மேலும் அறிய

என்னது எனக்கு வேலை இல்லையா? - ட்ரோலுக்கு பதிலடி கொடுத்த டாப்ஸி!

நடிகை டாப்ஸி தன்னை பற்றி பரவி வரும் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார்.

கோலிவுட்டில் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான 'ஆடுகளம்’ திரைப்படம் மூலமாக அறிமுகமானவர் டாப்ஸி. இதனையடுத்து ராகவா லாரன்சுடன் காஞ்சனா 2, வந்தான் வென்றான், கேம் ஓவர், ஆரம்பம் , வை ராஜா வை போன்ற படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழில் கிரிக்கெட் வீராங்கனையான மித்தாலி ராஜின் வாழ்க்கை வரலாற்றை தழுவி எடுக்கப்படும் படத்தில் நடித்து வருகிறார். 

 பிறகு பாலிவுட் சினிமாவில் வாய்ப்புகள் கிடைக்கவே அவர் அதிக அளவில் இந்தி படங்களில்  கவனம் செலுத்தச் சென்று விட்டார். இந்தியில் டாப்ஸி நடிப்பில்  சமீபத்தில் நெட்ஃபிளிக்ஸ் தளத்தில்  வெளியான, ஹஸ்ஸின் தில்ரூபா  திரைப்படம் ரசிகர்களிடம் மாபெரும் வரவேற்பை பெற்று, பாராட்டுகளை வென்று குவித்தது. 


என்னது எனக்கு வேலை இல்லையா? - ட்ரோலுக்கு பதிலடி கொடுத்த டாப்ஸி!

இவரது நடிப்பில் சமீபத்தில் ஹாட் ஸ்டார் டிஸ்னி OTT தளத்தில்  வெளியான, அனபெல் சேதுபதி திரைப்படம் ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி ஹீரோவாக நடித்த இப்படத்தில் அவர் ராஜாவாக நடித்து அசத்தி இருந்தார். 

இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் படு ஆக்டிவாக இருக்கும் நடிகை டாப்ஸி தன்னை பற்றி பரவி வரும் வதந்தி குறித்து எதற்கும் செவி சாய்க்க மாட்டார். 

ஆனால் தற்போது அவர் பட வாய்ப்பில்லாமல் திணறி வருவதாக சமூக வலைத்தளங்களில் கடந்த சில தினங்களாக வதந்தி பரவியது. இது குறித்து ஆங்கில நாளிதழ் ஒன்றிற்கு நடிகை டாப்ஸி சமீபத்தில் பேட்டி அளித்து இருந்தார். 


என்னது எனக்கு வேலை இல்லையா? - ட்ரோலுக்கு பதிலடி கொடுத்த டாப்ஸி!
அப்போது பேசிய டாப்ஸி, "போட்டு பாரு சமூகவலைத்தளங்களில் என்னைக் குறித்துப் பரவி வரும் வதந்திக்கு அல்லது என்னை விமர்சனம் செய்யும் எந்த பதிவையும் நான் பார்ப்பதில்லை.

உன்னைப் பற்றி குறை சொல்பவர்கள் வேலையில்லாமல் சொல்கின்றனர். எனக்கு பட வாய்ப்பு இல்லாமல் நான் வெட்டியாக இருப்பதாக சமூக வலைத்தளங்களில் சிலர் பேசி வருகின்றனர். 

அதைக் கேட்பதற்கு எனக்கு வேடிக்கையாக இருந்தது. 2023 ஆம் ஆண்டு வரை எனக்குப் படங்களுக்குத் தேதி  தேதி ஒதுக்குவதற்கு கூட நேரம்   இல்லை. அப்படி இருக்கையில் எனக்கு பட வாய்ப்பு இல்லை என சிலர் வதந்தி பரப்புவது வேடிக்கையாக உள்ளது" எனத் தெரிவித்து உள்ளார்.


என்னது எனக்கு வேலை இல்லையா? - ட்ரோலுக்கு பதிலடி கொடுத்த டாப்ஸி!

எப்போதும் மனதில் தோன்றுவதை அப்படியே வெளிக்காட்டுவதில் அணியில் டாப்ஸி வல்லவர். அதனால்தான் என்னவோ இவருக்கான ரசிகர்கள் பட்டாளம் ஆரம்பத்தில் இருந்து தற்போது வரை நீங்காமல் இருக்கின்றனர். 

இவர் தற்போது தெலுங்கு மொழியில் மிஷன் இம்பாசிபிள் என்ற திரைப்படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். இதுதவிர ஒரு சில ஹிந்தி மற்றும் தமிழ் படங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார்.

தலைப்பு செய்திகள்

பார்ட் 2 என்றாலே சரக்கு தீர்ந்துப்போச்சுனு சொல்லுவாங்க..ஜெயிலர் 2 படம் ஏன்..விளக்கம் கொடுத்த ரஜினி
பார்ட் 2 என்றாலே சரக்கு தீர்ந்துப்போச்சுனு சொல்லுவாங்க..ஜெயிலர் 2 படம் ஏன்..விளக்கம் கொடுத்த ரஜினி
Jailer 2 Booking : ஜெயிலர் 2 முன்பதிவுகள் தொடக்கம்!
Jailer 2 Booking : ஜெயிலர் 2 முன்பதிவுகள் தொடக்கம்!
“நான் எப்போ தப்பா நடந்தேன்?” – முத்துக்குமரன் கேள்வி.. வஹிதா வெளியிட்ட ஆடியோவால் பரபரப்பு!
“நான் எப்போ தப்பா நடந்தேன்?” – முத்துக்குமரன் கேள்வி.. வஹிதா வெளியிட்ட ஆடியோவால் பரபரப்பு!
ஜெய் பீம் பார்த்து இயக்குநரை திட்டிய அம்மா...மணிகண்டன் பகிர்ந்த சுவாரஸ்ய நிகழ்வு
ஜெய் பீம் பார்த்து இயக்குநரை திட்டிய அம்மா...மணிகண்டன் பகிர்ந்த சுவாரஸ்ய நிகழ்வு

வீடியோ

Elon musk Rahul Gandhi : ”நிஜ பாஸ் யார்?இன்னொருத்தர் இருக்காரு”கொளுத்தி போட்ட மஸ்க்-ராகுல்
Thoothukudi Police Issue :
Elon musk on Ambani : இந்தியாவின் BOSS அம்பானியா? மோடி மீது எலான் மஸ்க் அட்டாக்! ஸ்டார்லிங்க்
TVK MLA Saravanan : ”பணத்தை வாங்கிட்டு மிரட்டுறாங்க” தவெக MLA மீது பகீர் புகார் வாலிபரின் வைரல் வீடியோ!
Uttarakhand iPhone theft :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay:
CM Vijay: "தமிழக மக்களுக்கு 100 சதவீதம் விசுவாசமாக இருப்போம்.." வெற்றி மகிழ்ச்சியில் விஜய் திட்டவட்டம்
Sivakrishnamurthy IAS : ‘கலெக்டரான கூலித் தொழிலாளியின் மகன்’ யார் இந்த தேனி ஆட்சியர் சிவகிருஷ்ணமூர்த்தி..!
‘கலெக்டரான கூலித் தொழிலாளியின் மகன்’ யார் இந்த தேனி ஆட்சியர் சிவகிருஷ்ணமூர்த்தி..!
MK Stalin:
MK Stalin: "துரோகத்திற்கான இடைக்கால வெற்றி.. விஜய்யின் வீழ்ச்சி தொடக்கம்.." திமுக தோல்விக்கு மு.க.ஸ்டாலின் பரபரப்பு விளக்கம்
TVK:
TVK: "தேர்தல் தோல்வியை சமாளித்து திமுக எப்படி உருட்டும்?" நக்கல் செய்த தவெக!
ADMK: இரண்டாவது இடம்கூட இல்ல.. 3வது இடம்..! தொடர் சறுக்கலில் அதிமுக! என்னதான் செய்வார் இபிஎஸ்?
ADMK: இரண்டாவது இடம்கூட இல்ல.. 3வது இடம்..! தொடர் சறுக்கலில் அதிமுக! என்னதான் செய்வார் இபிஎஸ்?
Rajesh Lakhoni IAS : ’மின்சாரத்துறைக்கு புதிய அதிகாரி – டிக் அடித்த அமைச்சர்’ யார் இந்த ராஜேஸ் லக்கானி..!
’மின்சாரத்துறைக்கு புதிய அதிகாரி' யார் இந்த ராஜேஸ் லக்கானி..!
TN Election Results 2026 LIVE: தாராபுரத்தில் 2ஆம் இடத்தில் திமுக.! 3 இடத்தில் அதிமுக-முதல் இடத்தில் கில்லியாக தவெக
தாராபுரத்தில் 2ஆம் இடத்தில் திமுக.! 3 இடத்தில் அதிமுக-முதல் இடத்தில் கில்லியாக தவெக
TN Bypoll: மக்கள் ஏமாளிகள்? அம்பலப்பட்ட உண்மை, உற்சாகத்தில் விஜயபாஸ்கர்கள் - திருந்த வேண்டியது யார்?
மக்கள் ஏமாளிகள்? அம்பலப்பட்ட உண்மை, உற்சாகத்தில் விஜயபாஸ்கர்கள் - திருந்த வேண்டியது யார்?
Embed widget