மேலும் அறிய

Mankatha Re Release: தமிழ்நாட்டில் மங்காத்தா வசூல் மழை.. ஆனால் கில்லி தான் டாப்!

Mankatha Box Office Collection: கில்லி படத்தை விட மங்காத்தாவுக்கு தமிழ்நாட்டில் குறைந்த காட்சிகள் கிடைத்துள்ளது. எனினும் முதல் நாளுக்கான ரசிகர்களின் எண்ணிக்கையில் கில்லி தான் முதலிடத்தில் உள்ளது.

நடிகர் அஜித்குமார் நடித்துள்ள மங்காத்தா படம் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டு நிலையில் அப்படம் முதல் நாள் வசூல் நிலவரம் பற்றிக் காணலாம். 

மங்காத்தா ரீ-ரிலீஸ்

வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் அஜித்குமாரின் 50வது படமாக வெளியானது “மங்காத்தா”. இந்த படம் 2011ம் ஆண்டு ரமலான் பண்டிகையை முன்னிட்டு வெளியாகி மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. இந்த படத்தில் த்ரிஷா ஹீரோயினாக நடித்திருந்தார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்த இப்படத்தில் அர்ஜூன், ஆண்ட்ரியா, அஞ்சலி, வைபவ், சுப்பு பஞ்சு, லட்சுமி ராய், பிரேம்ஜி அமரன், மஹத், அரவிந்த் ஆகாஷ் என பலரும் நடித்திருந்தனர். இந்த படத்தை கிளவுட் நைன் நிறுவனம் தயாரித்த நிலையில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டிருந்தது. 

இந்த நிலையில் திடீரென மங்காத்தா படத்தை ரீ-ரிலீஸ் செய்யப்போவதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்தது. இதனால் கடந்த 8 மாதங்களாக அஜித் படம் பார்க்காமல் தவித்து வந்த ரசிகர்கள் உற்சாகமானார்கள். ரீ-ரிலீசுக்கான ட்ரெய்லர், புது ப்ரோமோ, போஸ்டர் என அனைத்தும் புதுப்படத்துக்கு நிகராக வெளியானது. இந்த நிலையில் ஜனவரி 23ம் தேதி இப்படம் தமிழ்நாடு முழுவதும் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டது. 

தியேட்டர்கள் ரசிகர்கள் வெள்ளம்

இதனிடையே மங்காத்தா படம் வெளியான தியேட்டர்களில் அஜித் ரசிகர்கள் அதி தீவிர கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் புதுப்படம் பார்ப்பது போல பாலாபிஷேகம், நலத்திட்ட உதவிகள் என அமர்க்களப்படுத்தினர். மேலும் ஜனவரி 23 முதல் 26ம் தேதி வரையில் பெரும்பாலான காட்சிகளுக்கு டிக்கெட்டுகளும் விற்று தீர்ந்து விட்டது. இந்த நிலையில் ரீ-ரிலீஸில் மங்காத்தா படம் முதல் நாளில் பெற்ற வசூல் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. 

கில்லி தான் டாப்

மங்காத்தா படம் முதல் நாளில் ஒட்டுமொத்தமாக ரூ.4.1 கோடி வசூலைப் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் மட்டும் ரூ.3.75 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதன்மூலம் தமிழ்நாட்டில் ரீ-ரிலீஸில் அதிக வசூல் செய்த கில்லி படத்தின் சாதனையை மங்காத்தா முறியடித்துள்ளது. கில்லி படம் முதல் சுமார் ரூ.4 கோடி வரை வசூல் செய்தது. 

இதில் பல சுவாரஸ்ய விஷயங்கள் உள்ளது. அதாவது கில்லி படத்தை விட மங்காத்தாவுக்கு தமிழ்நாட்டில் குறைந்த காட்சிகள் ஒதுக்கப்பட்டிருக்கிறது. அதேபோல மங்காத்தா படத்தின் டிக்கெட்டுகள் வழக்கமான கட்டணத்தில் விற்கப்படும் நிலையில் கில்லி படம் மிக குறைவான கட்டணத்தில் டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டது. 

எனினும் மங்காத்தாவை விட முதல் நாளுக்கான ரசிகர்களின் எண்ணிக்கையில் கில்லி தான் முதலிடத்தில் உள்ளது. கில்லி படம் கேரளா, கர்நாடகா, ஆந்திரா போன்ற தென்னிந்தியாவில் சிறப்பான வரவேற்பை பெற்றது. இருந்தாலும் கில்லி படம் தான் தமிழ்நாட்டில் அதிக வசூல் செய்த ரீ-ரிலீஸ் படம் என்ற சிறப்பை இன்றளவும் தன்னகத்தே கொண்டுள்ளது. அப்படம் ரூ.20 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளது. அதனை மங்காத்தா முறியடிக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. 

தலைப்பு செய்திகள்

’அலப்பற கெளப்பறோம்’...ஓடிடியில் வெளியாகும் ’சூப்பர் ஸ்டாரின் சூப்பர் ஷோ’...விவரங்கள் இதோ...
’அலப்பற கெளப்பறோம்’...ஓடிடியில் வெளியாகும் ’சூப்பர் ஸ்டாரின் சூப்பர் ஷோ’...விவரங்கள் இதோ...
விஜய்க்கு புஸ்ஸி ஆனந்த் போல் சிவகார்த்திகேயனுக்கு இவரா? யார் இந்த மோகன்தாஸ்
விஜய்க்கு புஸ்ஸி ஆனந்த் போல் சிவகார்த்திகேயனுக்கு இவரா? யார் இந்த மோகன்தாஸ்
ஜெயிலர் 2 படத்திலிருந்து 100 நிமிட ஃபுட்டேஜ் நீக்கப்பட்டதா? வெளியான அதிர்ச்சி தகவல்
ஜெயிலர் 2 படத்திலிருந்து 100 நிமிட ஃபுட்டேஜ் நீக்கப்பட்டதா? வெளியான அதிர்ச்சி தகவல்
ஆதரவு கேட்ட நடிகர் அஜித்...வீடியோ வெளியிட்டு வேண்டுகோள்...
ஆதரவு கேட்ட நடிகர் அஜித்...வீடியோ வெளியிட்டு வேண்டுகோள்...

வீடியோ

Congress MLA Abuse : எல்லை மீறிய காங். எம்.எல்.ஏ! ஓடும் பேருந்தில் அநாகரிகம்.. விளாசும் நெட்டிசன்கள்
TVK Cadre Issue : செல்போன் கடைக்காரரிடம் வழிப்பறி.. அடிக்க சொன்ன தவெக நிர்வாகி! போலீஸ் வலைவீச்சு
Dindigul Murder : திமுக பிரமுகர் கொலை வழக்கு! ஜாமீனில் வந்த முக்கிய குற்றவாளி.. ஓட ஓட வெட்டிக் கொலை
VS Babu Health : V.S பாபுக்கு டிரக்கியாஸ் சிகிச்சை? வெளியான பகீர் தகவல் குடும்பத்தினரின் அப்டேட்
வாக்காளர்களுக்கு டோக்கன்? தவெகவினரை மடக்கிய அதிமுகவினர் தாராபுரத்தில் பரபரப்பு!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
வெளிமாநில தமிழ் தாய்மார்களுக்கு குட் நியூஸ்.! ‘தாய்மாமன் தங்க மோதிரம்‘ திட்ட நிபந்தனையில் தளர்வு: அரசு அறிவிப்பு
வெளிமாநில தமிழ் தாய்மார்களுக்கு குட் நியூஸ்.! ‘தாய்மாமன் தங்க மோதிரம்‘ திட்ட நிபந்தனையில் தளர்வு: அரசு அறிவிப்பு
MK Stalin vs Vijay : தலைதூக்கும் அரிவாள் வெட்டு.! ShootingMode-இல் இருந்து விடுபட்டு Please Take Action CM Sir- சீறிய ஸ்டாலின்
தலைதூக்கும் அரிவாள் வெட்டு.! ShootingMode-இல் இருந்து விடுபட்டு Please Take Action CM Sir- சீறிய ஸ்டாலின்
விஜய்க்கு டஃப் கொடுக்க களமிறங்கும் தனுஷ்.? புதிய கட்சி பெயர் என்ன.? தேர்தல் ஆணையத்தில் பதிவு.?
விஜய்க்கு டஃப் கொடுக்க களமிறங்கும் தனுஷ்.? புதிய கட்சி பெயர் என்ன.? தேர்தல் ஆணையத்தில் பதிவு.?
Repo Rate: ஷாக் கொடுத்த RBI..! எகிறும் EMI, வீட்டுக் கடன் வாங்கலாமா? வைப்புத் தொகைக்கு வாய்ப்பா? ரெப்போ வட்டி
ஷாக் கொடுத்த RBI..! எகிறும் EMI, வீட்டுக் கடன் வாங்கலாமா? வைப்புத் தொகைக்கு வாய்ப்பா? ரெப்போ வட்டி
TNPSC Vacancy: க்ரூப்-4 தேர்வு - எந்தெந்த துறையில் எத்தனை காலிப்பணியிடங்கள், ஊதியம், கல்வித்தகுதி என்ன? முழு விவரம்
க்ரூப்-4 தேர்வு - எந்தெந்த துறையில் எத்தனை காலிப்பணியிடங்கள், ஊதியம், கல்வித்தகுதி என்ன? முழு விவரம்
Honda Elevate Facelift First Look: ஹோண்டா எலிவேட் ஃபேஸ்லிஃப்ட்ல புதுசா என்ன இருக்கு.? பணத்துக்கு சிறந்த மதிப்ப தருதா.? இதோ முதல் பார்வை
ஹோண்டா எலிவேட் ஃபேஸ்லிஃப்ட்ல புதுசா என்ன இருக்கு.? பணத்துக்கு சிறந்த மதிப்ப தருதா.? இதோ முதல் பார்வை
சென்னையில் இனி பீச்களுக்கு பஞ்சமில்லை..! 5,904 சதுர கிலோ மீட்டருக்கு பிரமாண்ட திட்டம் - காஞ்சி, திருவள்ளூர்
சென்னையில் இனி பீச்களுக்கு பஞ்சமில்லை..! 5,904 சதுர கிலோ மீட்டருக்கு பிரமாண்ட திட்டம் - காஞ்சி, திருவள்ளூர்
Ukraine Drone Attack: ரஷ்ய கருங்கடலில் 23 இந்தியர்களுடன் சென்ற எண்ணெய் கப்பலை தீக்கிரையாக்கிய உக்ரைன்; நடந்தது என்ன.?
ரஷ்ய கருங்கடலில் 23 இந்தியர்களுடன் சென்ற எண்ணெய் கப்பலை தீக்கிரையாக்கிய உக்ரைன்; நடந்தது என்ன.?
Embed widget