மேலும் அறிய
Amy Jackson: கடும் குளிரில் எமி ஜாக்சனிடம் கியூட் புரோபோஸ் செய்த ஹாலிவுட் நடிகர்..!
Amy Jackson: எமி ஜாக்சனிற்கு கியூட் புரோபோஸ் செய்து நிச்சயம் செய்தார் ஹாலிவுட் நடிகர் எட் வெஸ்ட்விக்.

ஹாலிவுட் நடிகர் ட் வெஸ்ட்விக் உடன் எமி ஜாக்சன்
Amy Jackson: ஹாலிவுட் நடிகர் எட் வெஸ்ட்விக்-ஐ திருமணம் செய்து கொள்ள நடிகை எமி ஜாக்சன் நிச்சயம் செய்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
இங்கிலாந்தை சேர்ந்த எமி ஜாக்சன், 2010ம் ஆண்டு வெளிவந்த மதராசப்பட்டினம் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். ஏ.எல். விஜய் இயக்கிய இந்த படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக, பிரிட்டிஷ் வம்சாவளியை சேர்ந்தவராக எமி ஜாக்சன் நடித்திருந்தார். சுதந்திர போராட்டத்தையும், பிரிட்டிஷாரின் அடக்குமுறையையும், காதலையும் கூறிய மதராசப்பட்டினம் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. முதன் முதலில் தமிழில் அறிமுகமான எமி ஜாக்சன் தனது அழகால் தனி ரசிகர்கள் கூட்டத்தை தக்க வைத்துக் கொண்டார்.
மதராசபட்டினம் படத்தை தொடர்ந்து தமிழில் ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடித்த பிரமாண்டமான ஐ படத்தில் எமி ஜாக்சன் நடித்திருந்தார். அடுத்ததாக தாண்டவம், கெத்து, தெறி, ரஜினி நடித்த 2.0 உள்ளிட்ட படங்களில் நடித்து அசத்தினார். தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு, இந்தி மொழி படங்களில் அடித்த எமி ஜாக்சன் தமிழ் திரையுலகிற்கு சில ஆண்டுகள் ஓய்வு கொடுத்தார். பின்னர், அண்மையில் அருண் விஜய் நடிப்பில் வெளிவந்த மிஷன் சாப்டர்-1 படத்தில் எமி ஜாக்சன் நடித்திருந்தார். படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனங்கள் வந்து வரவேற்பை பெற்றது.
இதற்கிடையே 2019ம் ஆண்டு ஜார்ஜ் பனாயிடோ என்பவரை காதலித்து வந்த எமி ஜாக்சன் அவருடன் மோதிரம் மாற்றி நிச்சயம் செய்து கொண்டு அதே ஆண்டு ஒரு ஆண் குழந்தையை பெற்றெடுத்தார். திருமணம் செய்து கொள்ளாமல் தனது காதலருடன் வாழ்ந்து வந்த எமி ஜாக்சன் சில காரணங்களால் ஜார்ஜை பிரிந்தார். பின்னர், 2021ம் ஆண்டில் இருந்து ஹாலிவுட் நடிகர் எட் வெஸ்ட்விக்குடன் எமி ஜாக்சன் பழகி வந்தார். இருவரும் தங்கள் காதலை 2022ம் ஆண்டு உறுதி செய்தனர்.
இந்த நிலையில் ஹாலிவுட் நடிகர் எட் வெஸ்ட்விக்கை எமி ஜாக்சன் நிச்சயம் செய்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. பனி பிரதேசத்தில் உயரமான பாலத்தின் மீது நின்று கொண்டு எமி ஜாக்சனிற்கு மோதிரம் அணிவித்த்து நடிகர் எட் வெஸ்ட்விக் நிச்சயம் செய்துள்ளார். அவரின் இந்த இன்ப அதிர்ச்சியால் மகிழ்ந்த எமி ஜாக்சன் திருமணத்திற்கான நிச்சயத்தை செய்துள்ளார்.
View this post on Instagram
எமி ஜாக்சனின் இன்ஸ்டகிராம் பதிவை பார்த்த நடிகைகள் கியாரா அத்வானி, ஸ்ருதிஹாசன் உள்ளிட்ட பலர் வாழ்த்து கூறியுள்ளனர்.
மேலும் படிக்க: Vidamuyarchi: அஜர்பைஜான் ஷூட்டிங் ஓவர்.. விறுவிறுப்பான கட்டத்தில் அஜித்தின் விடாமுயற்சி படம்!
சமீபத்திய பொழுதுபோக்கு செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் பொழுதுபோக்கு செய்திகளைத் (Tamil Entertainment News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
Advertisement


646
Active
28426
Recovered
157
Deaths
Last Updated: Sat 12 July, 2025 at 10:55 am | Data Source: MoHFW/ABP Live Desk
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
மயிலாடுதுறை
உலகம்
ஆட்டோ
Advertisement
Advertisement