மேலும் அறிய

Boycott Brahmastra : ஆலியா பட்டால் பிரம்மாஸ்திராவிற்கு வந்த சோதனை...! அமீர்கான் படத்தின் கதிதானா..? வேதனையில் படக்குழு..!

பாலிவுட்டில் பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகியுள்ள பிரம்மாஸ்திரா படத்திற்கு எதிராக இணையதளங்களில் பாய்காட் பிரம்மாஸ்திரா என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டாகி வருவதால் படக்குழு அதிர்ச்சியடைந்துள்ளது.

பாலிவுட் திரையுலகின் முன்னணி நாயகர்களில் ஒருவராக வலம் வருபவர் ரன்பீர் கபூர். இவரது நடிப்பில் பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகியுள்ள திரைப்படம் பிரம்மாஸ்திரா. இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல மொழிகளிலும் உலகம் முழுவதும் வரும் செப்டம்பர் 9-ந் தேதி வெளியாக உள்ளது.
சுமார் 500 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு படத்தின் நாயகியாலே பெரும் சிக்கல் உருவாகியுள்ளது. இந்த படத்தில் நாயகியாக ரன்பீர் கபூர் மனைவி அலியாபட் நடித்துள்ளார். பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வரும் அலியாபட் சமீபத்தில் அளித்த பேட்டிதான் பிரம்மாஸ்திரம் படத்திற்கு தற்போது  எமனாக மாறியுள்ளது. 


Boycott Brahmastra : ஆலியா பட்டால் பிரம்மாஸ்திராவிற்கு வந்த சோதனை...! அமீர்கான் படத்தின் கதிதானா..? வேதனையில் படக்குழு..!

அதாவது, அவர் அந்த பேட்டியில் “ என்னைப் பிடிக்காவிட்டால் என்னைப் பார்க்காதீர்கள்” என்று கூறுகிறார். அவரது அந்த பேட்டியின் வீடியோவை இணையவாசிகள் தற்போது சமூக வலைதளங்களில் ட்ரெண்டாக்கி வருகின்றனர். மேலும், இந்த வீடியோவுடன் பாய்காட் பிரம்மாஸ்திரா என்ற ஹேஷ்டேக்கையும் வைரலாக்கி வருகின்றனர். இதனால், படக்குழு மிகப்பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளது. 

பாய்காட் பிரம்மாஸ்திரா, பாய்காட் பாலிவுட் என்ற ஹேஷ்டேக்குகளுடன் இந்த வீடியோவை டுவிட்டரில் பகிர்ந்து வரும் நெட்டிசன்கள் அலியா பட்டை வறுத்தெடுத்து வருகின்றனர். நெட்டிசன்கள் சிலர் 500 கோடியில் உருவாகியுள்ள பிரம்மாஸ்திரா ப்ளாக்பஸ்டர் அல்ல,. பிளாப்பஸ்டர் என்று கிண்டலாக பதிவிட்டுள்ளனர். படத்தின் வெளியீட்டிற்கு இன்னும் சில, நாட்களே உள்ள நிலையில், தற்போது டுவிட்டரில் பாய்காட் பிரம்மாஸ்திரா ட்ரெண்டாகி வருவதால் படக்குழு என்ன செய்வதென்று தெரியாமல் விழிபிதுங்கியுள்ளனர். 

ஏனென்றால், பாலிவுட்டின் உச்சநட்சத்திரமான அமீர்கான் நடிப்பில் வெளியான லால்சிங் சத்தா திரைப்படத்தை, அமீர்கானின் கடந்த கால பேச்சை சுட்டிக்காட்டி பாய்காட் லால்சிங் சத்தா என்று ட்ரெண்டாக்கியதால், படம் படுதோல்வியடைந்துள்ளது. இதன் காரணமாக படக்குழு அச்சமடைந்துள்ளது. மூன்று பாகங்களாக உருவாக உள்ள இந்த படத்தின் முதல் பாகத்தில் பாலிவுட்டின் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன், நாகர்ஜூனா, மௌனி ராய் ஆகியோர் நடித்துள்ளனர். அயன் முகர்ஜி இந்த படத்தை இயக்கியுள்ளார். பிரம்மாஸ்திரா படம் பிரம்மாண்ட வெற்றி பெறுமா..? அல்லது லால்சிங் சத்தா படத்தின் நிலைதானா? என்பது ரசிகர்கள் கையில்தான் உள்ளது.

 

தலைப்பு செய்திகள்

"ஒருவர் வேலை செய்தால், மற்றொருவர் குழந்தைகளுடன் இருப்போம்"... பெற்றோர்களாக சூர்யா–ஜோதிகா எடுத்த முடிவு
'கருப்பு' படத்திற்காக கடைசி நேரத்தில் வாங்கிய கடன்... மனம் திறந்த சூர்யா!
'கருப்பு' படத்திற்காக கடைசி நேரத்தில் வாங்கிய கடன்... மனம் திறந்த சூர்யா!
*விஜய் ஆண்டனியின் நூறு சாமி படத்தின் ஓடிடி தேதி அறிவிப்பு வெளியானது
*விஜய் ஆண்டனியின் நூறு சாமி படத்தின் ஓடிடி தேதி அறிவிப்பு வெளியானது
Karthigai Deepam: சந்திரகலா ஆட்கள் ரகசிய க்ளிக்.. ஆதாரத்தை பார்த்த சாமுண்டீஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: சந்திரகலா ஆட்கள் ரகசிய க்ளிக்.. ஆதாரத்தை பார்த்த சாமுண்டீஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi Stalin: “நான் சிங்கிள் மீனிங்கில் தான் பேசினேன், பயப்பட மாட்டேன், மீண்டும் பேசுவேன்“; உதயநிதி அதிரடி பேட்டி
“நான் சிங்கிள் மீனிங்கில் தான் பேசினேன், பயப்பட மாட்டேன், மீண்டும் பேசுவேன்“; உதயநிதி அதிரடி பேட்டி
CM Vijay : ’கைது செய்யப்பட்ட உதயநிதி – போராட்டத்தில் இறங்கிய திமுகவினர்’ கூலாக ஆய்வுக் கூட்டம் நடத்திய முதல்வர் விஜய்..!
’கைது செய்யப்பட்ட உதயநிதி’ கூலாக ஆய்வுக் கூட்டம் நடத்திய முதல்வர் விஜய்..!
CM Vijay VS DMK: உதயநிதி ஸ்டாலின் கைது.. திமுக-வினருக்கு முதலமைச்சர் விஜய்யின் வார்னிங்!
CM Vijay VS DMK: உதயநிதி ஸ்டாலின் கைது.. திமுக-வினருக்கு முதலமைச்சர் விஜய்யின் வார்னிங்!
CLAT: கிளாட் நுழைவுத் தேர்வுக்கான பதிவு தொடக்கம்: அக். 31 வரை விண்ணப்பிக்கலாம்; முழு விவரங்கள்
CLAT: கிளாட் நுழைவுத் தேர்வுக்கான பதிவு தொடக்கம்: அக். 31 வரை விண்ணப்பிக்கலாம்; முழு விவரங்கள்
MK STALIN : தொடர்ச்சியான ஆணவம், அழிவை விரைவுபடுத்தும் .! தவெகவின் பாசிச தன்மைக்கு விழுந்த அடி- ஸ்டாலின்
தொடர்ச்சியான ஆணவம், அழிவை விரைவுபடுத்தும் .! தவெகவின் பாசிச தன்மைக்கு விழுந்த அடி- மு.க.ஸ்டாலின்
Oppo A7 Pro Max: 10,000mAh மெகா பேட்டரியுடன் தனது முதல் 5ஜி ஃபோனை வெயிட்டாக இறக்கிய ஓப்போ.! விலை, அம்சங்கள் என்ன.?
10,000mAh மெகா பேட்டரியுடன் தனது முதல் 5ஜி ஃபோனை வெயிட்டாக இறக்கிய ஓப்போ.! விலை, அம்சங்கள் என்ன.?
Trump Vs Pakistan: சீன் போட்டு சுற்றிவந்த பாகிஸ்தான்; மூக்கை உடைத்துவிட்ட ட்ரம்ப்; பல்பு வாங்கிய ஷாபாஸ்-முனீன்.! நடந்தது என்ன.?
சீன் போட்டு சுற்றிவந்த பாகிஸ்தான்; மூக்கை உடைத்துவிட்ட ட்ரம்ப்; பல்பு வாங்கிய ஷாபாஸ்-முனீன்.! நடந்தது என்ன.?
BYD Festive Offers India: ஒன்னு ரெண்டு இல்ல, ஏகப்பட்ட ஆஃபர்.! பண்டிகைக்கால சலுகைகளை வாரி வழங்கும் BYD; ஐடியா இருந்தா முந்துங்க.!
ஒன்னு ரெண்டு இல்ல, ஏகப்பட்ட ஆஃபர்.! பண்டிகைக்கால சலுகைகளை வாரி வழங்கும் BYD; ஐடியா இருந்தா முந்துங்க.!
Embed widget