மேலும் அறிய

Akash Murali: மீண்டும் தமிழுக்கு திரும்பும் விஷ்ணுவர்தன்: ஹீரோவாக அறிமுகமாகும் ஆகாஷ் முரளி!

படத்தில் நடிகர்கள் ஆகாஷ் முரளி மற்றும் அதிதி ஷங்கர், தவிர சரத் குமார், பிரபு, குஷ்பு சுந்தர் உள்ளிட்டோரும் நடிக்க உள்ளனர்.

XB ஃபிலிம் கிரியேட்டர்ஸ் சேவியர் பிரிட்டோ வழங்கும், இயக்குநர் விஷ்ணு வரதன் இயக்கத்தில் ஆகாஷ் முரளி-அதிதி ஷங்கர் நடிக்கும் புதிய படம் பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தனித்துவமான உள்ளடக்கம் மற்றும் ஸ்டைலான திரையாக்கம் மூலம் படத்தின் தரத்தை உயர்த்துவதில் புகழ் பெற்றவர் இயக்குநர் விஷ்ணு வர்தன். 'அறிந்தும் அறியாமலும்', 'பட்டியல்', 'பில்லா' மற்றும் 'ஆரம்பம்' போன்ற படங்களின் வெற்றி மூலம் அவரது கிராஃப் சீராக உயர்ந்து வருகிறது.

தேசிய விருது பெற்ற 'ஷேர்ஷா' திரைப்படத்தின் மூலம் பாலிவுட்டில் முத்திரை பதித்த பிறகு, அவர் இப்போது தனது அடுத்த படத்திற்காக நடிகர் சல்மான் கானுடன் இணைந்துள்ளார். இது அவரின் சினிமா பயணத்தில் அடுத்த மைல்கல். இப்போது, ​​விஷ்ணு வர்தன் மீண்டும் மனதைக் கவரும் ரொமாண்டிக் என்டர்டெய்னர் மூலம் தமிழ் சினிமாவுக்கு மீண்டும் வருகிறார்.

திரையில் தனது ஹீரோக்களின் வசீகரத்தை மேம்படுத்துவதில் விஷ்ணு வர்தன் பெயர் பெற்றவர். அந்த மேஜிக்கை இப்போது மறைந்த நடிகர் முரளியின் மகனும் நடிகர் அதர்வா முரளியின் தம்பியுமான ஆகாஷ் முரளிக்கு கொடுக்க உள்ளார்.

இந்தப் புதிய படத்தில் ஆகாஷ் முரளி கதாநாயகனாக அறிமுகமாகிறார். இப்படத்தை XB ஃபிலிம் கிரியேட்டர்ஸின் சேவியர் பிரிட்டோ தயாரிக்கிறார். இதற்கு முன்பு இவர் தயாரிப்பில், விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான 'மாஸ்டர்' திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. இந்தப் புதிய படத்தின் படப்பிடிப்பு போர்ச்சுகல் மற்றும் ஸ்பெயினில் உள்ள பல்வேறு நகரங்களில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்தியாவில் பெங்களூரு மற்றும் சென்னையில் படப்பிடிப்பு நடந்தது. தமிழில் விஷ்ணுவர்தனின் கம்பேக் படம் அழகான காதல் கதையாக இருக்கும்.

படத்தில் நடிகர்கள் ஆகாஷ் முரளி மற்றும் அதிதி ஷங்கர், தவிர சரத் குமார், பிரபு கணேசன், குஷ்பு சுந்தர், கல்கி கோச்லின், ஷிவ் பண்டிட், ஜார்ஜ் கோரா மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா மற்றும் விஷ்ணு வர்தன் ஆகியோர் இணைந்து முன்பு பணிபுரிந்த படங்களின் பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றது. இப்போது அதே கூட்டணி இந்தப் படத்தில் மீண்டும் இணைந்துள்ளனர். கேமரூன் பிரைசன் ஒளிப்பதிவு செய்கிறார் மற்றும் ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு பணிகளை கவனிக்கிறார். ஃபெடரிகோ கியூவா ஆக்‌ஷன் காட்சிகளை இயக்க, அனு வர்தன் ஆடைகளை வடிவமைக்கிறார். தினேஷ் பாடல்களுக்கு நடனம் அமைக்கிறார்.

சேவியர் பிரிட்டோவுடன் சினேகா பிரிட்டோ இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்துக்கு முத்துராமலிங்கம் நிர்வாகத் தயாரிப்பாளராகப் பணியாற்றுகிறார்.

தலைப்பு செய்திகள்

Karthigai Deepam: கனடா போகப்போகும் ரேவதி.. சாமுண்டீஸ்வரி போடும் ப்ளான் - அடுத்து நடக்கப்போவது என்ன?
Karthigai Deepam: கனடா போகப்போகும் ரேவதி.. சாமுண்டீஸ்வரி போடும் ப்ளான் - அடுத்து நடக்கப்போவது என்ன?
"ஒருவர் வேலை செய்தால், மற்றொருவர் குழந்தைகளுடன் இருப்போம்"... பெற்றோர்களாக சூர்யா–ஜோதிகா எடுத்த முடிவு
'கருப்பு' படத்திற்காக கடைசி நேரத்தில் வாங்கிய கடன்... மனம் திறந்த சூர்யா!
'கருப்பு' படத்திற்காக கடைசி நேரத்தில் வாங்கிய கடன்... மனம் திறந்த சூர்யா!
*விஜய் ஆண்டனியின் நூறு சாமி படத்தின் ஓடிடி தேதி அறிவிப்பு வெளியானது
*விஜய் ஆண்டனியின் நூறு சாமி படத்தின் ஓடிடி தேதி அறிவிப்பு வெளியானது

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin on Budget: ‘'Blast Blast'-ஆக மக்கள் எதிர்பார்த்த பட்ஜெட்.. ‘Waste Waste' ஆக இருக்கு.!“ - விளாசிய மு.க. ஸ்டாலின்
‘'Blast Blast'-ஆக மக்கள் எதிர்பார்த்த பட்ஜெட்.. ‘Waste Waste' ஆக இருக்கு.!“ - விளாசிய மு.க. ஸ்டாலின்
TN Budget 2026: தமிழ்நாடு அரசின் மொத்த வருவாய், செலவுகள் - பட்ஜெட்டில் எவ்வளவு துண்டு விழுந்தது? கடன் விவரங்கள்
தமிழ்நாடு அரசின் மொத்த வருவாய், செலவுகள் - பட்ஜெட்டில் எவ்வளவு துண்டு விழுந்தது? கடன் விவரங்கள்
TN Budget 2026 : ‘இல்லை, இல்லை’ பட்ஜெட்டில் விஜயின் வாக்குறுதிகள் என்னென்ன இடம்பெறவில்லை..?
‘இல்லை, இல்லை’ பட்ஜெட்டில் இடம்பெறாத தவெக வாக்குறுதிகள்..!
TN Budget 2026: பட்ஜெட்டில் பள்ளி, உயர் கல்வித்துறை நிதி குறைப்பு; மாணவர்களுக்கு ஷாக்! பெரும் பின்னடைவு?
TN Budget 2026: பட்ஜெட்டில் பள்ளி, உயர் கல்வித்துறை நிதி குறைப்பு; மாணவர்களுக்கு ஷாக்! பெரும் பின்னடைவு?
TN Budget 2026: குடிநீர், மழைநீர், போக்குவரத்து..! சென்னையின் வளர்ச்சி & மேம்பாட்டிற்கான பட்ஜெட் அறிவிப்புகள்
குடிநீர், மழைநீர், போக்குவரத்து..! சென்னையின் வளர்ச்சி & மேம்பாட்டிற்கான பட்ஜெட் அறிவிப்புகள்
Tamil Nadu Budget 2026 Highlights: தமிழ்நாடு TO கர்நாடகா வரை மெட்ரோ ரயில் சேவை - பட்ஜெட்டில் தகவல்
தமிழ்நாடு TO கர்நாடகா வரை மெட்ரோ ரயில் சேவை - பட்ஜெட்டில் தகவல்
TN Budget 2026 Highlights: தமிழக பட்ஜெட்: முதல்வர் விஜய் அறிவித்த டாப் 10 திட்டங்கள்! தங்கம் முதல் லேப்டாப் வரை!
TN Budget 2026 Highlights: தமிழக பட்ஜெட்: முதல்வர் விஜய் அறிவித்த டாப் 10 திட்டங்கள்! தங்கம் முதல் லேப்டாப் வரை!
TN Budget 2026: நிதியை அள்ளிக் கொடுத்த CM விஜய்..! ஒவ்வொரு துறைக்கும் எத்தனை கோடிகள் - தமிழக பட்ஜெட் விவரங்கள்
நிதியை அள்ளிக் கொடுத்த CM விஜய்..! ஒவ்வொரு துறைக்கும் எத்தனை கோடிகள் - தமிழக பட்ஜெட் விவரங்கள்
Embed widget