மேலும் அறிய

Lal Salaam Heroine: ரெண்டாவது படமே ரஜினியுடன்! லால் சலாம் படத்தில் நடித்துள்ள இளம் நடிகை: யார் இந்த அனந்திகா?

'லால் சலாம்' படத்தில் கதாநாயகியாக நடித்துள்ள அனந்திகா சனில் குமார் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்

லால் சலாம்

லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில், விஷ்ணு விஷால், விக்ராந்த், செந்தில், ஜீவிதா ராஜசேகர், தம்பி ராமையா, தங்கதுரை, தன்யா பாலகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள திரைப்படம் 'லால் சலாம்'.

நடிகர் ரஜினிகாந்த் மொய்தீன் பாய் என்ற கதாபாத்திரத்தில் கேமியோ ரோலில் நடித்துள்ளார். ரஜினிகாந்த் கேமியோ ரோலில் நடித்திருப்பதாலே இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இசைப்புயல் ஏ. ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் இயக்குநர் ஐஷ்வர்யா ரஜினிகாந்த் மற்றும் ரஜினிகாந்தின் பேச்சு உருக்கமானதாக இருந்தது. 

இந்த நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த் நடிகர் விஜய்க்கும் தனக்கும் இடையில் எந்தவிதமான போட்டியும் இல்லை என்பதை திட்டவட்டமாக பேசியுள்ளார். ஜெயிலர் ஆடியோ லாஞ்சில் தான் பேசியதை ரசிகர்கள் தவறாக எடுத்துக் கொண்டதாக அவர் விளக்கமளித்தார்.

ரஜினி படத்தின் நான் ஹீரோ

இந்த இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஷ்ணு விஷால் பேசியபோது “ இந்தப் படத்தில் எனக்கு நிறைய பாக்கியங்கள் அமைந்திருக்கின்றன. குறிப்பாக சூப்பர் ஸ்டார் படத்தில் நான் ஹீரோ என்பது எனக்கு மிகப்பெரிய பெருமை. மேலும்  நடிகர் விக்ராந்துடன் நடித்த அனுபவம் சிறப்பாக இருந்தது” என்று கூறினார்.

கவனத்தை ஈர்த்த அனந்திகா சனில்குமார்

லால் சலாம் இசை வெளியீட்டு விழாவில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த மற்றொரு நபர் இந்தப் படத்தில் கதாநாயகியாக நடித்துள்ள அனந்திகா சனில்குமார். 2000 இல் பிறந்த அனந்திகா சனில்குமார் ஒரு 2கே கிட். 2022ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான ராஜமுந்திரி படத்தின் மூலம் அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து மேட் படத்தில் நடித்தார். தமிழில் விக்ரம் பிரபு நடித்த ரெய்டு படத்தில் கதாநாயகியாக நடித்தார். இந்தப் படம் சரியான வரவேற்பைப் பெறாததால் தமிழில் சரியான வரவேற்பு அவருக்கு அமையவில்லை.

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Ananthika Sanilkumar (@ananthika_sanilkumar)

தற்போது லால் சலாம் படத்தில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக நடித்துள்ளார் அனந்திகா சனில் குமார். தமிழில் நடிக்கும் இரண்டாவது படத்திலேயே ரஜினிகாந்துடன் இணைந்து நடிக்கு வாய்ப்பு அவருக்கு அமைந்திருக்கிறது. வரும்  பிப்ரவரி மாதம் லால் சலாம் படம் திரைக்கு வர இருக்கிறது. இந்தப் படம் தமிழில் அவருக்கு ஒரு சிறப்பான அங்கீகாரத்தைப் பெற்றுத் தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

தலைப்பு செய்திகள்

"முடிந்தால் இதைச் செய்து காட்டுங்கள்!"... சவால்விட்ட சிவாஜி... எம்ஜிஆர் கொடுத்த பதில்
வேகமெடுக்கும் காவேரி பிரச்சனை..கர்நாடக திரையரங்குகளில் இருந்து நீக்கப்படும் ஜனநாயகன்
வேகமெடுக்கும் காவேரி பிரச்சனை..கர்நாடக திரையரங்குகளில் இருந்து நீக்கப்படும் ஜனநாயகன்
மூன்று தீபாவளி வரை ஹவுஸ்ஃபுல்... இதுவரை எந்த தமிழ் படமும் முறியடிக்காத சாதனை!
மூன்று தீபாவளி வரை ஹவுஸ்ஃபுல்... இதுவரை எந்த தமிழ் படமும் முறியடிக்காத சாதனை!
Sasikumar:
Sasikumar: "விஜய் முதலமைச்சரானதில் ஒரே ஒரு வருத்தம்தான்.." இயக்குனர் சசிகுமார் சொன்னது ஏன்?

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Annamalai letter to Vijay : 500 மீட்டர் சுற்றளவில் 129 டாஸ்மாக் கடைகள்.! CM விஜய்க்கு ஆதாரத்தோடு லிஸ்ட்- அண்ணாமலை அதிரடி
500 மீட்டர் சுற்றளவில் 129 டாஸ்மாக் கடைகள்.! சிஎம் விஜய்க்கு ஆதாரத்தோடு லிஸ்ட்- அண்ணாமலை அதிரடி
கர்நாடகம் போனால் காவிரியை கையோடு கொண்டுவந்திடலாம் என நினைச்சுட்டாரோ.! சிஎம் விஜய்யை விளாசிய ஸ்டாலின்
கர்நாடகம் போனால் காவிரியை கையோடு கொண்டுவந்திடலாம் என நினைச்சுட்டாரோ.! சிஎம் விஜய்யை விளாசிய ஸ்டாலின்
ரூ. 11 கோடியில் சிஎம் விஜய்க்கான புதிய அலுவலகம்.! என்னென்ன வசதிகள் .?
ரூ. 11 கோடியில் சிஎம் விஜய்க்கான புதிய அலுவலகம்.! என்னென்ன வசதிகள் .?
Narendra Modi: மன்னிச்சு விடுறேன்.. கெட்ட வார்த்தை பேசிய போராட்டக்காரர்கள்.. வீடியோ வெளியிட்ட மோடி!
Narendra Modi: மன்னிச்சு விடுறேன்.. கெட்ட வார்த்தை பேசிய போராட்டக்காரர்கள்.. வீடியோ வெளியிட்ட மோடி!
Rahul Gandhi: தமிழ்நாடு வரும் ராகுல்காந்தி.. விஜயை சந்திக்காதது ஏன்? .. இதுதான் பிளான்!
Rahul Gandhi: தமிழ்நாடு வரும் ராகுல்காந்தி.. விஜயை சந்திக்காதது ஏன்? .. இதுதான் பிளான்!
Thoppu venkatachalam : மாஜி அமைச்சர் தோப்பு வெங்கடாச்சலம் பதவியை பறித்த ஸ்டாலின்.! இது தான் காரணமா.?
மாஜி அமைச்சர் தோப்பு வெங்கடாச்சலம் பதவியை பறித்த ஸ்டாலின்.! இது தான் காரணமா.?
ஸ்கார்பியோ கார், கறி விருந்து, எம்எல்ஏ சீட்டுக்கு 10 கோடி வசூல் ? விஜயபாஸ்கரை ரவுண்டு கட்டும் அதிமுக
ஸ்கார்பியோ கார், கறி விருந்து, எம்எல்ஏ சீட்டுக்கு 10 கோடி வசூல் ? விஜயபாஸ்கரை ரவுண்டு கட்டும் அதிமுக
TASMAC shops : 717 டாஸ்மாக் கடைகளுக்கு பதிலாக FL-2 மதுபான கிளப் தொடங்க அனுமதி.? விஜய் அரசை வெளுத்தெடுக்கும் நயினார்
717 டாஸ்மாக் கடைகளுக்கு பதிலாக FL-2 மதுபான கிளப்.? விஜய் அரசை வெளுத்தெடுக்கும் நயினார்
Embed widget