மேலும் அறிய

Rocket Driver: சுனைனாவின் அடுத்த அதிரடி.. பேண்டஸி கதையாக உருவாகும் “ராக்கெட் டிரைவர்”

சுனைனா நடிப்பில் பேண்டஸி டிராமாவாக உருவாகும் “ராக்கெட் டிரைவர்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களை கவர்ந்துள்ளது. 

சுனைனா நடிப்பில் பேண்டஸி டிராமாவாக உருவாகும் “ராக்கெட் டிரைவர்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களை கவர்ந்துள்ளது. 

ஸ்டோரீஸ் பை தி ஷோர் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் அனிருத் வல்லப் தயாரிக்கும் புதிய படம் "ராக்கெட் டிரைவர்". இந்த படத்தை அறிமுக இயக்குநர் ஸ்ரீராம் அனந்த சங்கர் இயக்குகிறார். ஃபேண்டசி, டிராமா-காமெடி என்டர்டெயினர் கதையம்சம் கொண்ட படமாக "ராக்கெட் டிரைவர்" உருவாகிறது. இந்த படத்தில் விஷ்வந்த் முதன்மை பாத்திரத்தில் நடிக்கிறார். 

தான் செய்த தவறுகளால், தனது வாழ்க்கை ஏமாற்றம் நிறைந்த ஒன்று என புலம்பி வரும் ஆட்டோ ஓட்டுநர், உலகையே மாற்ற வேண்டும் என்ற கனவு கொண்டிருக்கிறார். எனினும், இது தொடர்பாக அவரால் எதுவும் செய்ய முடியவில்லை. இந்த நிலையில், தனது ரோல் மாடலை அவரது 17-வயதில் காண்கிறார். அப்போது அரங்கேறும் விசித்திர சம்பவம் விபரீதத்தில் முடிகிறது. இதைத் தொடர்ந்து நடைபெறும் சம்பவங்களே இப்படத்தின் கதையாக அமைக்கப்பட்டுள்ளது.  

அறிமுக நாயகன் விஷ்வந்த் முன்னணி வேடத்தில் நடிக்கும் இந்த படத்தில் தேசிய விருது வென்ற நாக விஷால், காத்தாடி ராமமூர்த்தி, சுனைனா, ஜெகன் மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். 

இந்த படத்திற்கு கௌஷிக் கிரிஷ் இசையமைக்கிறார். ஒளிப்பதிவு பணிகளை ரெஜிமல் சூர்யா தாமஸ் மேற்கொள்கிறார். படத்தொகுப்பு பணிகளை இனியவன் பாண்டியன் கவனிக்க, கலை இயக்கத்தை பிரேம் கருந்தாமலை, ஷில்பா ஐயர் ஆடை வடிவமைப்பு, சுரேஷ் ரவி டி.ஐ. பணிகளையும் மேற்கொள்கின்றனர்.  

தயாரிப்பு நிர்வாகியாக செல்வேந்திரன் பணியாற்றும் இந்த படத்தின் ஒலி வடிவமைப்பு பணிகளை சங்கரன் மற்றும் சித்தார்த்தா மேற்கொள்கின்றனர். ஒலி கலைவையை அரவிந்த் மேனனும், விளம்பர வடிவமைப்பு பணிகளை ஸ்ரீ ஹரி சரண் மேற்கொள்கிறார்கள்.அக்ஷய் பொல்லா, பிரசாந்த் எஸ் மற்றும் ஸ்ரீராம் அனந்த சங்கர் இணைந்து எழுதியிருக்கும் இந்த படத்திற்கான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தை ஆகஸ்ட் 2024-இல் வெளியிட படக்குழு திட்டமிட்டு வருகிறது.

தலைப்பு செய்திகள்

மறுவெளியீட்டில் சாதனை படைத்த சிம்பு...இந்திய அளவில் முதன்முறை...
மறுவெளியீட்டில் சாதனை படைத்த சிம்பு...இந்திய அளவில் முதன்முறை...
Jailer 2 Pre Release Business : ரிலீஸ் முன்பே இத்தனை கோடியா! எகிறிய ஜெயிலர் 2 வியாபாரம்
Jailer 2 Pre Release Business : ரிலீஸ் முன்பே இத்தனை கோடியா! எகிறிய ஜெயிலர் 2 வியாபாரம்
ரூ.8 கோடி சம்பளம் கேட்டேனா? விக்ரம் பட நடிகை விளக்கம்...
ரூ.8 கோடி சம்பளம் கேட்டேனா? விக்ரம் பட நடிகை விளக்கம்...
’டேர் டெவில்’ படத்தின் புதிய அப்டேட்...அஜித் ரசிகர்கள் உற்சாகம்...
’டேர் டெவில்’ படத்தின் புதிய அப்டேட்...அஜித் ரசிகர்கள் உற்சாகம்...

வீடியோ

Sivakarthikeyan Politics : CM விஜய் ரூட்டில் SK..ரசிகர் மன்றம் டூ நற்பணி இயக்கம்! குஷியில் ரசிகர்கள்
Temple Caste Issue : பட்டியலின மக்களை கோயிலுக்குள் விடாத மாற்று சமூகத்தினர் பூட்டை உடைத்த மாவட்ட SP!
திமுக OUT தவெக IN I.N.D.I.A கூட்டத்தில் ஆதவ் காங்கிரஸின் அதிரடி பிளான்
VS Babu in Hospital : ICU-வில் V.S பாபு.. சுவாச கருவியில் தீவிர சிகிச்சை! HOSPITAL பரபரப்பு அறிக்கை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
துவரம் பருப்பு கொள்முதல்: திமுக ஆட்சியை விட கிலோவுக்கு ரூ.31 குறைவு.. 3 மாதங்களில் ரூ.187 கோடி சேமிப்பு
துவரம் பருப்பு கொள்முதல்: திமுக ஆட்சியை விட கிலோவுக்கு ரூ.31 குறைவு.. 3 மாதங்களில் ரூ.187 கோடி சேமிப்பு
ZERO Ticket கட்டாயம்... பெண்கள் இலவச பயணம்.! போக்குவரத்துக் கழகங்களுக்கு பறந்த 17 முக்கிய உத்தரவுகள்
ZERO Ticket கட்டாயம்... பெண்கள் இலவச பயணம்.! போக்குவரத்துக் கழகங்களுக்கு பறந்த 17 முக்கிய உத்தரவுகள்
Chennai Bypass: 15 மாத வெயிட்டிங்..! ரூ.26 கோடி செலவில் புது பைபாஸ், அடையாறு அப்க்ரேட் ஒப்புதல் வருமா? ட்ராஃபிக் சிக்கல்
15 மாத வெயிட்டிங்..! ரூ.26 கோடி செலவில் புது பைபாஸ், அடையாறு அப்க்ரேட் ஒப்புதல் வருமா? ட்ராஃபிக் சிக்கல்
Hyundai Offer: ஹுண்டாயின் நவராத்திரி ஆஃபர்..! ரூ.1.25 லட்சம் வரை தள்ளுபடி..! SUV-க்களின் கிங்கிற்கான சலுகை என்ன?
ஹுண்டாயின் நவராத்திரி ஆஃபர்..! ரூ.1.25 லட்சம் வரை தள்ளுபடி..! SUV-க்களின் கிங்கிற்கான சலுகை என்ன?
TN Weather News: 32 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..! இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? வானிலை அறிக்கை
32 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..! இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? வானிலை அறிக்கை
TNEB: பராமரிப்பு நாளில் 8 மணி நேரம் மின் தடை அமல்.. பதறிப்போன மக்கள்.. உண்மை நிலவரம் என்ன?
TNEB: பராமரிப்பு நாளில் 8 மணி நேரம் மின் தடை அமல்.. பதறிப்போன மக்கள்.. உண்மை நிலவரம் என்ன?
Gold and silver rate today : இன்று நகைப்பிரியர்களுக்கு குஷியா.? தங்கத்தின் விலை குறைந்ததா.? உயர்ந்ததா.? விலை நிலவரம் இதோ..
இன்று நகைப்பிரியர்களுக்கு குஷியா.? தங்கத்தின் விலை குறைந்ததா.? உயர்ந்ததா.? விலை நிலவரம் இதோ..
TN Govt Entrepreneur: கம்மி வட்டியில் ரூ.5 கோடி வரை கடன்..! தகுதி, தேவையான ஆவணங்கள், விண்ணப்பிக்கும் முறை
கம்மி வட்டியில் ரூ.5 கோடி வரை கடன்..! தகுதி, தேவையான ஆவணங்கள், விண்ணப்பிக்கும் முறை - அரசு திட்டம்
Embed widget