மேலும் அறிய

A R Rahman - Madhavan: ஓப்பன்ஹெய்மரை விட உங்க படம் தான் பிடிச்சிருந்தது... மாதவனை பாராட்டித் தள்ளிய ஏ.ஆர்.ரஹ்மான்!

‘ராக்கெட்ரி தி நம்பி எஃபெக்ட்’ திரைப்படம் 2022ஆம் ஆண்டு மே மாதம் நடைபெற்ற கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. இந்தியாவில் 2022, ஜூலை 1ஆம் தேதி இப்படம் வெளியானது.

இயக்குநரும் நடிகருமான மாதவன் இயக்கி தேசிய விருது வென்றுள்ள ‘ராக்கெட்ரி தி நம்பி எஃபெக்ட்’ படம் குறித்து இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் பாராட்டு தெரிவித்துள்ளார்.

69ஆவது தேசிய திரைப்பட விருதுகளுக்கான அறிவிப்பு கடந்த 24ஆம் தேதி வெளியானது. இதில் நடிகர் மாதவன் இயக்கி நடித்திருந்த ‘ராக்கெட்ரி தி நம்பி எஃபெக்ட்’ திரைப்படம் சிறந்த திரைப்படத்திற்கான தேசிய விருதை வென்றது. இதனைத் தொடர்ந்து பலரும் நடிகர் மாதவனுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: “வாழ்த்துகள் மாதவன். கேன்ஸ் திரைப்பட விழாவில் ராக்கெட்ரி திரைப்படம் பார்த்தபோது எனக்கு ஏற்பட்ட தாக்கம் இன்னும் நினைவில் இருக்கிறது. ஓப்பன்ஹெய்மர் படத்தை விட உங்கள் படம்தான் பிடித்திருந்தது” எனத் தெரிவித்துள்ளார்.

‘ராக்கெட்ரி தி நம்பி எஃபெக்ட்’ திரைப்படம் கடந்த 2022ஆம் ஆண்டு மே மாதம் நடைபெற்ற கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. இந்தியாவில் 2022 ஜூலை 1ஆம் தேதி இப்படம் வெளியானது. விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கை வரலாற்றைத் தழுவி உருவான இத்திரைப்படம், ரசிகர்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பைப் பெற்றது. 

நடிகர் மாதவன் 1996ஆம் ஆண்டு வெளியான ‘இஸ் ராத் கி சுபாக் நகின்’ என்ற இந்தி திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். தமிழில் வெளியான ‘அலைப்பாயுதே’ திரைப்படம் மூலம் இவர் கோலிவுட்டிற்கு வருகை தந்தார். முதல் தமிழ் திரைப்படத்திலேயே சிறந்த தென்னிந்திய அறிமுக நடிகருக்கான பிலிம்பேர் விருதை மாதவன் பெற்றார். 

மின்னலே, என்னவளே, டும், டும், அன்பே சிவம் உள்ளிட்ட பல்வேறு தமிழ் திரைப்படங்களில் மாதவன் நடித்துள்ளார். 2012ஆம் ஆண்டுக்கு பின் தமிழில் மாதவன் நடிப்பில் எந்தத் திரைப்படமும் வெளியாக நிலையில், 2016ஆம் ஆண்டு இவர் நடிப்பில் வெளியான இறுதிச்சுற்று திரைப்படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. 

நடிகர் மாதவன் அறிமுக காலக்கட்டத்தில் ஒரு சாக்லேட் பாயாக வலம் வந்தார். அவருக்கு ஏராளமான பெண் ரசிகைகள் இருந்தனர். அலைபாயுதே படத்தில் இவர் ரயில்வே ஸ்டேஷனில் ஷாலினியிடம் பேசும், “நீ அழகா இருக்கனு நினைக்கல, உன்னை லவ் பண்ணல. ஆனா, இதெல்லாம் நடந்துடுமோனு பயமா இருக்கு” எனும் டயலாக் செம ரீச் ஆனது.  தற்போதும் நடிகர் மாதவனின் நடிப்பில் தொடர்ச்சியாக படங்கள் வெளியாகவில்லை என்றாலும் அவருக்கென்று கோலிவுட் டூ பாலிவுட் வரை தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. 

மேலும் படிக்க

CM Stalin: ”ஊழலைப் பற்றி பேச பிரதமர் மோடிக்கு தகுதி உண்டா?.." கிழித்து தொங்கவிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்!

G. K. Mani: அச்சச்சோ.. மருத்துவமனையில் ஜி.கே.மணி.. நேரில் சென்று விசாரித்த ராமதாஸ்..! ஏன் என்னாச்சு?

 

தலைப்பு செய்திகள்

"யூடியூப்பில் இருந்து இயக்குநராக வருவது எளிதல்ல"... பாரி இளவழகனை பாராட்டிய பரிதாபங்கள் கோபி!
"இந்தப் படத்தில் இருந்து விலகுங்கள்" என்ற ஆலோசனை... அதை மீறி வெற்றி கண்ட 'அன்பே டயானா'!
Dhanush : இதக்கூடவா காப்பி அடிப்பீங்க..மகனை வைத்து தனுஷ் சொன்ன குட்டி கதை இங்கிருந்து சுட்டதா!
Dhanush : இதக்கூடவா காப்பி அடிப்பீங்க..மகனை வைத்து தனுஷ் சொன்ன குட்டி கதை இங்கிருந்து சுட்டதா!
24 படங்களுக்குப் பிறகுதான் முதல் வெற்றி... சியான் விக்ரமின் போராட்ட பின்னணி!
24 படங்களுக்குப் பிறகுதான் முதல் வெற்றி... சியான் விக்ரமின் போராட்ட பின்னணி!

வீடியோ

இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?
SHIFT ஆகும் CM விஜய் அலுவலகம்.. BEACH VIEW உடன் புதிய OFFICE
கரூர் கூட்ட நெரிசல் அரசுப் பணி கொடுத்த விஜய்..ரத்து செய்த மதுரை நீதிமன்றம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Tamil Thai Vazhthu: தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3-ம் இடமா? தவெக அரசின் நிலைப்பாடு என்ன? மார்க்சிஸ்ட் கேள்வி
Tamil Thai Vazhthu: தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3-ம் இடமா? தவெக அரசின் நிலைப்பாடு என்ன? மார்க்சிஸ்ட் கேள்வி
தவெக அரசுக்கு பட்டதாரி ஆசிரியர்களின் 18 கோரிக்கைகள்: பழைய ஓய்வூதியம், ஊக்க ஊதியம் எப்போது?
தவெக அரசுக்கு பட்டதாரி ஆசிரியர்களின் 18 கோரிக்கைகள்: பழைய ஓய்வூதியம், ஊக்க ஊதியம் எப்போது?
EPS Condemn Central Minister: மத்திய நீர்வளத்துறை இணை அமைச்சரின் பதிலால் காவிரி நதி நீர் பாயும் மாநில மக்கள் பதற்றம் - இபிஎஸ் அறிக்கை
மத்திய நீர்வளத்துறை இணை அமைச்சரின் பதிலால் காவிரி நதி நீர் பாயும் மாநில மக்கள் பதற்றம் - இபிஎஸ் அறிக்கை
Iran Vs Trump: ''நாங்க பேசனும்னு சொன்னோமா.? அவர் தானாவே போர நிறுத்திட்டார்''; ட்ரம்ப்பை கழுவி ஊற்றும் ஈரான்
''நாங்க பேசனும்னு சொன்னோமா.? அவர் தானாவே போர நிறுத்திட்டார்''; ட்ரம்ப்பை கழுவி ஊற்றும் ஈரான்
TVK - Congress Alliance : ‘பாஜகவின் ஆபரேஷன் TC’ தவெக – காங்கிரஸ் கூட்டணியை முறிக்க பலே திட்டம்..!
‘பாஜகவின் ஆபரேஷன் TC’ தவெக – காங்கிரஸ் கூட்டணியை முறிக்க பலே திட்டம்..!
Mekadatu Dam: தமிழக அனுமதி வேண்டாமா? மத்திய அமைச்சர் சொன்னது தவறு - பிரதமருக்கு CM விஜய் கடிதம்
தமிழக அனுமதி வேண்டாமா? மத்திய அமைச்சர் சொன்னது தவறு - பிரதமருக்கு CM விஜய் கடிதம்
Vaiko Book Release : ’புத்தக வெளியீட்டிற்கு டெல்லி செல்ல மறுத்த முதல்வர் விஜய்?’ வைகோ சொல்வது உண்மையா..? – காரணம் என்ன ?
’புத்தக வெளியீட்டிற்கு டெல்லி செல்ல மறுத்த முதல்வர் விஜய்?’ வைகோ பேச்சு உண்மையா..?
Tamil Thai Vazhthu:கடும் எதிர்ப்பு; 3ஆம் இடத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து- மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை. சர்ச்சை
Tamil Thai Vazhthu:கடும் எதிர்ப்பு; 3ஆம் இடத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து- மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை. சர்ச்சை
Embed widget