மேலும் அறிய

4 ஆண்டுகளுக்குப் பிறகு கம்பேக்... குரு மணிரத்னத்துக்காக! ரசிகர்களின் வாழ்த்து மழையில் ஐஸ்வர்யா ராய்!

4 ஆண்டுகளாக பாலிவுட்டில் பல படங்களையும் நிராகரித்து வந்த நடிகை ஐஸ்வர்யா ராய்,  தன்னை அறிமுகப்படுத்திய மணிரத்னத்தின் படம் என்பதால் இப்படத்தில் நடித்துள்ளார்.

இயக்குநர் மணிரத்னத்தின் கனவுப் படமான ‘பொன்னியின் செல்வன்’ படம் வரும் செப்டெம்பர் 30ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில், படத்தின் பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழா நேரு உள் விளையாட்டு அரங்கில் இன்று (செப்.06) நடைபெறுகிறது.

மணிரத்னத்தின் 'பொன்னியின் செல்வன்' படம் மூலம் நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு நடிகை ஐஸ்வர்யா ராய் மீண்டும் சினிமாவில் நடிக்க உள்ள நிலையில், அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

View this post on Instagram
 
A post shared by Ravi Varman (@r_varman_)

கர்நாடகாவில் பிறந்து உலக அழகிப் பட்டத்தை தன் 21ஆம் வயதில் கைப்பற்றிய ஐஸ்வர்யா ராய், தமிழ் சினிமாவில் தான் முதன்முதலில் அறிமுகமானார்.

இயக்குநர் மணிரத்னத்தின் இருவர் படம் மூலம் அறிமுகமான ஐஸ்வர்யா ராயின் படங்கள் முதலில் இந்தியில் தோல்வியையே தழுவின.  தொடர்ந்து சங்கரின் ஜீன்ஸ் படம் மூலம் வெற்றிப்பட நாயகியாக உருவெடுத்த ஐஸ்வர்யா ராய், ஹம் தில் தே சுக்கே சனம், தேவ்தாஸ் என இந்தியிலும் மாஸ் காட்டி முக்கிய நடிகையாக உருவெடுத்தார்.

இந்தியில் மிகப்பெரும் நடிகையாக ஐஸ்வர்யா ராய் உருவெடுத்தபோதும், திருமணத்துக்குப் பின்னும் தொடர்ந்து கோலிவுட் சினிமாவுடனான பிணைப்பை மறக்காமல் தமிழில் நடித்து வருகிறார். 

View this post on Instagram
 
A post shared by Aishwarya Rai Bachchan 🔵 (@aishwariyarai.official)

அந்த வகையில், தன்னை அறிமுகப்படுத்திய இயக்குநர் மணிரத்னத்தின் கனவுப்படமான பொன்னியின் செல்வனில் நந்தினி எனும் முக்கியக் கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யா ராய் தற்போது நடித்துள்ளார்.

இந்நிலையில், 4 ஆண்டுகளாக பாலிவுட்டில் பல படங்களையும் நிராகரித்து வந்த நடிகை ஐஸ்வர்யா ராய்,  தன்னை அறிமுகப்படுத்திய மணிரத்னத்தின் படம் என்பதால் இப்படத்தில் நடித்துள்ளார் என்றும், குரு - சிஷ்யை பந்தம் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டுமென்றும் எனவும் கூறி அவரது ரசிகர்கள் ட்விட்டரில் களமாடி வருகின்றனர்.

இன்று இப்படத்தின் ட்ரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமான முறையில் நடைபெற உள்ள நிலையில், முன்னதாக ட்விட்டரில் ஐஸ்வர்யா ராயின் ரசிகர்கள் வாழ்த்து மழையை பொழிந்து வருகின்றனர்.

இறுதியாக இந்தியில் 2018ஆம் ஆண்டு ஃபேனி கான் படத்தில் ஐஸ்வர்யா ராய் நடித்திருந்தார், தற்போது சுமார் 4 ஆண்டுகளுக்குப் பிறகு அவர் கம்பேக் கொடுக்க உள்ள நிலையில் ஐஸ்வர்யா ராயின் ரசிகர்கள் உற்சாகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

இந்த விழாவில் இந்திய சினிமாவின் இருபெரும் நடிகர்களான ரஜினிகாந்த், கமல்ஹாசன் இருவரும் கலந்துகொள்ள உள்ளதாக முன்னதாக அதிகாரப் பூர்வத் தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் கமல்ஹாசன், அனில் கபூர், ராணா டகுபதி, பிரத்விராஜ், ஜெயந்த் கைக்கினி என ஐந்து பிரபலங்களின் குரல்களில் ட்ரெய்லர் வெளியிடப்பட உள்ளது.

தலைப்பு செய்திகள்

Jailer 2: ஆட்டம் போட வைக்கும் அல்ல போலேலோ.. ரிலீசானது ரஜினியின் ஜெயிலர் 2 பாடல்! வைப்தான் இனி
Jailer 2: ஆட்டம் போட வைக்கும் அல்ல போலேலோ.. ரிலீசானது ரஜினியின் ஜெயிலர் 2 பாடல்! வைப்தான் இனி
Karthigai Deepam Serial: மகளுக்கு சாதகமாக பஞ்சாயத்து தீர்ப்பு.. சவால் விட்டு கிளம்பிய அம்மா - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam Serial: மகளுக்கு சாதகமாக பஞ்சாயத்து தீர்ப்பு.. சவால் விட்டு கிளம்பிய அம்மா - கார்த்திகை தீபத்தில் இன்று
Sowcar Janaki: 15 வயதிலே கல்யாணம்.. குழந்தை பெற்ற பிறகே நடிப்பு... 70 ஆண்டு திரைவாழ்க்கை.. செளகார் ஜானகியின் மறுபக்கம்
Sowcar Janaki: 15 வயதிலே கல்யாணம்.. குழந்தை பெற்ற பிறகே நடிப்பு... 70 ஆண்டு திரைவாழ்க்கை.. செளகார் ஜானகியின் மறுபக்கம்
Sowcar Janaki: பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி காலமானார்... திரைத்துறையினர் அதிர்ச்சி!
Sowcar Janaki: பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி காலமானார்... திரைத்துறையினர் அதிர்ச்சி!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK vs DMK: கடந்த ஆட்சியில் யாரைத் திருப்திப்படுத்த கார் பந்தயம்? உதயநிதிக்கு தவெக கேள்வி
TVK vs DMK: கடந்த ஆட்சியில் யாரைத் திருப்திப்படுத்த கார் பந்தயம்? உதயநிதிக்கு தவெக கேள்வி
TN Flash News Today: சட்டசபையில் வெடித்த மோதல்.. தங்க மோதிரம் திட்டத்தில் ட்விஸ்ட்.. இன்றைய முக்கிய நிகழ்வுகள்!
TN Flash News Today: சட்டசபையில் வெடித்த மோதல்.. தங்க மோதிரம் திட்டத்தில் ட்விஸ்ட்.. இன்றைய முக்கிய நிகழ்வுகள்!
MLAக்களுக்கு கார் கொடுக்குறது இருக்கட்டும்.. விவசாயிகளைப் பாருங்க.. உதயநிதி கடும் கண்டனம்!
MLAக்களுக்கு கார் கொடுக்குறது இருக்கட்டும்.. விவசாயிகளைப் பாருங்க.. உதயநிதி கடும் கண்டனம்!
Chennai Boat Service: சென்னையில் படகு சவாரி செய்ய ரெடியா? ரூ.876 கோடியில் பிரம்மாண்ட திட்டம்.. வரப்போகும் 8 மின்சாரப் படகுகள்!
Chennai Boat Service: சென்னையில் படகு சவாரி செய்ய ரெடியா? ரூ.876 கோடியில் பிரம்மாண்ட திட்டம்.. வரப்போகும் 8 மின்சாரப் படகுகள்!
ஒரே சார்ஜில் 699 கி.மீட்டர் மைலேஜ்.. தொடங்கியது BMW i5 LWB மின்சார காரின் முன்பதிவு - விலை எவ்ளோ?
ஒரே சார்ஜில் 699 கி.மீட்டர் மைலேஜ்.. தொடங்கியது BMW i5 LWB மின்சார காரின் முன்பதிவு - விலை எவ்ளோ?
Sowcar Janaki: 15 வயதிலே கல்யாணம்.. குழந்தை பெற்ற பிறகே நடிப்பு... 70 ஆண்டு திரைவாழ்க்கை.. செளகார் ஜானகியின் மறுபக்கம்
Sowcar Janaki: 15 வயதிலே கல்யாணம்.. குழந்தை பெற்ற பிறகே நடிப்பு... 70 ஆண்டு திரைவாழ்க்கை.. செளகார் ஜானகியின் மறுபக்கம்
தலைமைச் செயலாளர் மீது அதிருப்தி: நாளை போராட்டத்தில் குதிக்கும் சிபிஎம் - காரணம் என்ன?
தலைமைச் செயலாளர் மீது அதிருப்தி: நாளை போராட்டத்தில் குதிக்கும் சிபிஎம் - காரணம் என்ன?
SBI அடிப்படை சேமிப்பு கணக்கு: அக்டோபர் 1 முதல் புதிய கட்டணங்கள் - உஷார்!
SBI அடிப்படை சேமிப்பு கணக்கு: அக்டோபர் 1 முதல் புதிய கட்டணங்கள் - உஷார்!
Embed widget