![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Tamannaah : ஆணாக மாறிய தமன்னா.. அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள்.. இந்த டிட் பிட்ஸ் பாருங்க..
பச்சை நிற சேலையில் படு கவர்ச்சியாக வரும் தமன்னா பின்னர் ஆணாக மாறி வரும் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.
![Tamannaah : ஆணாக மாறிய தமன்னா.. அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள்.. இந்த டிட் பிட்ஸ் பாருங்க.. actress tamannah shared her stunning glamour video and her transformation into boy in instagram Tamannaah : ஆணாக மாறிய தமன்னா.. அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள்.. இந்த டிட் பிட்ஸ் பாருங்க..](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/06/01/5b4005f399fcc66e9302bea0a228884b_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
பச்சை நிற சேலையில் படு கவர்ச்சியாக வரும் தமன்னா பின்னர் ஆணாக மாறி வரும் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.
கேடி திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமான நடிகை தமன்னா சில ஆண்டுகளிலேயே கோலிவுட்டில் பெரும் வளர்ச்சியடைந்து விஜய், அஜித், தனுஷ் உள்ளிட்ட பெரும் நடிகர்களுடன் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தார். பின்னர் தமிழில் வாய்ப்புகள் குறைய தெலுங்கு பக்கம் ஒதுங்கிய அவர், தற்போது டோலிவுட் திரையுலகில் மிகவும் பிசியாகியிருக்கிறார். குர்துந்தா சீதகலம், போல சங்கர், போலே சுடியான், சோர் நிகல் கே பாகா. பப்ளி பவுன்சர், தட் ஈஸ் மஹாலட்சுமி, ஏன் என்று காதல் என்பேன், காத்து கருப்பு உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார்.
தயாரிப்பாளர் தில் ராஜுவின் தயாரிப்பில், அனில் ரவிப்புடி இயக்கத்தில், வெங்கடேஷ் டகுபதி, வருன் தேஜ், தமன்னா, மெஹ்ரீன் பிர்ஷதா, சோனல் சவுகான் உள்ளிட்ட பெரும் நடிகர் பட்டாளமே நடித்த எஃப்3 திரைப்படம் உலகம் முழுவதும் 1400 தியேட்டர்களில் மே 27ம் தேதி வெளியானது. 2019ல் வெளியான F2 திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து எடுக்கப்பட்ட, காமெடி திரைப்படமான எஃப்3 திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. அமெரிக்காவில் மட்டும் ஒரு மில்லியன் டாலர்களை இதுவரை வசூல் செய்துள்ளது. குடும்பங்கள் கொண்டாடும் இத்திரைப்படத்தை பிரபல ஓடிடி தளமான சோனி லைவ் வாங்கியிருப்பதாகவும், தியேட்டர்களில் வெளியாகி 4 வாரங்களில் இத்தளத்தில் வெளியாகும் என்றும் படக்குழு தெரிவித்திருந்தது. இத்திரைப்படத்தில் ஹரிகா என்ற பெயரில் நடித்துள்ள தமன்னாவின் நடிப்பு ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த திரைப்படத்தில் சில காட்சிகளில் தமன்னா ஆண் வேடத்தில் வருகிறார்.
இந்த நிலையில், தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் தமன்னா. அதில் பச்சை நிற புடவையில் படு கவர்ச்சியாக வரும் தமன்னா, கதவை மூடிவிட்டு திறந்ததும் ஆணாக மாறி வருகிறார். மிஸ் பி மற்றும் அவரது சகோதரர் என்று அந்த வீடியோவில் குறிப்பிட்டுள்ள அவர், எஃப்3, ஸ்ரீவெங்கடேஸ்வரா க்ரியேஷன்ஸ், இயக்குநர் அனில் ரவிபுடி, ப்ரதா கன்சர் ஆகியோரை டேக் செய்துள்ளார்.
Miss B and her Bro👦🏻#f3 @AnilRavipudi @ThisIsDSP @SVC_official @nishkalulla pic.twitter.com/W9dcmHDgnZ
— Tamannaah Bhatia (@tamannaahspeaks) May 31, 2022
இவர்களோடு நிஷ்கா லுல்லா மற்றும் அஷ்வின் ஆகியோரையும் டேக் செய்துள்ளார். நிஷ்கா லுல்லா பிரபல ஆடை வடிவமைப்பாளராவார். இவர் தமன்னாவிற்கு நீண்டகாலமாக ஆடை வடிவமைப்பாளராக இருந்து வருகிறார். அதே போல அஷ்வினும் ஆடை வடிவமைப்பாளராக இருந்து வருகிறார். பச்சை உடையில் இருக்கும் தமன்னாவிற்கு நிஷ்கா லுல்லாவும், ஆண் வேடமிட்ட தமன்னாவிற்கு அஷ்வினும் ஆடை வடிவமைப்பு செய்துள்ளதாகத் தெரிகிறது.
இன்ஸ்டாகிராமில் தமன்னா பதிவிட்டுள்ள இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)