மேலும் அறிய

Anushka Shetty : அனுஷ்காவின் 50வது படம்! வெளியான வாவ் தகவல்... கம்பேக்  படமாக அமைய ரசிகர்கள் விருப்பம்...

Anushka shetty : நடிகை அனுஷ்கா நடிக்க இருக்கும் 50வது படம் குறித்த அப்டேட் ஒன்று வெளியாகி இணையத்தில் மிகவும் வைரலாகி வருகிறது.

தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை அனுஷ்கா ஷெட்டி. தெலுங்கு திரையுலகில் 2005ம் ஆண்டு நாகார்ஜூனா நடிப்பில் வெளியான 'சூப்பர்' திரைப்படம் மூலம் திரைத்துறைக்கு அறிமுகமான அனுஷ்கா, சுந்தர்.சி இயக்கத்தில் மாதவன் நடிப்பில் 2006ம் ஆண்டு வெளியான 'இரண்டு' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

Anushka Shetty : அனுஷ்காவின் 50வது படம்! வெளியான வாவ் தகவல்... கம்பேக்  படமாக அமைய ரசிகர்கள் விருப்பம்...

படங்களின் தேர்வு : 

ஆரம்ப காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் பெரிய அளவில் வரவேற்பை பெறாத அனுஷ்கா, 'அருந்ததி' திரைப்படத்தின் மூலம் தனது நடிப்பு திறமையை நிரூபித்தார். அது அவருக்கு நல்ல ஒரு அடையாளத்தையும் பெயரையும் பெற்று கொடுத்தது. அதன் தொடர்ச்சியாக நல்ல திரைக்கதை கொண்ட படங்களாக தேர்வு செய்து நடித்து வந்தார். சிங்கம், தெய்வ திருமகள், தாண்டவம், வேட்டைக்காரன், வானம், இரண்டாம் உலகம், என்னை அறிந்தால், லிங்கா என அனைத்து முன்னணி நடிகர்களின் ஜோடியாக நடித்துள்ளார்.

குறைந்த படவாய்ப்பு : 

'பாகுபலி' படத்தில் தேவசேனாவாக அபாரமான நடிப்பை வெளிப்படுத்தி அனைவரின் பாராட்டையும் பெற்றார். சைஸ் ஜீரோ படத்திற்காக தனது உடல் எடையை அதிகரித்து நடித்தார். அதற்கு பிறகு பட வாய்ப்புகள் குறைய துவங்கியதால் படங்களில் நடிப்பதில் இருந்து விலகி இருந்தார். கடந்த ஆண்டு 'மிஸ் ஷெட்டி மிஸ்டர் போலிஷெட்டி' படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்தார் அனுஷ்கா. அவர் சினிமாவில் இருந்து விலகி இருந்த போதிலும் ரசிகர்கள் மத்தியில் அவருக்கு இருந்த கிரேஸ் சிறிதும் குறையாமல் அப்படியே இருந்தது. 

Anushka Shetty : அனுஷ்காவின் 50வது படம்! வெளியான வாவ் தகவல்... கம்பேக்  படமாக அமைய ரசிகர்கள் விருப்பம்...

பரவிய வதந்தி : 

சில தினங்களுக்கு முன்னர் அனுஷ்கா திருமணம் குறித்த சில வதந்திகள் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாக பகிரப்பட்டு வந்தது. நடிகர் நாகார்ஜூனாவின் மகள் நாக சைதன்யாவுக்கும் அனுஷ்காவுக்கும் திருமணம் நடக்கப் போகிறது என வதந்திகள் பரவின.

அனுஷ்கா 50 :

தற்போது அனுஷ்கா ரசிகர்களுக்கு மேலும் ஒரு சந்தோஷமான செய்தி வெளியாகியுள்ளது.  தெலுங்கு இயக்குநர் க்ரிஷ் ஜகர்லமுடி இயக்கத்தில் இயக்கும் வுமன் சென்ட்ரிக் படத்தில் நடிகை அனுஷ்கா நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இது அவர் நடிக்கும் 50வது திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது. யு.வி. கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாக இருக்கும் இப்படம் குறித்த அதிகாரப்பூர்வமான தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இயக்குநர் க்ரிஷ் ஜகர்லமுடி இயக்கத்தில் வெளியான 'வானம்' திரைப்படத்தில் ஏற்கனவே அனுஷ்கா நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே உருவாக இருக்கும் இந்த புதிய படம் தமிழிலும் வெளியாக வாய்ப்புகள் இருக்கிறது என கூறப்படுகிறது. இது தமிழ் ரசிகர்களுக்கு சற்று ஆறுதல் அளித்துள்ளது.

ரசிகர்களின் விருப்பம் : 

மிகவும் திறமையான நடிகை அனுஷ்காவுக்கு நல்ல வாய்ப்புகள் அமைந்தால் அது அவரின் திரைப்பயணத்தில் ஒரு டர்னிங் பாயிண்டாக அமையும். அதன் மூலம் மீண்டும் அனுஷ்கா சிறப்பான ஒரு கம் பேக் கொடுப்பார் என்பது  அவரின் தீவிர ரசிகர்களின் எதிர்பார்ப்பு. 

தலைப்பு செய்திகள்

அந்நியன் கூட மாதிரி இருக்க மாதிரி இருக்கும்...காதலன் குறித்து கொட்டி தீர்த்த அனுபமா பரமேஸ்வரன்
அந்நியன் கூட மாதிரி இருக்க மாதிரி இருக்கும்...காதலன் குறித்து கொட்டி தீர்த்த அனுபமா பரமேஸ்வரன்
“மூன்று மாதங்களிலேயே நிச்சயதார்த்தம் பற்றி பேசினார்கள்” – அனுபமா பரமேஸ்வரன் பகிர்ந்த அதிர்ச்சி அனுபவம்
“மூன்று மாதங்களிலேயே நிச்சயதார்த்தம் பற்றி பேசினார்கள்” – அனுபமா பரமேஸ்வரன் பகிர்ந்த அதிர்ச்சி அனுபவம்
இரண்டு ஆண்டு வலி..உடம்பெல்லாம் நடுக்கம்..காதலில் சந்தித்த டார்ச்சர் குறித்து அனுபமா
இரண்டு ஆண்டு வலி..உடம்பெல்லாம் நடுக்கம்..காதலில் சந்தித்த டார்ச்சர் குறித்து அனுபமா
Kamal Hassan : 67 ஆண்டுகள் சினிமா பயணம்… இந்திய சினிமாவில் கமல்ஹாசன் அறிமுகப்படுத்திய தொழில்நுட்பங்கள்!
Kamal Hassan : 67 ஆண்டுகள் சினிமா பயணம்… இந்திய சினிமாவில் கமல்ஹாசன் அறிமுகப்படுத்திய தொழில்நுட்பங்கள்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அரசு கஜானாவிற்கு 15,000 கோடி வந்தது உண்மையா? அந்தர் பல்டி அடித்த மரிய வில்சன் – இன்று சொன்னது என்ன?
அரசு கஜானாவிற்கு 15,000 கோடி வந்தது உண்மையா? அந்தர் பல்டி அடித்த மரிய வில்சன் – இன்று சொன்னது என்ன?
Vijay vs Udhayanidhi : சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
Marie Wilson: சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
Imran Khan News: இம்ரான் கான் இறந்துவிட்டாரா.?! உண்மை என்ன.? பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்ட முக்கிய அறிக்கை
இம்ரான் கான் இறந்துவிட்டாரா.?! உண்மை என்ன.? பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்ட முக்கிய அறிக்கை
Trump Great Escape: உணவு லாரியில் பதுங்கிச் சென்ற ட்ரம்ப்; ரகசியமாக விமானம் மாறியது ஏன்.? வெளியான பரபரப்பு தகவல்
உணவு லாரியில் பதுங்கிச் சென்ற ட்ரம்ப்; ரகசியமாக விமானம் மாறியது ஏன்.? வெளியான பரபரப்பு தகவல்
Honda Rebel 300 Vs RE Goan Classic 350: பாபர் பைக் பிரிவில் புதிய போட்டி.! என்ஃபீல்ட் கோவன் கிளாசிக் 350 உடன் மோதும் ஹோண்டா ரெபெல் 300
பாபர் பைக் பிரிவில் புதிய போட்டி.! என்ஃபீல்ட் கோவன் கிளாசிக் 350 உடன் மோதும் ஹோண்டா ரெபெல் 300
பெஸ்ட் மிட் சைஸ் SUV ஹூண்டாய் கிரெட்டா: மாதம் ரூ.16000 EMI-ல் சொந்தமாக்கலாம்- விவரம்!
பெஸ்ட் மிட் சைஸ் SUV ஹூண்டாய் கிரெட்டா: மாதம் ரூ.16000 EMI-ல் சொந்தமாக்கலாம்- விவரம்!
டாடா பஞ்ச் காருக்கு நேரடிப் போட்டி; அமோக விற்பனையில் ஹூண்டாய் எக்ஸ்டர்- விலை, மைலேஜ்!
டாடா பஞ்ச் காருக்கு நேரடிப் போட்டி; அமோக விற்பனையில் ஹூண்டாய் எக்ஸ்டர்- விலை, மைலேஜ்!
Embed widget