மேலும் அறிய

Vanitha Wedding Photo: வனிதாவுக்கு என்னதான் ஆச்சு? பவர் ஸ்டாருடன் திருமணக்கோலத்தில் பதிவு!

இது ரியல் படமா ரீல் படமா என்பது வனிதா தரப்பில் இருந்து விளக்கம் தெரிவிக்கப்பட்ட பின்னரே உறுதியாக சொல்ல முடியும் என்பதால், நெட்டிசன்கள் குழப்பதில் உள்ளனர். 

குழந்தை நட்சத்திரமாக திரைத்துறையில் கால் பதித்தவர் நடிகை வனிதா விஜயக்குமார். நடிகர் விஜயுடன் சந்திரலேகா, ராஜ்கிரணுடன் மாணிக்கம் போன்ற படங்களில் கதாநாயகியாக நடித்தார். பிறகு தானே சில படங்களை தயாரித்து நடிக்கவும் செய்தார். ஆனால் அவற்றில் எல்லாம் கிடைக்காத புகழ் இவருக்கு பிக்பாஸ் நிகழ்சியின் மூலாமாக கிடைத்தது. தற்பொழுது தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்பது , யூடியூப் சேனலில் ஆக்டிவாக வீடியோ போடுவது போன்றவற்றை செய்து வருகிறார்.

இந்நிலையில், திருமண கோலத்தில் ஒரு புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். நடிகர் பவர்ஸ்டார் ஸ்ரீனிவாசனுடன் திருமணம் செய்து கொண்டது போல அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் இப்போது வைரலாகி வருகின்றது. இந்த புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் ஷாக் ஆனதோடு வாழ்த்துகளையும் தெரிவித்து வருகின்றனர்.

இது ரியல் படமா ரீல் படமா என்பது வனிதா தரப்பில் இருந்து விளக்கம் தெரிவிக்கப்பட்ட பின்னரே உறுதியாக சொல்ல முடியும் என்பதால், நெட்டிசன்கள் குழப்பதில் உள்ளனர். அதே நேரத்தில் அவர் பவர் ஸ்டாரை மணந்திருக்கலாம் என்று அவரது பதிவிலேயே ரசிகர்கள் பலர் வாழ்த்தி வருகின்றனர்.  

இந்நிலையில், இவர் முதலில் ஆகாஷ் என்பவரை திருமணம் செய்தார். அந்த திருமணம் முறிந்துவிட ஆனந்த்ராஜ் என்பவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். அந்தத் திருமணமும் விவாகரத்தில் முடிந்தது. அந்த சர்ச்சை பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஊடே எதிரொலித்தது. வனிதாவால் அந்த எபிஸோட் பிக்பாஸ் நிகழ்ச்சி களைகட்டியது. செட்டுக்கே போலீஸார் தேடிவர பரபரப்பாக பேசப்பட்டார் வனிதா.

சில காலம் வனிதா பற்றி சர்ச்சை ஏதும் எழாமல் இருந்தது. அப்போதுதான் அவர் தனது மூன்றாவது திருமண அறிவிப்பை வெளியிட்டார். பீட்டர்பால் என்பவருடன் மூன்றாவது திருமணம் நடந்தது. மகள்கள் முன்னிலையில் அவர் செய்துகொண்ட திருமணம் முற்போக்கானது என்று சிலரும், வளர்ந்த பிள்ளைகள் முன் இப்படியா என கலாச்சார காவல் கருத்துகளோடு சிலரும் வாதிட்டுவந்தனர்.
 
ஆனால், அந்தத் திருமணமும் நான்கே மாதங்களில் கசந்து முறிந்தது. பீட்டர்பாலை வனிதா அடித்து விரட்டினார் என்று பரபரப்பு செய்திகள் பரவின. பீட்டர்பாலின் மனைவியின் நிலையை வனிதா உணர்ந்து சோகத்தைப் பகிர்ந்த நிகழ்வுகளும் கூட நடந்தன. பீட்டர் பாலைப் பற்றி வனிதா ஒரு உருக்கமான ட்வீட்டை அந்த சமயத்தில் வெளியிட்டிருந்தார். இந்த நிலையில் தற்போது வனிதா விஜயகுமார் பைலட் ஒருவரை காதலிப்பதாகவும் அவரை கொல்கத்தாவில் உள்ள கோவில் ஒன்றில் ரகசிய திருமணம் செய்து கொண்டதாகவும் கூறப்பட்டது. 
இதுகுறித்து வனிதா தனது ட்விட்டர் பக்கத்தில், நான் இன்னும் சிங்கிள்தான். அவைளபிலும் கூட. எனவே யாரும் வதந்திகளைப் பரப்பாதீர்கள், நம்பாதீர்கள் எனப் பதிவிட்டிருக்கிறார். இந்நிலையில், இப்போது பவர்ஸ்டார் ஸ்ரீனிவாசனுடன் வெளியிட்டுள்ள புகைப்படம் வைத்து ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

தலைப்பு செய்திகள்

பல் விளக்கிட்டே கதை கேட்ட பிரபல தயாரிப்பாளர்.. அசராமல் கதை சொன்ன ப்ளாக்பஸ்டர் பட இயக்குனர்கள்! யாருப்பா அது?
பல் விளக்கிட்டே கதை கேட்ட பிரபல தயாரிப்பாளர்.. அசராமல் கதை சொன்ன ப்ளாக்பஸ்டர் பட இயக்குனர்கள்! யாருப்பா அது?
Viswanath & Sons Review: விஸ்வநாத் அண்ட் சன்ஸ் விமர்சனம்... சூர்யாவின் படம் வெற்றியா? தோல்வியா?
விஸ்வநாத் அண்ட் சன்ஸ் விமர்சனம்... சூர்யாவின் படம் வெற்றியா? தோல்வியா?
Actress Khushbu: தமிழால் தடுமாறிய காதல்.. விஜயால் கதறி அழுத மகள்.. நேர்காணலில் பகிர்ந்த குஷ்பு
Actress Khushbu: தமிழால் தடுமாறிய காதல்.. விஜயால் கதறி அழுத மகள்.. நேர்காணலில் பகிர்ந்த குஷ்பு
Karthigai deepam serial: கோபத்தின் உச்சியில் சாமுண்டீஸ்வரி.. ஆரத்தி எடுத்து கொண்டாடிய பரமேஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai deepam serial: கோபத்தின் உச்சியில் சாமுண்டீஸ்வரி.. ஆரத்தி எடுத்து கொண்டாடிய பரமேஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Masoud Pezeshkian to India: இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
Online Property Registration: பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
Thangami vs EPS : எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
TASMAC Liquor Ban: குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
Alloy Wheel or Steel Wheel: அலாய் வீலா அல்லது ஸ்டீல் வீலா.? உங்க வாகனத்துக்கு எது பெஸ்ட் சாய்ஸ்.? பயணத் தரம் மாறுமா.? முழு விவரங்கள்
அலாய் வீலா அல்லது ஸ்டீல் வீலா.? உங்க வாகனத்துக்கு எது பெஸ்ட் சாய்ஸ்.? பயணத் தரம் மாறுமா.? முழு விவரங்கள்
அதிகாரம், ஆணவப்பசி, வஞ்சம், வன்மம்: மக்களுக்கே சாபமா? திமுகவை சரமாரியாக சாடிய தவெக!
அதிகாரம், ஆணவப்பசி, வஞ்சம், வன்மம்: மக்களுக்கே சாபமா? திமுகவை சரமாரியாக சாடிய தவெக!
Iran Mocks Trump: 'விரைவில் குப்பையில்...' ட்ரம்ப்பை வச்சு செய்த ஈரானிய ஊடகங்கள்; உணவு லாரியில் சென்றதை வைத்து கேலி
'விரைவில் குப்பையில்...' ட்ரம்ப்பை வச்சு செய்த ஈரானிய ஊடகங்கள்; உணவு லாரியில் சென்றதை வைத்து கேலி
Embed widget