மேலும் அறிய

Aishwarya Rajesh: வெள்ளிக்கிழமை நாயகின்னு என்னையும் கூப்பிட்டாங்க: ஐஸ்வர்யா ராஜேஷ் வருத்தம்!

Aishwarya Rajesh: “இந்த ஆண்டில் என்னுடைய முதல் படம். இப்போ  ஜீவிக்கு நடந்தது மாதிரி எனக்கும் போன வருஷம்  நடந்தது. என்னையும் வெள்ளிக்கிழமை நாயகினு கூப்பிட்டு இருக்காங்க” .

சென்ற வாரம் வெளியான ஜி.வி. பிரகாஷின் கள்வன் திரைப்படத்துக்குப் பிறகு வரும் ஏப்ரல்.11-ஆம் தேதி அவர் நடிப்பில் வெளியாகும் அடுத்த திரைப்படம் ‘டியர்’. ஐஸ்வர்யா ராஜேஷ் ஹீரோயினாக நடிக்கும் இப்படத்தை, ஆனந்த் ரவிச்சந்திரன் இயக்கியுள்ளார்.

ஜி. வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். நடிகைகள் ரோஹிணி, கீதா கைலாசம், தலைவாசல் விஜய், இளவரசு, காளி வெங்கட் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

டியர் ட்ரெய்லர் ரிலீஸ்

இன்று இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி வரவேற்பைப் பெற்று வருகிறது. குறட்டை விடும் மணப்பெண்ணை மணக்கும் நாயகன், இதனால் இவர்களின் மண வாழ்வில் ஏற்படும் பிரச்னைகள் ஆகியவற்றை மையப்படுத்தி இப்படத்தின் கதை அமைந்துள்ளது.

 

இந்நிலையில், இப்படத்தின் இசை வெளியீட்டு விழா முன்னதாக நடைபெற்றது. அப்போது வாராவாரம் தன் படங்கள் ரிலீசாவது குறித்த விமர்சனங்களுக்கு ஜி.வி.பிரகாஷ் விளக்கமளித்தார். தன் ரெபெல், கள்வன், டியர் என தொடர்ச்சியாக வெளியான 3 படங்களுமே கடும் உழைப்பில் வெளியானது என்றும், அனைத்து வேலைகளும் முடிந்து, வெவ்வேறு கட்டத்தில் படம்பிடிக்கப்பட்டு, தேதி முடிவாகி தற்போது வரிசையாக வெளியாவதாகப் பேசினார்.

‘என்னையும் இப்படி பேசுனாங்க..’

அவரைத் தொடர்ந்து நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் (Aishwarya Rajesh) பேசியதாவது: “இந்த ஆண்டில் என்னுடைய முதல் படம். இப்போ ஜி.விக்கு நடந்தது மாதிரி எனக்கும் போன வருஷம் நடந்தது. என்னையும் வெள்ளிக்கிழமை நாயகினு கூப்பிட்டு இருக்காங்க. அதன் காரணங்கள் எனக்குத் தெரியும். அது நம்ம கையில் இல்லை.  கள்வன் படத்திற்காக ஜி.விக்கு வாழ்த்துகள்.

டியர் படம் எனக்கு மிகவும் நெருக்கமான படம். இந்தப் படத்தில் எல்லாருக்குமே தனித்துவமான கதாபாத்திரம். இளவரசு, ரோகிணி மேடம், கீதா மேடம் எல்லாருக்குமே நல்ல கதாபாத்திரம். எல்லோருமே மிகவும் பிடித்து, விரும்பி நடித்த படம். ஜெகதீஷ் மாதிரி கேமராமேன் எனக்கு எல்லாப்படத்திலும் கிடைத்தால் நன்றாக இருக்கும். என்னை மிகவும் அழகாக அவர் காட்டியுள்ளார்.

‘ஜி.வி - பவானியின் அண்ணன் - தங்கை பாசம்’

இந்தப்படத்தின் ஷூட்டிங்கே கொண்டாட்டமாக இருந்தது. ரோகிணி மேடம் அனுபவத்தை பகிர்ந்துகொள்வதை ரசித்துக் கேட்பேன். அவர் அவ்வளவு புத்திசாலியான ஒருவர். இளவரசு சாரும் அப்படி தான். எல்லோருடன் பழகியது மிகச்சிறந்த அனுபவம். இந்தப் படத்துக்காக 3 ஆண்டுகளாக ட்ராவல் செய்துள்ளேன். இந்தப்படம் மூலம் இயக்குநர் ஆனந்த் முக்கியமான நண்பராகக் கிடைத்துள்ளார். ஆனந்த் தமிழ் சினிமாவுக்கு கிடைத்த பொக்கிஷம். உங்கள் ரைட்டிங் மிகவும் எனக்கு பிடித்திருந்தது. அடுத்த படம் கண்டிப்பாக நாம் பண்ணலாம். வருண்! தமிழ் சினிமாவுக்கு நல்ல தயாரிப்பாளர் கிடைத்துள்ளார்.

எங்கள் படத்தின் நாயகன் தூண் ஜி.வி.பிரகாஷ். இந்தப் படத்தை எங்கள் அனைவருக்கும் டியராக மாற்றியுள்ளார். அவரது இசைக்கு நான் பெரிய ஃபேன்.  நல்ல நண்பர், அவரைப்பார்த்தால் பிரமிப்பாக இருக்கிறது. எனக்காகக் கதை கேட்டு நடித்ததற்கு நன்றி. ஜி.வி தவிர வேறு ஒருவர் நடித்தால் இப்படம் நன்றாக இருந்திருக்காது. ஜி.வியின் தங்கை பவானி, நான் அவருடன் இணைந்து க.பெ.ரணசிங்கம் படத்தில் நடிக்கும்போது ஜி.வி பற்றி அவ்வளவு சொல்லி இருக்கிறார். அவர்கள் அன்பைப் பற்றி அவ்வளவு சொல்லி இருக்கிறார். எனக்கு கொஞ்சம் பொறாமையாக இருக்கும். இந்தப்படம் கண்டிப்பாக ஒரு வித்தியாசமான அனுபவமாக இருக்கும்” எனப் பேசியுள்ளார்.

 

தலைப்பு செய்திகள்

Dhanush : 1 கோடி செலவில் ஐடி விங்..நடிகர் தனுஷின் அடுத்த அரசியல் நகர்வு?
Dhanush : 1 கோடி செலவில் ஐடி விங்..நடிகர் தனுஷின் அடுத்த அரசியல் நகர்வு?
அந்த படம் வந்தால் எல்லாம் அடங்கிடும்...ட்ரோல்கள் குறித்து லோகேஷ் கனகராஜ்
அந்த படம் வந்தால் எல்லாம் அடங்கிடும்...ட்ரோல்கள் குறித்து லோகேஷ் கனகராஜ்
‘பாரிஸ் கஃபே’ இசை வெளியீட்டு விழா
‘பாரிஸ் கஃபே’ இசை வெளியீட்டு விழா
‘ONE MAN’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு
‘ONE MAN’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: ”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
Aavin Milk Price: ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்தி அறிவித்த CM விஜய் - ஒரு லிட்டருக்கு எவ்வளவு தெரியுமா?
ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்தி அறிவித்த CM விஜய் - ஒரு லிட்டருக்கு எவ்வளவு தெரியுமா?
Built for Brave: ராணுவ லுக்கில் ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 கோர்க்கா எடிஷன் அறிமுகம்- என்ன மாற்றம்?
Built for Brave: ராணுவ லுக்கில் ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 கோர்க்கா எடிஷன் அறிமுகம்- என்ன மாற்றம்?
IPL 2027: அடுத்த ஐபிஎல் தொடர் தொடங்கும் தேதி என்ன? போட்டிகளின் எண்ணிக்கை உயர்கிறதா? புதிய மாற்றங்கள்
அடுத்த ஐபிஎல் தொடர் தொடங்கும் தேதி என்ன? போட்டிகளின் எண்ணிக்கை உயர்கிறதா? புதிய மாற்றங்கள்
பணிந்த அரசு! ’கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் போராடக்கூடாது’ கடும் எதிர்ப்பால் தடை உத்தரவு வாபஸ்!
பணிந்த அரசு! ’கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் போராடக்கூடாது’ கடும் எதிர்ப்பால் தடை உத்தரவு வாபஸ்!
நடுத்தர SUV போர்; டாடா சியரா வருகையால் கியா செல்டோஸ்-க்கு கடும் போட்டி!- யாருக்கு முதலிடம்?
நடுத்தர SUV போர்; டாடா சியரா வருகையால் கியா செல்டோஸ்-க்கு கடும் போட்டி!- யாருக்கு முதலிடம்?
Hyundai Tucson: ரக்கட் ஆன டிசைன், பேக்கேஜ்ட் அம்சங்கள், ஹைப்ரிட் - முற்றிலும் புதிய டக்சன் SUV - விலை என்ன?
ரக்கட் ஆன டிசைன், பேக்கேஜ்ட் அம்சங்கள், ஹைப்ரிட் - முற்றிலும் புதிய டக்சன் SUV - விலை என்ன?
தோழர்களுக்கே குஜிலிமஸ்தா.! கூட்டணிக்காக கம்யூனிஸ்டுக்கு மிரட்டலா.? TVK அரசை போட்டு தாக்கும் அதிமுக
தோழர்களுக்கே குஜிலிமஸ்தா.! கூட்டணிக்காக கம்யூனிஸ்டுக்கு மிரட்டலா.? TVK அரசை போட்டு தாக்கும் அதிமுக
Embed widget