”சந்தானம் இவங்களுக்கு லவ் லெட்டர் கொடுத்ததில் தப்பே இல்லை” - வைரலாகும் ஃபேன் மீம்.
அந்த காட்சி அமைந்த புகைப்படத்துடன், சுரேகா வாணியின் சமீபத்தைய புகைப்படங்களை இணைத்து, " சந்தானம் இவங்களுக்கு லவ் லெட்டர் கொடுத்ததில் தப்பே இல்லை" என ரசிகர் ஒருவர் மீம் ஒன்றினை உருவாக்கியுள்ளார்.

தமிழ் திரையுலகில் குணச்சித்திர நடிகையாக வலம் வருபவர் நடிகை "சுரேகா வாணி" . இவர் தெய்வ திருமகள், காதலில் சொதப்புவது எப்படி, எதிர் நீச்சல், ஜில்லா, பிரம்மன், மெர்சல் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இது தவிர தெலுங்கு மொழியில் பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். சுரேஷ் தேஜா என்பவரை திருமணம் செய்தார். சுரேஷ் தேஜா தெலுங்கு சின்னத்திரையில் எழுத்தாளராகவும், மா டாக்கீஸ் உள்ளிட்ட சில நிகழ்ச்சிகளில் இயக்குநராகவும் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 2019-ஆம் ஆண்டு உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது.
சுரேகா வாணி சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவாக இருப்பவர். சுரேகா வாணியின் போஸ்ட்களுக்கு லைக்ஸ்குகள் குவிந்த வண்ணம் இருக்கும். மேலும் அந்த புகைப்படங்களை வைத்து மீம்ஸ் உருவாக்கப்படுவதும் வழக்கமான ஒன்றுதான். அப்படித்தான் பிரம்மன் படத்தில் கல்லூரி ஆசிரியராக வலம் வரும் சுரேகா வாணிக்கு சந்தானம் லவ் லெட்ட்ர் கொடுப்பது போன்ற காட்சி அமைந்திருக்கும். அந்த காட்சி அமைந்த புகைப்படத்துடன், சுரேகா வாணியின் சமீபத்தைய புகைப்படங்களை இணைத்து, " சந்தானம் இவங்களுக்கு லவ் லெட்டர் கொடுத்ததில் தப்பே இல்லை" என ரசிகர் ஒருவர் மீம் ஒன்றினை உருவாக்கியுள்ளார். இதனை சுரேகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது
சுரேகா வாணியை போலவே , இவரின் மகள் சுப்ரிதாவிற்கும் ஏராளமான ரசிகர்கள் உண்டு. சுப்ரிதா நடிப்பில் அதீத ஆர்வம் உள்ளவராக தெரிகிறது. தனது இண்ஸ்டாகிராம் பக்கத்தில் ஏகப்பட்ட ரீல்ஸினை செய்து குவித்துள்ளார். இந்நிலையில் அம்மாவுக்கும் இவருக்குமான பந்தம் குறித்த பதிவுகளை இவர் அவ்வப்போது வெளியிடுவது வழக்கம். தனது சிறுவயதில் அணிந்த ஆடைகள் மற்றும் பயன்படுத்திய பொருட்கள் குறித்து தாய் சுரேகா வாணி விவரிக்க, அதை வீடியோ எடுத்தவாறே கேட்டுக்கொண்டிருப்பார் சுப்ரிதா. அந்த க்யூட் வீடியோவையும் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார் சுப்ரிதா
View this post on Instagram
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

