்ளார். ஒரு பக்கம் உடற்பயிற்சி, சைக்கிளிங் என ஃபிட்னஸில் ஆர்வமாக இருக்கும் ஆர்யா. மறுபக்கம் இயக்குனர் சக்தி சவுந்தரராஜன் டெடி இரண்டாம் பாகம், சுந்தர் சி-யின் அரண்மனை 3, விஷாலுடன் எனிமி, பா.இரஞ்சித்தின் சார்பட்டா பரம்பரை போன்ற படங்களில் நடித்து வருகிறார்.  இதில் வட சென்னையில் உள்ள குத்துச்சண்டை வீரர்களை மையமாக வைத்து எடுக்கப்பட்ட சார்பட்டா பரம்பரை  திரைப்படம்  அமேசான் பிரைம் ஒடிடி தளத்தில் வெளியாக இருப்பதாக சமீபத்தில் அறிவிப்பு வெளியானது. அதேபோல அரண்மனை 3 படமும் இறுதிக்கட்ட தயார் நிலையில் உள்ளது. இந்த திரைப்படம் தியேட்டர்கள் திறந்த பின்னர் முதற்கட்ட வெளியீட்டு பட்டியலில் உள்ளது குறிப்பிடத்தகக்கது.

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

ரூ.200 கோடி மோசடி வழக்கில் பிரபல நடிகைக்கு சம்மன்! - நவ.2 இல் ஆஜராக உத்தரவு
ரூ.200 கோடி மோசடி வழக்கில் பிரபல நடிகைக்கு சம்மன்! - நவ.2 இல் ஆஜராக உத்தரவு
நவம்பர் முதல் ஜனவரி வரை வரிசைகட்டும் தமிழ்ப் படங்கள்.. ரிலீஸுக்குத் தயாராகும் 20 படங்கள்!
நவம்பர் முதல் ஜனவரி வரை வரிசைகட்டும் தமிழ்ப் படங்கள்.. ரிலீஸுக்குத் தயாராகும் 20 படங்கள்!
ப்ரைம் வீடியோ டிஜிட்டல் தளத்தில் தமிழில் வெளியாகி இருக்கும்  'ஜிக்ரிஸ்'
ப்ரைம் வீடியோ டிஜிட்டல் தளத்தில் தமிழில் வெளியாகி இருக்கும்  'ஜிக்ரிஸ்'
*தெய்வ அருள்மனத்தோடு 'வேட்ட சாமி' படத்தின் 'சாமி அழைப்பு' லிரிக்கல் வீடியோ வெளியானது!*
*தெய்வ அருள்மனத்தோடு 'வேட்ட சாமி' படத்தின் 'சாமி அழைப்பு' லிரிக்கல் வீடியோ வெளியானது!*

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
School Leave: முரசு புயல்..! தொடர்ந்து கொட்டும் கனமழை - இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு
முரசு புயல்..! தொடர்ந்து கொட்டும் கனமழை - இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு
Chennai Rain: நள்ளிரவு முதல் கனமழை எச்சரிக்கை.. சென்னையில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறையா?
Chennai Rain: நள்ளிரவு முதல் கனமழை எச்சரிக்கை.. சென்னையில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறையா?
மஹிந்திரா XUV 3XO CNG எவ்வளவு மைலேஜ் கொடுக்கிறது? ரியல் வேர்ல்ட் மைலேஜ் டெஸ்ட் ரிப்போர்ட் இதோ
மஹிந்திரா XUV 3XO CNG எவ்வளவு மைலேஜ் கொடுக்கிறது? ரியல் வேர்ல்ட் மைலேஜ் டெஸ்ட் ரிப்போர்ட் இதோ
சென்னை, திருவள்ளூருக்கு ஆரஞ்ச் அலர்ட்! எங்கெல்லாம் கனமழை கொட்டப்போகுது... மக்களே உஷார்!
சென்னை, திருவள்ளூருக்கு ஆரஞ்ச் அலர்ட்! எங்கெல்லாம் கனமழை கொட்டப்போகுது... மக்களே உஷார்!
மகளிர் உதவித்தொகை ரூ.2,500 குறித்து அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த சூப்பர் அப்டேட்!
மகளிர் உதவித்தொகை ரூ.2,500 குறித்து அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த சூப்பர் அப்டேட்!
Saturn Transit: சனியின் நட்சத்திர பெயர்ச்சி! இந்த 5 ராசிகளுக்கு கோடீஸ்வர யோகம்.. உங்கள் ராசி இதில் இருக்கா?
Saturn Transit: சனியின் நட்சத்திர பெயர்ச்சி! இந்த 5 ராசிகளுக்கு கோடீஸ்வர யோகம்.. உங்கள் ராசி இதில் இருக்கா?
IND vs NZ: 7 ரன்னில் சதத்தை தவறவிட்ட சீஃபர்ட்! கிளென் பிலிப்ஸ் அதிரடியால் நியூசிலாந்து அபார வெற்றி!
IND vs NZ: 7 ரன்னில் சதத்தை தவறவிட்ட சீஃபர்ட்! கிளென் பிலிப்ஸ் அதிரடியால் நியூசிலாந்து அபார வெற்றி!
School Student: பள்ளி மாணவர்களுக்கு ரூ.1,25,000 வரை உதவித்தொகை: யாருக்கெல்லாம் கிடைக்கும்? விண்ணப்பிப்பது எப்படி?
School Student: பள்ளி மாணவர்களுக்கு ரூ.1,25,000 வரை உதவித்தொகை: யாருக்கெல்லாம் கிடைக்கும்? விண்ணப்பிப்பது எப்படி?
Embed widget