மேலும் அறிய

Anushka Sharma | அனுஷ்கா ஷர்மா வெளியிட்ட மகளின் புகைப்படம்! இணையத்தில் வைரல்!

மகள் வாமிகாவின் புகைப்படத்தை வெளியிட்ட அனுஷ்கா ஷர்மாவின் பதிவு வைரலானது. பல திரை பிரபலங்கள் குழந்தையையும் விராட் கோலி, அனுஷ்கா சர்மாவையும் வாழ்த்தி வருகின்றனர்.

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையான அனுஷ்கா ஷர்மா, பான்ட் பாஜா பாராத், பிகே, ஏ தில் ஹய் முக்ஷில் சஞ்சு மற்றும் சுய் தாஹா போன்ற படங்களில் நடித்து புகழின் உச்சிக்குச் சென்றவர். மூன்று வருடங்களுக்கு முன்னால், இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியை திருமணம் செய்துகொண்டார். அதன் பிறகு இந்த வருடம் அவர் கர்ப்பமாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் அவருக்கு சில மாதங்கள் முன்பு ஒரு பெண் குழந்தை பிறந்தது. அந்த நேரத்தில் கிரிக்கெட்டுக்கு விடுப்பு எடுத்து கொண்டு மனைவி குழந்தையுடன் நேரத்தை செலவழித்தார் கோலி.

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by AnushkaSharma1588 (@anushkasharma)

இந்நிலையில், நடிகை அனுஷ்கா ஷர்மா அஷ்டமி தினத்தை ஒட்டி விராட் கோலி மற்றும் அவருடைய மகள் வாமிகாவுடன் ஒரு புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார், மேலும் இந்த பதிவு பிரபலங்கள் மற்றும் ரசிகர்களிடமிருந்து நல்ல ரெஸ்பான்ஸை பெற்று வருகிறது. பலரும் அந்த பதிவின் கீழ் அன்புகளை பொழியும் கமெண்டுகளை பதிவிட்டு வருகின்றனர். அனுஷ்கா தனது மகள் தன்னை ஒவ்வொரு நாளும் மேலும் மேலும் தைரியமாக ஆக்குவதாக பதிவின் கீழ் எழுதியுள்ளார். "ஒவ்வொரு நாளும் என்னை மேலும் மேலும் தைரியமாக ஆக்குகிறது. என் குட்டி வாமிகாவிடம் தெய்வத்தின் வலிமையை நீங்கள் எப்போதும் காணலாம். அஷ்டமி வாழ்த்துக்கள்" என்று அனுஷ்கா சர்மா எழுதியிருந்தார்.

பிரியங்கா சோப்ரா மற்றும் ரன்வீர் சிங் உட்பட பல பிரபலங்கள் தாயையும் சேயையும் கண்டு தங்கள் அன்பை பொழிந்தனர். ஆனால் தங்களது மகளின் புகைப்படத்தை வெளியிடுவதில் விருப்பமில்லை என்று இருவரும் கூறியிருந்த நிலையில் அனுஷ்கா ஷர்மா புகைப்படம் பதிவிட்டிருப்பதை குறித்து ரசிகர்கள் ஆச்சர்யமடைந்துள்ளனர். எங்களது மகளின் புகைப்படங்களை சமூக ஊடகத்தில் பதிவிட வேண்டாம் என்றும், பத்திரிகைகளுக்கும் இதே வேண்டுகோளை வைக்கிறோம் என்றும் விராட் கோலி, அனுஷ்கா ஷர்மா ஆகியோர் சில நாட்களுக்கு முன்பு கோரிக்கை வைத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Anushka Sharma | அனுஷ்கா ஷர்மா வெளியிட்ட மகளின் புகைப்படம்! இணையத்தில் வைரல்!

அனுஷ்கா தனது குழந்தையை எப்படி வளர்க்க திட்டமிட்டுள்ளார் என்பது பற்றி முன்னரே விரிவாக பேசியிருந்தார். "நாங்கள் குழந்தையை பொது சமூகத்தில் பெரும் ஊடக வெளிச்சத்தோடு செலிபிரிட்டி குழந்தையாக வளர்க்க விரும்பவில்லை. எங்கள் குழந்தையை சமூக ஊடகங்களில் பிரபலப்படுத்த நாங்கள் திட்டமிடவில்லை. சமூக ஊடகங்களில் இயங்குவதும் இயங்காததும் அந்தந்த தனி நபர்களால் எடுக்கப்பட வேண்டிய முடிவு, அந்தந்த குழந்தைகளால் எடுக்கப்பட வேண்டிய முடிவு என்று நான் நினைக்கிறேன். எங்கள் குழந்தை என்பதற்காக எந்த குழந்தையையும் விட ஒரு படி மேலே இருந்துவிட கூடாது. இதனை செய்வது கண்டிப்பாக கடினமாக இருக்கும், ஆனால் நாங்கள் அதைத்தான் பின்பற்ற விரும்புகிறோம்," என்று நடிகை அனுஷ்கா ஷர்மா கூறியிருந்தார்.

அதேபோல விராட் கோலியும் வாமிகாவின் முகத்தை காண ஆவலோடு உள்ளோம், பெயருக்கு அர்த்தம் கூறுங்கள் என்று கேட்ட ரசிகரிடம் "வாமிகா என்பது துர்கை கடவுளின் மற்றொரு பெயர்" எனக் கூறினார். மேலும் பதிலளித்த அவர், "மகளின் புகைப்படத்தை சமூக ஊடகங்களில் பதிவேற்றம் செய்யக் கூடாது என நானும் எனது மனைவியும் முடிவு செய்துள்ளோம். எனது மகளுக்கு சமூக ஊடகம் என்றால் என்ன? என தெரிந்த பிறகுதான், அவளின் புகைப்படத்தை இணையத்தில் பதிவேற்றுவோம்" எனத் தெரிவித்திருந்தார். 

தலைப்பு செய்திகள்

Karthigai Deepam: விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்.. அவசரம் அவசரமாக தரையிறங்கிய ரேவதி - கைகொடுத்த கார்த்திக் மாஸ்டர் ப்ளான்
Karthigai Deepam: விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்.. அவசரம் அவசரமாக தரையிறங்கிய ரேவதி - கைகொடுத்த கார்த்திக் மாஸ்டர் ப்ளான்
விஜய்யைத் தொடர்ந்து தனுஷும் அதிரடி! வெளியான மாஸ் அறிவிப்பு... ரசிகர்கள் உற்சாகம்!
விஜய்யைத் தொடர்ந்து தனுஷும் அதிரடி! வெளியான மாஸ் அறிவிப்பு... ரசிகர்கள் உற்சாகம்!
தனுஷ் மீது மீண்டும் நடவடிக்கையா? தயாரிப்பாளர் சங்கத்தில் பரபரப்பு
தனுஷ் மீது மீண்டும் நடவடிக்கையா? தயாரிப்பாளர் சங்கத்தில் பரபரப்பு
18 ஆண்டுகளுக்குப் பிறகு தனது படத்தை ப்ரோமோட் செய்யப்போகும் அஜித் !
18 ஆண்டுகளுக்குப் பிறகு தனது படத்தை ப்ரோமோட் செய்யப்போகும் அஜித் !

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather News: சென்னையில் இன்றும் மழை தொடருமா? எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் இன்றும் மழை தொடருமா? எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
"ஓ.பி.எஸ்.ஐ சகோதரன் போல ஜெயலலிதா பார்த்தார்.." மனம் திறந்த முன்னாள் அதிமுக எம்பி
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
Archana Kalpathi : ’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு கொடுத்த முதல்வர் விஜய்..!
’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அரசு பொறுப்பு..!
M.Ed. admission : அரசு கல்லூரிகளில் M.Ed. மாணவர் சேர்க்கை.? விண்ணப்பிப்பது எப்படி.? இதோ ஈசி வழிமுறை
அரசு கல்லூரிகளில் M.Ed. மாணவர் சேர்க்கை.? விண்ணப்பிப்பது எப்படி.? இதோ ஈசி வழிமுறை
Archana Kalpathi Agoram : பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
E20 பெட்ரோல் பிரச்சினையா? கவலையே வேணாம்! ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
E20 பெட்ரோல் பிரச்சினையா? கவலையே வேணாம்! ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
CV Shanmugam Vs EPS: தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
Embed widget