Amanda Cerny Poses Naked: ரன்வீருக்கு ஆதரவு! நிர்வாணமாக சூப்பர் மார்கெட்டில் நடமாடிய அமெரிக்க பிரபலம்!
திரைப்பட நடிகர் ரன்வீர் சிங்கின் சர்ச்சைக்குரிய போட்டோ ஷூட்டுக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக அமெரிக்க மாடல் அமண்டா செர்னி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் நடத்திய நிர்வாண போட்டோஷூட் தான் இப்போது சமூக வலைத்தளத்தில் மிகவும் வைரலாகி உள்ளது. ரன்வீர் சிங் தான் நடிக்கும் ஒவ்வொரு படத்திலும் தனது பன்முக நடிப்பால் ரசிகர்களின் மனதை கொள்ளை கொள்வார்.
சமீபத்தில் இந்திய அணி உலகக்கோப்பை வென்றதை மையமாக வைத்து எடுக்கப்பட்ட 83 திரைப்படம் அமோக வெற்றி பெற்றது. இதில் ரன்வீர் சிங் அப்போதைய இந்திய அணியின் கேப்டனாக இருந்த கபில் தேவ் கதாபாத்திரத்தில் மிக சிறப்பாக நடித்திருந்ததை தொடர்ந்து அவருக்கு பாராட்டுகள் குவிந்தன.
சினிமாவில் நடிக்கும் அதே சமயம் அவருக்கு மாடலிங் மீதும் ஈர்ப்பு அதிகம். அதற்காக அவர் அவ்வப்போது போட்டோஷூட் நடத்துவது வழக்கம். அதற்காக தனது ஹேர் ஸ்டைல், ட்ரெஸ்ஸிங் என பல வெரைட்டி காட்டுவார். அந்த வகையில் சமீபத்தில் அவர் நடத்திய நிர்வாணா போட்டோஷூட் அவரின் ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
View this post on Instagram
முன்னதாக 1972ஆம் ஆண்டு அமெரிக்காவின் காஸ்மோபோலிட்டன் இதழுக்கு ஹாலிவுட் நடிகர் பர்ட் ரெனால்ட்ஸ் (Burt Reynolds) கொடுத்த புகழ்பெற்ற நிர்வாண ஃபோட்டோஷூட்டை நினைவுகூறும் வகையில் ரன்வீர் சிங் நிர்வாண ஃபோட்டோஷூட்டை நடத்தியிருந்தார்.
சமூகவலைதளங்களில் அவரின் இந்த துணிச்சலான செயலை சிலர் விரும்பினாலும் பலர் மீம்ஸ் மூலம் ரன்வீரை காயப்படுத்தி வருகின்றனர். மேலும், பெண்களின் உணர்வுகளை புண்படுத்தும் வகையில் நடந்து கொண்டதாக நடிகர் ரன்வீர் சிங்கிற்கு எதிராக போராட்டங்கள் நடத்தப்பட்டு, நாடு முழுவதும் பல எஃப்ஐஆர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்த நிலையில், திரைப்பட நடிகர் ரன்வீர் சிங்கின் சர்ச்சைக்குரிய போட்டோ ஷூட்டுக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக அமெரிக்க மாடல் அமண்டா செர்னி செய்த காரணம் தற்போது இணையத்தில் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
அதில், அமண்டா செர்னி மளிகை ஷாப்பிங்கிற்குச் செல்லும் போது எந்த ஆடையும் இல்லாமல் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும், அவர் பதிவிட்ட கேப்ஷனில் ”ஹேக் செய்ய வேண்டாம்” என பதிவிட்டுள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்