![metaverse](https://cdn.abplive.com/imagebank/metaverse-top.png)
Ameer Pavani Joins: மீண்டும் ஜோடியாகும் அமீர் பாவனி.. எங்கு தெரியுமா.. வைரலாகும் வீடியோ..!
மீண்டும் நிகழ்ச்சி ஒன்றில் நடிகை பாவனியும் அமீரும் இணைய இருக்கின்றனர்.
![Ameer Pavani Joins: மீண்டும் ஜோடியாகும் அமீர் பாவனி.. எங்கு தெரியுமா.. வைரலாகும் வீடியோ..! Ameer Pavani Joins again bigg boss jodigal 2 Ameer Pavani Joins: மீண்டும் ஜோடியாகும் அமீர் பாவனி.. எங்கு தெரியுமா.. வைரலாகும் வீடியோ..!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/05/02/f14533ebd5595268cbe40699af4eea7c_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு மக்கள் கொடுத்த வரவேற்பால் அந்த நிகழ்ச்சியை அடுத்தடுத்த சீசன்களுக்கு கொண்டு சென்றது. அதன் படி அண்மையில் பிக்பாஸ் சீசன் 5 -ன் நிகழ்ச்சியும், பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியும் நடந்து முடிந்தது. அதில் பிக்பாஸ் சீசன் 5- ல் ராஜூ ஜெயமோகனும், அட்ல்டிமேட் நிகழ்ச்சியில் பாலாவும் டைட்டில் வின்னராக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
View this post on Instagram
பிக்பாஸ் சீசன் 5 பொருத்தவரை போட்டியாளர்களாக உள்ளே இருந்த அமீரும் பாவனியும் காதலித்ததாக சொல்லப்பட்டது. நிகழ்ச்சி முடிந்து வெளியே வந்த பின்னரும் பேட்டிகளில் ஒன்றாகவே வலம் வந்தனர்.
View this post on Instagram
இந்த நிலையில் இவர்கள் அடுத்ததாக விஜய் டிவியின் பிக்பாஸ் ஜோடிகள் 2 நிகழ்ச்சியில் ஜோடியாக பங்கேற்க இருக்கின்றனர். இவர்கள் மட்டுமல்லாது இவர்களுடன் சேர்ந்து போட்டியாளர்களாக , ஐக்கி பெர்ரி - தேவ், வேல்முருகன் - இசைவாணி, அபிஷேக் - ஸ்ருதி, சுஜா - அவரது கணவர் சிவகுமார், ஆர்த்தி அவரது கணவர் கணேஷ், தாமரை அவரது கணவர் பார்த்தசாரதி மற்றும் டேனி ஆகியோர் இணைகின்றார்கள் என்று தெரிகிறது. இந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளராக ராஜூ ஜெயமோகனும் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் இரண்டாவது இடத்தை பிடித்த பிரியங்காவும் தொகுப்பாளர்களாக நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள். பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் அனிதா - ஷாருக் ஜோடி டைட்டில் வின்னராக தேர்ந்தெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது
நடனத்தின் பிரமாண்டம் அடுத்த வாரம் ஆரம்பமாகிறது.. 🔥 #BB ஜோடிகள் 2 - மே 8 முதல் ஞாயிறுதோறும் இரவு 7:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBJodigal2 #BiggBossJodigal2 #VIjayTelevision #VijayTv pic.twitter.com/fUksmUS6fx
— Vijay Television (@vijaytelevision) April 30, 2022
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![metaverse](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)