மேலும் அறிய

Good Bad Ugly Trailer: AK வர்றாரு வழிய விடு..... ஜாலியா ரிலீசான குட் பேட் அக்லி ட்ரெயிலர்!

Good Bad Ugly Trailer: அஜித்குமார் வெளியிட்ட குட் பேட் அக்லி படத்தின் ட்ரெயிலர் ரிலீசாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

Good Bad Ugly Trailer: தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக உலா வருபவர் அஜித்குமார். இவரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் குட் பேட் அக்லி. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படம் மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பை ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது. 

குட் பேட் அக்லி ட்ரெயிலர்:

இந்த படத்தின் டீசர் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றுள்ள நிலையில் இன்று ட்ரெயிலர் உருவாகியுள்ளது. இதற்கும் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. குட் பேட் அக்லி படம் வரும் ஏப்ரல் 10ம் தேதி ரிலீசாகிறது. 

அஜித் நீண்ட இடைவேளைக்குப் பிறகு இதுபோன்ற ஆக்ஷன் படத்தில் நடித்திருப்பது அவரது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த படத்தில் அஜித் கேங்ஸ்டராக நடித்துள்ளார். குட் பேட் அக்லி படத்தின் படப்பிடிப்பு பெரும்பாலும் வெளிநாட்டிலே நடத்தப்பட்டுள்ளது. 

ஆக்ஷன் விருந்து:

இந்த படத்தில் அஜித்குமாருக்கு ஜோடியாக த்ரிஷா நடித்துள்ளார். இவர்களுடன் பிரசன்னா, சுனில், அர்ஜுன்தாஸ், யோகிபாபு, சாக்கோ உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளனர். கிரீடம் படத்திற்கு பிறகு நடிகர் அஜித்தின் படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். சுமார் 250 கோடி பட்ஜெட்டில் இந்த படம் உருவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்திற்கு அபினந்தன் ராமானுஜம் ஒளிப்பதிவு செய்துள்ளார். விஜய் வேலுக்குட்டி ஒளிப்பதிவு செய்துள்ளார். 

அஜித் நடிப்பில் கடைசியாக வெளியான படமான விடாமுயற்சி படம் மென்மையான குடும்ப படமாக அமைந்திருந்தது. இந்த படம் முற்றிலும் மாறாக ஆக்ஷன் விருந்தாக அமைந்திருப்பதாக படக்குழு தெரிவித்துள்ளது. 

அஜித்தின் ரெஃபரென்ஸ்:

அஜித்தின் ப்ளாக்பஸ்டர் படங்களின் ரெஃபரென்ஸ்களிலே இந்த படத்தின் ட்ரெயிலர் உருவாகியுள்ளது. மங்காத்தா படத்தில் அஜித்தின் ஐகான் வசனம், அஜித் படங்களான அமர்க்களம், பில்லா, மங்காத்தா ஆகியவற்றின் ரெஃபரென்ஸ் ஆகியவை ட்ரெயிலரில் இடம்பெற்று ரசிகரகளை கவர்ந்துள்ளது. 

அர்ஜுன்தாஸ் இந்த படத்தில் அஜித்திற்கு வில்லனாக நடித்துள்ளார். ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக நடிகர் ஜாக்கி ஷெராஃப், நடிகை சிம்ரன் இந்த படத்தில் நடித்திருப்பது ட்ரெயிலரில் தெரியவந்துள்ளது. மகனிற்காக மீண்டும் வன்முறையில் களமிறங்கும் தந்தையாக அஜித் இந்த படத்தில் நடித்துள்ளார் என்று  ட்ரெயிலர் மூலம் எதிர்பார்க்கப்படுகிறது. 

தலைப்பு செய்திகள்

பென்ஸ் திரைப்படத்தில் இடம்பெறும் LCU கதாப்பாத்திரங்கள் - நிவின் பாலி சொன்ன சீக்ரெட்...
பென்ஸ் திரைப்படத்தில் இடம்பெறும் LCU கதாப்பாத்திரங்கள் - நிவின் பாலி சொன்ன சீக்ரெட்...
Jailer 2 : அந்த ஒரு காட்சியை நீக்க சொன்ன சென்சார் போர்ட்..முடியாது என்ற நெல்சன்..ஆர்டர் போட்டர் ரஜினி
Jailer 2 : அந்த ஒரு காட்சியை நீக்க சொன்ன சென்சார் போர்ட்..முடியாது என்ற நெல்சன்..ஆர்டர் போட்டர் ரஜினி
Karthik Subbaraj: விக்ரமுடன் மீண்டும் இணையும் கார்த்திக் சுப்பராஜ்.. இந்த முறை தியேட்டர் தான்.. அதுவும் இந்த படம் தான்!
Karthik Subbaraj: விக்ரமுடன் மீண்டும் இணையும் கார்த்திக் சுப்பராஜ்.. இந்த முறை தியேட்டர் தான்.. அதுவும் இந்த படம் தான்!
இயக்குநராக அறிமுகமாகும் ஜேசன் சஞ்சய்..அட்லீ தயாரிப்பில் விஜய் சேதுபதி..நாளை வெளியாகும் 3 படங்கள்
இயக்குநராக அறிமுகமாகும் ஜேசன் சஞ்சய்..அட்லீ தயாரிப்பில் விஜய் சேதுபதி..நாளை வெளியாகும் 3 படங்கள்

வீடியோ

VS Babu in Hospital : ICU-வில் V.S பாபு.. சுவாச கருவியில் தீவிர சிகிச்சை! HOSPITAL பரபரப்பு அறிக்கை
Tiruvotriyur CRIME : மிரட்டிய போலீஸ்! பேட்டி கொடுத்த மறுநாளே இளைஞர் கொலை! திருவொற்றியூரில் பயங்கரம்!
Oothangarai News : பள்ளி மாணவியிடம் அத்துமீறல்! பேருந்தை மறித்து கண்டக்டரை ஓட ஓட அடித்த பொதுமக்கள்!
Vijay London Trip : Phone போட்ட ஆளுநர்! ”லண்டனுக்கு போகாதீங்க ” பயணத்தை மாற்றிய CM விஜய்
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Dharapuram By Election: என்னை கேவலமா பேசுறாங்க.. நான் எந்த தப்பும் பண்ணல.. விஜய் முன்னால் கண்ணீர் விட்ட சத்யபாமா!
Dharapuram By Election: என்னை கேவலமா பேசுறாங்க.. நான் எந்த தப்பும் பண்ணல.. விஜய் முன்னால் கண்ணீர் விட்ட சத்யபாமா!
Ind Vs WI: சூறாவளியாய் வெளுக்கும் மேற்கிந்திய தீவுகள் - இந்திய அணி கன்ட்ரோல் செய்யுமா? கோலி விட்ட கேட்ச்
சூறாவளியாய் வெளுக்கும் மேற்கிந்திய தீவுகள் - இந்திய அணி கன்ட்ரோல் செய்யுமா? கோலி விட்ட கேட்ச்
TVK: கூட்டணி சேர்ந்து கத்தினாலும், கதறினாலும் ஒன்னும் நடக்காது.. திமுக, அதிமுகவை வெளுத்து வாங்கிய தவெக!
TVK: கூட்டணி சேர்ந்து கத்தினாலும், கதறினாலும் ஒன்னும் நடக்காது.. திமுக, அதிமுகவை வெளுத்து வாங்கிய தவெக!
TN Weather News: கனமழை பொளக்க போகுது..! இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங் - சென்னை? தமிழக வானிலை
கனமழை பொளக்க போகுது..! இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங் - சென்னை? தமிழக வானிலை
Dengue: தமிழ்நாட்டை அச்சுறுத்தும் டெங்கு.. தூங்குகிறதா சுகாதாரத்துறை? ஸ்பீட் ஏத்துங்க அருண்ராஜ் சார்!
Dengue: தமிழ்நாட்டை அச்சுறுத்தும் டெங்கு.. தூங்குகிறதா சுகாதாரத்துறை? ஸ்பீட் ஏத்துங்க அருண்ராஜ் சார்!
ஆசிய விளையாட்டு போட்டியில் ஒரே நாளில் 4 தங்க பதக்கங்கள்... புள்ளி பட்டியலில் வேகமாக முன்னேறும் இந்தியா...
ஆசிய விளையாட்டு போட்டியில் ஒரே நாளில் 4 தங்க பதக்கங்கள்... புள்ளி பட்டியலில் வேகமாக முன்னேறும் இந்தியா...
Bank Holidays: குவியும் பண்டிகைகள்..! அக்டோபர் மாதத்தில் 16 நாட்கள் வங்கிகள் இயங்காது - விடுமுறை பட்டியல் இதோ..!
குவியும் பண்டிகைகள்..! அக்டோபர் மாதத்தில் 16 நாட்கள் வங்கிகள் இயங்காது - விடுமுறை பட்டியல் இதோ..!
தவெக-விற்கு சவால் தரும் தாராபுரம்! 3 மாதங்களுக்கு முன்பு நடந்தது என்ன? என்ன செய்வார் விஜய்?
தவெக-விற்கு சவால் தரும் தாராபுரம்! 3 மாதங்களுக்கு முன்பு நடந்தது என்ன? என்ன செய்வார் விஜய்?
Embed widget