மேலும் அறிய

Beast | பீஸ்ட் பட அப்டேட்.. ரசிகரின் கேள்விக்கு பதிலளித்த அனிருத்!

பீஸ்ட் படம் தொடர்பான அப்டேட்டை இசையமைப்பாளர் அனிருத் தனது இன்ஸ்டா லைவில் குறிப்பிட்டுள்ளார்

Beast update:

கோலமாவு கோகிலா, டாக்டர் ஆகிய படங்களை இயக்கிய நெல்சன் இயக்கத்தில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் ‘ பீஸ்ட்’ இந்த படத்தில் நடிகர் விஜய் நடித்து வருகிறார்.   விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே  ஒப்பந்தமாகியுள்ளார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். மனோஜ் பரமஹம்சா நடனம் அமைக்கிறார். படத்தொகுப்பை நிர்மல் மேற்கொள்ள உள்ளார்.

படத்தில் நடிகர்கள் விடிவி கணேஷ், யோகி பாபு, ஷைன் டாம் சாக்கோம், லிலிபுட் ஃபரூக்கி,  அபர்ணா தாஸ், அன்குர் அஜித் விகால் ஆகியோரும் ஒப்பந்தமாகியுள்ளனர். இந்த அறிவிப்பை தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ச் வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. படத்தின் ஃபஸ்ட்லுக் மற்றும் டைட்டில் போஸ்டர்கள் விஜய்யின் பிறந்த நாளன்று  வெளியாகி சமூக வலைத்தளங்களில் டிரெண்டானது.  இந்நிலையில் படம் தொடர்பான அப்டேட்டை இசையமைப்பாளர் அனிருத் பேசியுள்ளார். தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் லைவில் பேசிய அனிருத்திடம் பீஸ்ட் படம் தொடர்பாக அப்டேட்டை குறிப்பிடுமாறு ரசிகர்கள் கோரிக்கை விடுத்தனர். அது குறித்து பேசிய அனிருத், '' பீஸ்ட் அப்டேட் வரும்.. படக்குழு கொஞ்சம் நேரமெடுத்து அப்டேட்டை அறிவிப்பார்கள்'' எனத் தெரிவித்தார். 

Beast | பீஸ்ட் பட அப்டேட்.. ரசிகரின் கேள்விக்கு பதிலளித்த அனிருத்!

 பீஸ்ட் படத்தின் முதற்கட்ட ஷூட்டிங் ஜார்ஜியாவில் நடந்து முடிந்த நிலையில் ,கொரோனா இரண்டாம் அலை காரணமாக அடுத்தடுத்த படப்பிடிப்புகள் தள்ளி வைக்கப்பட்டது. இந்நிலையில் அரசு அறிவித்த அறிவிப்புகளை பின்பற்றி இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையிலும் ,  மூன்றாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் உள்ள ஈசிஆர் பகுதிகளில் நடைப்பெற்றது தவிர மால் ஒன்றில் செட் அமைத்து படத்தின் முக்கியமான சண்டைக்காட்சிகளும் படமாக்கப்பட்டன. ஏற்கனவே படத்தின் ஒரு பாடல் மற்றும்  சில காட்சிகள் படமாக்கப்பட்டுவிட்டதாக செய்திகள் வெளியானதை பார்த்தோம். ஆக்‌ஷன் டிராமாவாக உருவாகி வரும் இந்த படத்தில் விஜய் ஒரு ரகசிய ஏஜெண்டாக நடிப்பதாக கூறப்படுகிறது. பீஸ்ட் படத்தில் சிவக்கார்த்திகேயன் ஒரு பாடலை எழுதி, அவரே பாட உள்ளார்.  

இயக்குநர் செல்வராகவன் படத்தில் இணைய இருப்பதாகவும் செய்திகள் வெளியானது.அவர் ஒரு வொயிட் கால வில்லனாக நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இவரை தவிர  சார்பட்டா படத்தின் மிகவும் புகழ்பெற்ற கதாபாத்திரமான டான்சிங் ரோஸ் கதாபாத்திரத்தில் நடித்த ஷபீர் கல்லக்கல் தற்போது மூன்றாவது வில்லனாக பீஸ்ட் படத்தில் விஜய்யுடன் இணைகிறார். ஏற்கனவே, மிகப்பெரிய நட்சத்திர பட்டாளங்கள் உள்ள பீஸ்ட் படக்குழுவில் ‘டான்சிங் ரோஸ்’ ஷபீர்  இணைந்திருப்பது ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

காட்சி ஊடகத்துறையில் 7 ஆண்டுகளுக்கு மேலாக அனுபவம் கொண்டவர். சோஷியல் மீடியா இன்சார்ஜ், டிக்கர் இன்சார்ஜ், கன்டண்ட் ரைட்டர், கன்டண்ட் இன் சார்ஜ் என பல்வேறு பிரிவுகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர் / பணியாற்றி வருபவர். அனைத்து பிரிவு செய்திகளையும் திறம்பட கையாளக் கூடிய நபர். குறிப்பாக சினிமா ரிவியூ, டெக்னாலஜி, ஆட்டோமொபைல் பிரிவுகளை அதிகம் பின்பற்றி எழுதுபவர். தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் கதை, கவிதை, கட்டுரை என தொடர்ந்து எழுதி வருபவர்.
Read More

தலைப்பு செய்திகள்

Rajinikanth Old Video: இதுவரை பார்க்காத ரஜினியின் வீடியோ.. சூப்பர்ஸ்டார் எவ்ளோ க்யூட்டா இருக்காரு!
Rajinikanth Old Video: இதுவரை பார்க்காத ரஜினியின் வீடியோ.. சூப்பர்ஸ்டார் எவ்ளோ க்யூட்டா இருக்காரு!
திருப்பூர் சுப்பிரமணியம் சொன்ன அந்த டைரக்டர் இவரா? நம்ம லிஸ்ட்லயே இல்லயே!
திருப்பூர் சுப்பிரமணியம் சொன்ன அந்த டைரக்டர் இவரா? நம்ம லிஸ்ட்லயே இல்லயே!
SK 27: சிவகார்த்திகேயன் படத்திற்கு இசையமைக்கும் சாய் அபியங்கர்..! அப்போ ப்ளாக்பஸ்டர் கன்ஃபர்மா?
SK 27: சிவகார்த்திகேயன் படத்திற்கு இசையமைக்கும் சாய் அபியங்கர்..! அப்போ ப்ளாக்பஸ்டர் கன்ஃபர்மா?
Karthigai Deepam: மாட்டிக்கொண்ட மாயா, மகேஷ்.. உஷாரான கார்த்திக்! அடுத்து நடக்கப்போவது என்ன?
Karthigai Deepam: மாட்டிக்கொண்ட மாயா, மகேஷ்.. உஷாரான கார்த்திக்! அடுத்து நடக்கப்போவது என்ன?

வீடியோ

Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!
அன்று இந்தியாவுக்கு நெருக்கடி இன்று ரஷ்யாவுடன் டீல் அந்தர் பல்டி அடித்த ட்ரம்ப்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Governor Rajendra Arlekar: தமிழகத்திற்கு முழு நேர ஆளுநராக அர்லேகர் நியமனம்.. யார் இவர்?
TN Governor Rajendra Arlekar: தமிழகத்திற்கு முழு நேர ஆளுநராக அர்லேகர் நியமனம்.. யார் இவர்?
CM Vijay: கோவை செல்லும் முதல்வர் விஜய்.. பயணத் திட்டம் விவரம் இதோ!
CM Vijay: கோவை செல்லும் முதல்வர் விஜய்.. பயணத் திட்டம் விவரம் இதோ!
DMK: தவெக போடும் பிஸ்கட்டுக்காக திமுகவை விமர்சிக்க வேண்டாம்! ரஜினி ஸ்டைலில் மாணிக்கம் தாகூருக்கு பதிலடி!
DMK: தவெக போடும் பிஸ்கட்டுக்காக திமுகவை விமர்சிக்க வேண்டாம்! ரஜினி ஸ்டைலில் மாணிக்கம் தாகூருக்கு பதிலடி!
EPS-க்கு எதிராக ரகசிய மீட்டிங்..! அதிமுக-வில் விரைவில் வெடிக்கப்போகும் பூகம்பம்!
EPS-க்கு எதிராக ரகசிய மீட்டிங்..! அதிமுக-வில் விரைவில் வெடிக்கப்போகும் பூகம்பம்!
Holiday: தொடர்ந்து 4 நாட்கள் பள்ளிகள் விடுமுறை... குஷியில் மாணவர்கள், அரசு ஊழியர்கள்!
Holiday: தொடர்ந்து 4 நாட்கள் பள்ளிகள் விடுமுறை... குஷியில் மாணவர்கள், அரசு ஊழியர்கள்!
ரூபாய் 3.5 லட்சம்தான் பட்ஜெட்.. வாகன ஓட்டிகளின் ட்ரீம் பைக் Harley-Davidson X440 T..! சிறப்புகள் இத்தனையா?
ரூபாய் 3.5 லட்சம்தான் பட்ஜெட்.. வாகன ஓட்டிகளின் ட்ரீம் பைக் Harley-Davidson X440 T..! சிறப்புகள் இத்தனையா?
விருதுநகர் கல்லூரி மாணவர்களுக்கு நேரடி பேருந்து சேவை: அமைச்சர் கீர்த்தனா தொடங்கி வைத்தார்!
விருதுநகர் கல்லூரி மாணவர்களுக்கு நேரடி பேருந்து சேவை: அமைச்சர் கீர்த்தனா தொடங்கி வைத்தார்!
Gold Rate: தங்கம் வாங்க இதுதான் சரியான நேரம்.! மாலை நேரத்தில் இன்ப அதிர்ச்சி கொடுத்த விலை!
Gold Rate: தங்கம் வாங்க இதுதான் சரியான நேரம்.! மாலை நேரத்தில் இன்ப அதிர்ச்சி கொடுத்த விலை!
Embed widget