மேலும் அறிய

அஜித்தின் ‘கிளாடியேட்டர்ஸ்’ ஆவணப்படத்தில் விஜய்.. லண்டன் சந்திப்பு காட்சிகள் இடம்பெறுகிறதா?

அஜித்தின் ‘கிளாடியேட்டர்ஸ்’ ஆவணப்படத்தில் லண்டனில் விஜய்யுடன் நடந்த சந்திப்பு காட்சிகளும் இடம்பெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அஜித்தின் மோட்டர் ஸ்போர்ட்ஸ்  பயணத்தை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள ‘கிளாடியேட்டர்ஸ்’ ஆவணப்படத்தில், சமீபத்தில் லண்டனில் நடைபெற்ற அஜித் - விஜய் சந்திப்பு காட்சிகளும் இடம்பெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால், அஜித் மற்றும் விஜய் ரசிகர்கள் மத்தியில் ஆவணப்படம் குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

கிளாடியேட்டர்ஸ் ஆவணப்படம்

அஜித்தின் மோட்டார் ஸ்போர்ட்ஸ் பயணத்தை மையமாக வைத்து ‘Gladiators: In Pursuit of Challenges’ என்ற பெயரில் இந்த ஆவணப்படம் உருவாகியுள்ளது. இயக்குநர் ஏ.எல். விஜய் இயக்கும் இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். அஜித்தின் ரேசிங் அனுபவங்கள், போட்டிகளில் அவர் சந்தித்த சவால்கள், வெற்றிகள் மற்றும் பந்தயத்தின் மீதான அவரது ஆர்வம் ஆகியவை ஆவணப்படத்தில் இடம்பெறுகின்றன. சமீபத்தில் இதன் சிறப்பு டிரெய்லர் திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. 90 நிமிடங்கள் ஓடக்கூடிய ஆவணப்படமாக இது உருவாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகின.

முதல்வர் விஜயை சந்தித்த காட்சிகள் 

டிரெய்லரில் அஜித்தின் ரேசிங் வாழ்க்கையைச் சேர்ந்த பல காட்சிகளுடன், அவரது குடும்பத்தினர் இடம்பெறும் தனிப்பட்ட தருணங்களும் இடம்பெற்றிருந்தன. இதனால், அஜித்தை நடிகராக மட்டுமல்லாமல், மோட்டார் ஸ்போர்ட்ஸ் மீது தீவிர ஆர்வம் கொண்டவராகவும் இந்த ஆவணப்படம் பதிவு செய்யும் என தெரிகிறது.

இதற்கிடையில், தமிழக முதல்வரும் நடிகருமான விஜய் லண்டன் சென்றிருந்த நிலையில், சில்வர்ஸ்டோன் பந்தயத் தளத்தில் அஜித்தை நேரில் சந்தித்தார். அஜித் பங்கேற்ற பந்தயத்தை விஜய் தொடங்கி வைத்ததுடன், இருவரும் கட்டித்தழுவி வாழ்த்துகளைப் பரிமாறிக்கொண்ட காட்சிகள் இணையத்தில் பரவலாக பகிரப்பட்டன.

இந்த சந்திப்பு நடைபெற்ற சூழலில், அஜித்தின் ‘கிளாடியேட்டர்ஸ்’ ஆவணப்படத்தில் இருவரும் சந்தித்த காட்சிகள் இடம்பெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே ஆவணப்படத்தின் டிரெய்லரில் விஜய் இடம்பெறும் ஒரு காட்சி இருப்பதாக செய்திகள் வெளியாகியிருந்த நிலையில், லண்டன் சந்திப்பு தொடர்பான புதிய காட்சிகளும் இணைக்கப்படுமா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்தது.

அஜித் - விஜய் இருவரும் ஆரம்ப காலத்தில் சில படங்களில் இணைந்து நடித்திருந்தாலும், பின்னர் தனித்தனி பாதையில் பயணித்தனர். இருவரது ரசிகர்களுக்கும் இடையே பல ஆண்டுகளாக நிலவி வந்த போட்டி சூழலுக்கு மத்தியில், லண்டனில் நடைபெற்ற இந்த சந்திப்பு கவனம் பெற்றது.

அஜித் சில்வர்ஸ்டோனில் மிச்செலின் லீ மான்ஸ் கப் போட்டியின் LMP3 Pro/Am பிரிவில் பங்கேற்றார். அதே நிகழ்வில் விஜய் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பந்தயத்தை தொடங்கி வைத்தார். இந்த சந்திப்பில் இருவரும் நீண்ட நேரம் உரையாடியதுடன், ஒருவரை ஒருவர் கட்டித்தழுவிய காட்சிகளும் ரசிகர்களின் கவனத்தை பெற்றன. விஜய் பின்னர் இந்த சந்திப்பு தொடர்பான வீடியோவையும் பகிர்ந்திருந்தார்.

இதனால், ஏற்கனவே அஜித்தின் பந்தயப் பயணத்தை மையமாகக் கொண்டிருந்த ஆவணப்படத்துடன், சமீபத்திய லண்டன் நிகழ்வும் இணைவது ரசிகர்களுக்கு கூடுதல் கவனத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

Advertisement

தலைப்பு செய்திகள்

Jailer 2:
Jailer 2: "என்றைக்கும் ஒரே தலைவன்.." ஜெயிலர் 2 ட்ரெயிலரை கொண்டாடும் ரஜினி ரசிகர்கள்!
அதிமுக ஆட்சியில் கண்ணீர்...தவெக ஆட்சியில் அங்கீகாரம்...நெகிழ்ச்சியில் புஷ்பவனம் குப்புசாமி
அதிமுக ஆட்சியில் கண்ணீர்...தவெக ஆட்சியில் அங்கீகாரம்...நெகிழ்ச்சியில் புஷ்பவனம் குப்புசாமி
Vijay Sethupathi:
Vijay Sethupathi: "நான் சந்தோஷமா இருந்தால் காய்ச்சல் வரும்.." பத்தா வெற்றி விழாவில் விஜய் சேதுபதி
"என் பாடல்கள் சமுதாயத்திற்கு தீங்கா?" - விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்து ரூ.5 லட்சம் நன்கொடை அளித்த அசல் கோலார்!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

கேப்டனை கொல்ல சதி மிகப்பெரிய கட்டிடம் டார்கெட் கோ பைலட் பகீர் வாக்குமூலம்
Noida supernova suicide | 41வது மாடியில் இருந்து தற்கொலை! 28 வயது இளைஞர் பகீர்! விசாரணையில் அதிர்ச்சி தகவல்
TVK MLA vs Cong MP | காங்.MP-தவெக MLA மோதல்! மெழுகுவர்த்தியை தட்டிவிட்ட MLA.. அமைச்சர் முன்பே வாக்குவாதம்
Toor Dal issue :துவரம் பருப்பில் நடந்த மோசடி?அரசு கஜானாவிற்கு வந்த 187 கோடி..சாட்டையை சுழற்றிய விஜய்
Sivakarthikeyan Politics : CM விஜய் ரூட்டில் SK..ரசிகர் மன்றம் டூ நற்பணி இயக்கம்! குஷியில் ரசிகர்கள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ABP Nadu Exclusive:
ABP Nadu Exclusive: "தவெக அரசுதான் தமிழ் உணர்வோடு செயல்படுகிறது.. கேட்காமலே பதவி.." புஷ்பவனம் குப்புசாமி ஏபிபி நாடுக்கு பிரத்யேக பேட்டி
"தொட்டு தொட்டுப் பேசும் சுல்தானா... இயல் இசைக்கு இனி நீதானா.." தவெக ஆட்சியில் புஷ்பவனம் குப்புசாமிக்கு முக்கிய பதவி!
Holiday: குட்நியூஸ்.. நாளை சம்பளத்துடன் கூடிய பொது விடுமுறை அறிவிப்பு.. யார் யாருக்கு தெரியுமா?
Holiday: குட்நியூஸ்.. நாளை சம்பளத்துடன் கூடிய பொது விடுமுறை அறிவிப்பு.. யார் யாருக்கு தெரியுமா?
GOLD LOAN : அடி தூள்.! நகைக் கடன் வாங்கப்போறீங்களா- இனி ஒரு கிராமிற்கு இவ்வளவு பணமா - வெளியான சூப்பர் அறிவிப்பு
அடி தூள்.! நகைக் கடன் வாங்கப்போறீங்களா- இனி ஒரு கிராமிற்கு இவ்வளவு பணமா - வெளியான சூப்பர் அறிவிப்பு
SC On CEC: “நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
“நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
Maruti Suzuki Alto K10: நடுத்தர குடும்பங்களின் முதல் தேர்வு.! ரூ.3.70 லட்சத்தில் 33கிமீ மைலேஜ்.! புதிய நவீன மாருதி ஆல்டோ K10
நடுத்தர குடும்பங்களின் முதல் தேர்வு.! ரூ.3.70 லட்சத்தில் 33கிமீ மைலேஜ்.! புதிய நவீன மாருதி ஆல்டோ K10
Russia Vs Ukraine: கருங்கடலில் இந்தியர்கள் இருந்த கப்பலை தாக்கிய ரஷ்ய ட்ரோன்கள்; கேப்டன் உயிரிழந்ததாக கூறும் ஜெலன்ஸ்கி
கருங்கடலில் இந்தியர்கள் இருந்த கப்பலை தாக்கிய ரஷ்ய ட்ரோன்கள்; கேப்டன் உயிரிழந்ததாக கூறும் ஜெலன்ஸ்கி
Jailer 2:
Jailer 2: "என்றைக்கும் ஒரே தலைவன்.." ஜெயிலர் 2 ட்ரெயிலரை கொண்டாடும் ரஜினி ரசிகர்கள்!
Embed widget