மேலும் அறிய

Tabu : படப்பிடிப்பின்போது விபத்து... நூலிழையில் உயிர் தப்பிய நடிகை தபு! நடந்தது என்ன?

இந்த படத்தின் ஷூட்டிங்கின் போது நடிகை தபுவிற்கு விபத்து ஏற்பட்டுள்ளது.

பாலிவுட் திரைப்படங்களில் நீண்ட நாட்களாக நடித்து வரும் சில நடிகைகளில் ஒருவர் தபு. இவர் பாலிவுட் மட்டுமல்லாமல் தமிழ்,தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் வெளிவந்த திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

குறிப்பாக தமிழில் காதல் தேசம், சிநேகிதியே, கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். தபு தேசிய விருது பெற்ற நடிகை ஆவார். 

போலா :

Tabu : படப்பிடிப்பின்போது விபத்து... நூலிழையில் உயிர் தப்பிய நடிகை தபு! நடந்தது என்ன?

பாலிவுட்டில் மிகப் பிரபலமான நடிகர் அஜய் தேவ்கன். பிரபல நடிகை கஜோலை காதலித்து திருமணம் செய்துகொண்டார். பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன் நடிகை தபு ஆகியோர் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் போலா. அஜய் தேவ்கன் நடிக்கும் இந்த ஆக்சன் திரைப்படத்தில் உயர் போலிஸ் அதிகாரியாக நடிக்கிறார் நடிகை தபு.  இந்த திரைப்படம் கார்த்தி நடிப்பில் வெளியான தமிழ் திரில்லர் திரைப்படமான கைதி படத்தின் ஹிந்தி ரீமேக் ஆகும். கைதி திரைப்படம் தமிழில் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. போலா என பெயர் வைக்கப்பட்டிருக்கும் இந்த திரைப்படத்தில் நாயகன் அஜய் தேவ்கன் உடன் நடிக்கும் நடிகை தபு மிகவும் கடினமான சண்டை காட்சிகளிலும் நடிக்கிறாராம்.

நடிகை தபுவிற்கு விபத்து :


Tabu : படப்பிடிப்பின்போது விபத்து... நூலிழையில் உயிர் தப்பிய நடிகை தபு! நடந்தது என்ன?

இந்த படத்தின் ஷூட்டிங்கின் போது நடிகை தபுவிற்கு விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் பெறும் காயத்திலிருந்து நூலிழையில் தப்பித்துள்ளாராம் நடிகை தபு. அடர்ந்த காட்டுப் பகுதியில் ட்ரக் ஒன்றை ஓட்டிக் கொண்டிருந்தபோது, மோட்டார் சைக்கிளில் வந்த ரௌடிகள் நடிகை தபுவை துரத்தும் சண்டைக் காட்சியின் போது,  துரத்தி வந்த மோட்டார் சைக்கிளில் ஒன்று தபு ஓட்டி வந்த ட்ரக்கின் மீது  மோதியுள்ளது. மோதியதில் கண்ணாடி உடைந்து தபுவின் மீது குத்தியுள்ளது. ட்ரக் மீது மோட்டார் சைக்கிள் மிகவும் வேகமாக மோதியதாகவும், அதனால் கண்ணாடி உடைந்து தபுவை தாக்கியதாகவும் செய்திகள் வெளியாகின. உடைந்த கண்ணாடி துகள்கள் நடிகை தபுவின் வலது கண்ணின் மேல் பகுதியில் குத்தியதாக கூறப்படுகிறது. 

செட்டில் இருந்த மருத்துவ உதவி குழு, இது குறித்து கூறுகையில் தபுவிற்கு ஏற்பட்ட காயம் சிறிய காயம் தான்; அதனால் அவருக்கு தையல் எதுவும் போட தேவையில்லை என்று கூறியுள்ளனர். நடிகை தபு இந்த விபத்தில் ஏற்பட்ட காயத்தால் ஓய்வு எடுத்துக் கொள்ள வேண்டும். அதுவரை பிரேக் எடுத்துக் கொள்வதாக அஜய் தேவ்கன் படக்குழுவினரிடம் கூறியுள்ளார்.

 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

Baththa Review: கேங்ஸ்டராக அசத்தினாரா விஜய் சேதுபதி? எப்படி இருக்கு அட்லீயின் பத்தா? திரைப்பட விமர்சனம்
கேங்ஸ்டராக அசத்தினாரா விஜய் சேதுபதி? எப்படி இருக்கு அட்லீயின் பத்தா? திரைப்பட விமர்சனம்
ஜெயிலர் 2 ஆல்பம் ரிவியூ: மாஸ் முதல் கிளாசிக்கல் வரை கலக்கும் அனிருத்
ஜெயிலர் 2 ஆல்பம் ரிவியூ: மாஸ் முதல் கிளாசிக்கல் வரை கலக்கும் அனிருத்
பென்ஸ் திரைப்படத்தில் இடம்பெறும் LCU கதாப்பாத்திரங்கள் - நிவின் பாலி சொன்ன சீக்ரெட்...
பென்ஸ் திரைப்படத்தில் இடம்பெறும் LCU கதாப்பாத்திரங்கள் - நிவின் பாலி சொன்ன சீக்ரெட்...
Jailer 2 : அந்த ஒரு காட்சியை நீக்க சொன்ன சென்சார் போர்ட்..முடியாது என்ற நெல்சன்..ஆர்டர் போட்டர் ரஜினி
Jailer 2 : அந்த ஒரு காட்சியை நீக்க சொன்ன சென்சார் போர்ட்..முடியாது என்ற நெல்சன்..ஆர்டர் போட்டர் ரஜினி

வீடியோ

VS Babu in Hospital : ICU-வில் V.S பாபு.. சுவாச கருவியில் தீவிர சிகிச்சை! HOSPITAL பரபரப்பு அறிக்கை
Tiruvotriyur CRIME : மிரட்டிய போலீஸ்! பேட்டி கொடுத்த மறுநாளே இளைஞர் கொலை! திருவொற்றியூரில் பயங்கரம்!
Oothangarai News : பள்ளி மாணவியிடம் அத்துமீறல்! பேருந்தை மறித்து கண்டக்டரை ஓட ஓட அடித்த பொதுமக்கள்!
Vijay London Trip : Phone போட்ட ஆளுநர்! ”லண்டனுக்கு போகாதீங்க ” பயணத்தை மாற்றிய CM விஜய்
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Amudha IAS : ’நெல் கொள்முதல் தேக்கம் – பொதுவிநியோக திட்டம் பாதிக்கும் அபாயம்’ ரூல்ஸ் ராமனுஜமாக அமுதா ஐ.ஏ.எஸ்..!
’நெல் கொள்முதல் தேக்கம்' பொதுவிநியோக திட்டம் பாதிக்கும் அபாயம்..!
Dharapuram by Election : தாராபுரம் பிரச்சார மேடையில் சத்யபாமாவின் காதில் சொன்னது இது தான்.! ராஜ்மோகன் பரபரப்பு விளக்கம்
தாராபுரம் பிரச்சார மேடையில் சத்யபாமாவின் காதில் சொன்னது இது தான்.! ராஜ்மோகன் பரபரப்பு விளக்கம்
Vijay Speech: ரூட்டை மாற்றிய CM விஜய்..! கொங்கு மண்டலத்தில் மட்டும் ஏன் இப்படி? குறிவைக்கப்பட்ட எடப்பாடி
ரூட்டை மாற்றிய CM விஜய்..! கொங்கு மண்டலத்தில் மட்டும் ஏன் இப்படி? குறிவைக்கப்பட்ட எடப்பாடி
Dharapuram By Election: ராஜ்மோகன் சொல்லி சத்யபாமா அழுதாரா? .. வெடித்த அடுத்த சர்ச்சை.. உண்மை என்ன தெரியுமா?
Dharapuram By Election: ராஜ்மோகன் சொல்லி சத்யபாமா அழுதாரா? .. வெடித்த அடுத்த சர்ச்சை.. உண்மை என்ன தெரியுமா?
Volkswagen SUV: ரூ.9 லட்சம் பட்ஜெட், கைலாக் மாதிரியே ஹிட் அடிக்கனும்..! ஃபோக்ஸ்வாகன் எஸ்யுவி - போலோ கம்பேக்?
ரூ.9 லட்சம் பட்ஜெட், கைலாக் மாதிரியே ஹிட் அடிக்கனும்..! ஃபோக்ஸ்வாகன் SUV - போலோ கம்பேக்?
காந்தி ஜெயந்தி தொடர் விடுமுறை: தெற்கு ரயில்வே சிறப்பு ரயில்கள்! முன்பதிவு எப்போது?
காந்தி ஜெயந்தி தொடர் விடுமுறை: தெற்கு ரயில்வே சிறப்பு ரயில்கள்! முன்பதிவு எப்போது?
TN Weather News: இடி, மின்னலுடன் கனமழை..! இன்று 13 மாவட்டங்களுக்கு வார்னிங் - சென்னை? தமிழக வானிலை அறிக்கை
இடி, மின்னலுடன் கனமழை..! இன்று 13 மாவட்டங்களுக்கு வார்னிங் - சென்னை? தமிழக வானிலை அறிக்கை
Gold and silver rate today : அக்டோபர் முதல் நாளில் நகைப்பிரியர்களுக்கு நிம்மதி.! குறைந்தது தங்கம் விலை-ஒரு சவரன் என்ன விலை.?
அக்டோபர் முதல் நாளில் நகைப்பிரியர்களுக்கு நிம்மதி.! குறைந்தது தங்கம் விலை-ஒரு சவரன் என்ன விலை.?
Embed widget