மேலும் அறிய

Annaatthe | இணையத்தில் சட்ட விரோதமாக வெளியானது `அண்ணாத்த’!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இன்று `அண்ணாத்த’ படம் திரையரங்குகளில் வெளியானதோடு, Tamil blasters என்ற இணைய தளத்திலும் சட்ட விரோதமாக வெளியாகியுள்ளது. இதனால் ரசிகர்கள் கடும் அதிர்ச்சிக்கு ஆளாகியுள்ளனர். 

பெரும் எதிர்பார்ப்புகளுக்குப் பிறகு திரையரங்குகளில் தீபாவளி பண்டிகையை ஒட்டி வெளியாகியுள்ளது `அண்ணாத்த’ திரைப்படம். இயக்குநர் சிவா இயக்கியுள்ள இந்தப் படத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, சூரி, பிரகாஷ் ராஜ், குஷ்பூ, மீனா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் `அண்ணாத்த’ திரைப்படத்தைத் தயாரித்துள்ளது.

`அண்ணாத்த’ படம் தற்போது தமிழ்நாடு மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி ஓடி வருகிறது. மேலும், இந்தப் படம் கலவையான விமர்சனங்களையும் பெற்று வருகிறது. இந்நிலையில், `அண்ணாத்த’ படம் இணையத்தில் சட்ட விரோதமாக வெளியிடக்கூடாது எனக் கடந்த வாரம் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. சுமார் 385 கோடி ரூபாய் பொருட் செலவில் உருவாகி இருப்பதால், சட்ட விரோதமாக இணைய தளங்களில் வெளியானால் பெரும் நஷ்டத்தைச் சந்திக்கும் எனக் கூறப்பட்டு, `அண்ணாத்த’ படம் இணைய தளங்களில் வெளியிடுவதற்குத் தடைவிதிக்க வேண்டும் என சன் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தது. 

Annaatthe | இணையத்தில் சட்ட விரோதமாக வெளியானது `அண்ணாத்த’!

சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் `அண்ணாத்த’ படத்தை சட்ட விரோதமாக இணைய தளங்களில் வெளியிடுவதற்குத் தடை விதித்து உத்தரவிட்டார். இந்நிலையில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இன்று `அண்ணாத்த’ படம் திரையரங்குகளில் வெளியானதோடு, Tamil blasters என்ற இணைய தளத்திலும் சட்ட விரோதமாக வெளியாகியுள்ளது. திரையரங்கு ஒன்றில் காணொளிப் பதிவு செய்யப்பட்டிருப்பதுபோல இந்தப் படம் இணையத்தில் வெளியாகியுள்ளது. இதனால் தயாரிப்பாளர்கள் தரப்பிலும், ரசிகர்களும் கடும் அதிர்ச்சிக்கு ஆளாகியுள்ளனர். 

எனினும் `அண்ணாத்த’ படம் குறித்து பல்வேறு பிரபலங்கள் தங்கள் கருத்துகளைத் தங்கள் ட்விட்டர் பக்கங்களில் வெளியிட்டு வருகின்றனர். 

தலைப்பு செய்திகள்

"ஒருவர் வேலை செய்தால், மற்றொருவர் குழந்தைகளுடன் இருப்போம்"... பெற்றோர்களாக சூர்யா–ஜோதிகா எடுத்த முடிவு
'கருப்பு' படத்திற்காக கடைசி நேரத்தில் வாங்கிய கடன்... மனம் திறந்த சூர்யா!
'கருப்பு' படத்திற்காக கடைசி நேரத்தில் வாங்கிய கடன்... மனம் திறந்த சூர்யா!
*விஜய் ஆண்டனியின் நூறு சாமி படத்தின் ஓடிடி தேதி அறிவிப்பு வெளியானது
*விஜய் ஆண்டனியின் நூறு சாமி படத்தின் ஓடிடி தேதி அறிவிப்பு வெளியானது
Karthigai Deepam: சந்திரகலா ஆட்கள் ரகசிய க்ளிக்.. ஆதாரத்தை பார்த்த சாமுண்டீஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: சந்திரகலா ஆட்கள் ரகசிய க்ளிக்.. ஆதாரத்தை பார்த்த சாமுண்டீஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Budget 2026: தமிழ்நாடு அரசின் மொத்த வருவாய், செலவுகள் - பட்ஜெட்டில் எவ்வளவு துண்டு விழுந்தது? கடன் விவரங்கள்
தமிழ்நாடு அரசின் மொத்த வருவாய், செலவுகள் - பட்ஜெட்டில் எவ்வளவு துண்டு விழுந்தது? கடன் விவரங்கள்
TN Budget 2026 : ‘இல்லை, இல்லை’ பட்ஜெட்டில் விஜயின் வாக்குறுதிகள் என்னென்ன இடம்பெறவில்லை..?
‘இல்லை, இல்லை’ பட்ஜெட்டில் இடம்பெறாத தவெக வாக்குறுதிகள்..!
TN Budget 2026: பட்ஜெட்டில் பள்ளி, உயர் கல்வித்துறை நிதி குறைப்பு; மாணவர்களுக்கு ஷாக்! பெரும் பின்னடைவு?
TN Budget 2026: பட்ஜெட்டில் பள்ளி, உயர் கல்வித்துறை நிதி குறைப்பு; மாணவர்களுக்கு ஷாக்! பெரும் பின்னடைவு?
TN Budget 2026: குடிநீர், மழைநீர், போக்குவரத்து..! சென்னையின் வளர்ச்சி & மேம்பாட்டிற்கான பட்ஜெட் அறிவிப்புகள்
குடிநீர், மழைநீர், போக்குவரத்து..! சென்னையின் வளர்ச்சி & மேம்பாட்டிற்கான பட்ஜெட் அறிவிப்புகள்
Tamil Nadu Budget 2026 Highlights: தமிழ்நாடு TO கர்நாடகா வரை மெட்ரோ ரயில் சேவை - பட்ஜெட்டில் தகவல்
தமிழ்நாடு TO கர்நாடகா வரை மெட்ரோ ரயில் சேவை - பட்ஜெட்டில் தகவல்
TN Budget 2026 Highlights: தமிழக பட்ஜெட்: முதல்வர் விஜய் அறிவித்த டாப் 10 திட்டங்கள்! தங்கம் முதல் லேப்டாப் வரை!
TN Budget 2026 Highlights: தமிழக பட்ஜெட்: முதல்வர் விஜய் அறிவித்த டாப் 10 திட்டங்கள்! தங்கம் முதல் லேப்டாப் வரை!
TN Budget 2026: நிதியை அள்ளிக் கொடுத்த CM விஜய்..! ஒவ்வொரு துறைக்கும் எத்தனை கோடிகள் - தமிழக பட்ஜெட் விவரங்கள்
நிதியை அள்ளிக் கொடுத்த CM விஜய்..! ஒவ்வொரு துறைக்கும் எத்தனை கோடிகள் - தமிழக பட்ஜெட் விவரங்கள்
மகளீருக்கு பட்ஜெட்டில் குஷியான அறிவிப்புகள்.! என்னென்ன தெரியுமா.? லிஸ்ட் இதோ..
மகளீருக்கு பட்ஜெட்டில் குஷியான அறிவிப்புகள்.! என்னென்ன தெரியுமா.? லிஸ்ட் இதோ..
Embed widget