மேலும் அறிய

Billa Re - release : அஜித் ரசிகர்களுக்கு காத்திருக்கும் பர்த்டே ட்ரீட்! விஜய்யின் கில்லியை தொடர்ந்து அஜித்தின் பில்லா ரீ ரிலீஸ்...

Billa Re-Release : மே 1ம் தேதி நடிகர் அஜித் பிறந்தநாளை முன்னிட்டு பிளாக் பஸ்டர் ஹிட் அடித்த 'பில்லா' திரைப்படம் ரீ ரிலீஸ் செய்யப்பட உள்ளது என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் தற்போது ரீ ரிலீஸ் தான் மிகவும் ட்ரெண்டிங்காகி வருகிறது. கடந்த காலங்களில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த வெற்றி படங்கள் தற்போது ரீ ரிலீஸ் செய்யப்பட்டு வருகிறது. அப்படங்களுக்கு இன்றைய காலத்து ரசிகர்கள் மத்தியில் இந்த அளவுக்கு வரவேற்பு இருக்குமா என்பது ஆச்சரியமாக இருந்தது. ஆனால் அந்த எண்ணங்களை எல்லாம் தவிடுபொடியாக்கி ரீ ரிலீஸ் படங்களை மக்கள் கொண்டாடி தீர்த்து வருகிறார்கள். 

என்னதான் நட்சத்திர நடிகர்களின் பெரிய பட்ஜெட் படங்கள் அடுத்தடுத்து வெளியாக இருந்தாலும் எத்தனை ஆண்டுகளானாலும் இன்றும் மவுசு குறையாத எவர்கிரீன் படங்களாக சில படங்கள் இன்றும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகின்றன. 

Billa Re - release : அஜித் ரசிகர்களுக்கு காத்திருக்கும் பர்த்டே ட்ரீட்! விஜய்யின் கில்லியை தொடர்ந்து அஜித்தின் பில்லா ரீ ரிலீஸ்...

ரீ ரிலீஸ் ட்ரெண்ட் : 

அந்த வகையில் சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற வாரணம் ஆயிரம், சிவா மனசுல சக்தி, விண்ணைத்தாண்டி வருவாயா, 3 உள்ளிட்ட ஏராளமான படங்கள் திரையரங்குகளில் ரீ ரிலீஸ் செய்யப்பட்டு நல்ல வரவேற்பை பெற்றதுடன் நினைத்ததை காட்டிலும் பல மடங்கு வசூல் செய்து சாதனை படைத்தது. சமீபத்தில் தரணி இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான 'கில்லி' திரைப்படம் ரீ ரிலீஸ் செய்யப்பட்டதை உலகளவில் உள்ள ரசிகர்கள் கொண்டாடி தீர்த்தனர். 20 ஆண்டுகளுக்கு பின்னர் ரீ ரிலீஸ் செய்யப்பட்ட இப்படம் தற்போது 20 கோடி வரை வசூல் செய்துள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன. 

பில்லா ரிலீஸ் : 

அந்த வகையில் மே 1ம் தேதி நடிகர் அஜித் பிறந்தநாளை முன்னிட்டு 2007ம் ஆண்டு விஷ்ணுவர்தன் இயக்கத்தில் நடிகர் அஜித், நயன்தாரா, நமீதா, பிரபு, சந்தானம் உள்ளிட்டோரின் நடிப்பில் வெளியான 'பில்லா' திரைப்படம் ரீ ரிலீஸ் செய்யப்பட உள்ளது. அஜித் திரைப்பயணத்தில் டர்னிங் பாயிண்ட் கொடுத்த படமாக அமைந்த பில்லா திரைப்படம் கிட்டத்தட்ட 175 நாட்கள் வரை திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி அதிகம் வசூல் செய்த திரைப்படம் என்ற பெருமையை பெற்றது.

Billa Re - release : அஜித் ரசிகர்களுக்கு காத்திருக்கும் பர்த்டே ட்ரீட்! விஜய்யின் கில்லியை தொடர்ந்து அஜித்தின் பில்லா ரீ ரிலீஸ்...

ரஜினி படத்தின் ரீ மேக் : 

1980ல் ரஜினிகாந்த், ஸ்ரீப்ரியா, தேங்காய் ஸ்ரீனிவாசன் மற்றும் பலரின் நடிப்பில் வெளியாகி பிளாக் பஸ்டர் ஹிட் அடித்த படம் 'பில்லா'. அந்த காலகட்டத்தில் 250 நாட்களுக்கும் மேல் திரையரங்குகளில் ஓடி வெற்றி பெற்ற அப்படம் 17 ஆண்டுகளுக்கு பிறகு ரீமேக் செய்யப்பட்டது. ரஜினியின் ரீ மேக் படமாக இருந்தாலும் அஜித் தனி ஸ்டைலில் உருவான அப்படம் மாபெரும் வரவேற்பை பெற்றது. 

வெட்டிங் டே ட்ரீட் : 

அஜித் ரசிகர்களுக்கு பில்லா திரைப்படம் ரீ ரிலீஸ் செய்யப்படுவது மிகப்பெரிய சர்ப்ரைஸாக உள்ளது. அஜித் - ஷாலினியின் 24வது திருமண நாள் நேற்று கொண்டாடப்பட்ட நிலையில் இந்த சர்ப்ரைஸ் அறிவிப்பு ரசிகர்களுக்கு ட்ரீட்டாக வெளியானது.  கிட்டத்தட்ட 150 திரையரங்குகளில் இப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

தலைப்பு செய்திகள்

அந்நியன் கூட மாதிரி இருக்க மாதிரி இருக்கும்...காதலன் குறித்து கொட்டி தீர்த்த அனுபமா பரமேஸ்வரன்
அந்நியன் கூட மாதிரி இருக்க மாதிரி இருக்கும்...காதலன் குறித்து கொட்டி தீர்த்த அனுபமா பரமேஸ்வரன்
“மூன்று மாதங்களிலேயே நிச்சயதார்த்தம் பற்றி பேசினார்கள்” – அனுபமா பரமேஸ்வரன் பகிர்ந்த அதிர்ச்சி அனுபவம்
“மூன்று மாதங்களிலேயே நிச்சயதார்த்தம் பற்றி பேசினார்கள்” – அனுபமா பரமேஸ்வரன் பகிர்ந்த அதிர்ச்சி அனுபவம்
இரண்டு ஆண்டு வலி..உடம்பெல்லாம் நடுக்கம்..காதலில் சந்தித்த டார்ச்சர் குறித்து அனுபமா
இரண்டு ஆண்டு வலி..உடம்பெல்லாம் நடுக்கம்..காதலில் சந்தித்த டார்ச்சர் குறித்து அனுபமா
Kamal Hassan : 67 ஆண்டுகள் சினிமா பயணம்… இந்திய சினிமாவில் கமல்ஹாசன் அறிமுகப்படுத்திய தொழில்நுட்பங்கள்!
Kamal Hassan : 67 ஆண்டுகள் சினிமா பயணம்… இந்திய சினிமாவில் கமல்ஹாசன் அறிமுகப்படுத்திய தொழில்நுட்பங்கள்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Govt: அடித்து ஆடும் தவெக அரசு - 95 நாட்கள், 97 ஒப்பந்தங்கள், ரூ.67ஆயிரத்து 452 கோடி முதலீடு - இன்று ஒப்பந்தம்
அடித்து ஆடும் தவெக அரசு - 95 நாட்கள், 97 ஒப்பந்தங்கள், ரூ.67ஆயிரத்து 452 கோடி முதலீடு - இன்று ஒப்பந்தம்
TVK Vijay: பொறாமையில் பொங்கும் Ex.அதிமுகவினர்.. முக்கிய பதவியை சிங்கைக்கு வழங்கும் CM விஜய்? என்ன தெரியுமா?
பொறாமையில் பொங்கும் Ex.அதிமுகவினர்.. முக்கிய பதவியை சிங்கைக்கு வழங்கும் CM விஜய்? என்ன தெரியுமா?
TNEB: 200 யூனிட் இலவச மின்சாரம் இல்லையா?.. தமிழக அரசு பரபரப்பு விளக்கம்.. வசமாக மாட்டிய நடிகை!
TNEB: 200 யூனிட் இலவச மின்சாரம் இல்லையா?.. தமிழக அரசு பரபரப்பு விளக்கம்.. வசமாக மாட்டிய நடிகை!
AIADMK Apsara Reddy: அதிமுகவில் அடுத்த விக்கெட்.. துணை கொள்கை பரப்பு செயலாளர் அப்சரா ரெட்டி விலகல்
AIADMK Apsara Reddy: அதிமுகவில் அடுத்த விக்கெட்.. துணை கொள்கை பரப்பு செயலாளர் அப்சரா ரெட்டி விலகல்
Skoda Superb: அட்ரா சக்க..! 40KM மைலேஜ், இந்தியாவிற்கு கன்ஃபார்ம் செய்த ஸ்கோடா - விலை, அம்சங்கள், ரேட்டிங்
அட்ரா சக்க..! 40KM மைலேஜ், இந்தியாவிற்கு கன்ஃபார்ம் செய்த ஸ்கோடா - விலை, அம்சங்கள், ரேட்டிங்
அரசு கஜானாவிற்கு 15,000 கோடி வந்தது உண்மையா? அந்தர் பல்டி அடித்த மரிய வில்சன் – இன்று சொன்னது என்ன?
அரசு கஜானாவிற்கு 15,000 கோடி வந்தது உண்மையா? அந்தர் பல்டி அடித்த மரிய வில்சன் – இன்று சொன்னது என்ன?
Vijay vs Udhayanidhi : சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
Marie Wilson: சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
Embed widget