மேலும் அறிய

Actress Shakila: ”வீடியோவில் அக்கா”.. நண்பர்களுடன் ஷகீலாவின் கவர்ச்சி படம் பார்த்த தம்பி - அதிரவைக்கும் சம்பவம்!

நான் மலையாளத்தில் கவர்ச்சி படம் பண்ணிக்கொண்டிருந்த நேரம் என்னுடைய தம்பி நண்பர்களுடன் வெளியே போகிறேன் என்று பாண்டிச்சேரி சென்றிருந்தான்.

சமூக வலைத்தளங்களில் ஆபாசமாக உடை அணிந்து வீடியோ பதிவிடுபவர்களை எச்சரிக்கும் விதமாக நடிகை ஷகீலா தனது கருத்துகளை தெரிவித்துள்ளார். 

தென்னிந்திய சினிமாவில் ஒரு காலகட்டத்தில் கிளாமர் நடிகையாக அறியப்பட்டவர் ஷகீலா. ஆனால் ஒரு காலக்கட்டத்தில் தன் மீதான அந்த பெயரை அவர் மாற்றிக்கொள்ளும் அளவுக்கான செயல்பாடுகளில் ஈடுபட்டு வந்தார். 2008 ஆம் ஆண்டுக்கு பிறகு காமெடி காட்சிகளில் நடித்து வந்த ஷகீலா, விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் தனக்கென தனி ரசிகர்களை பெற்றார். மேலும் தற்போது தனியார் யூட்யூப் சேனலில் பிரபலங்களின் தனிப்பட்ட வாழ்க்கையை பற்றி பேசும் நேர்காணலை ஷகீலா தொகுத்து வழங்கி வருகிறார். 

இப்படியான நிலையில், நேர்காணல் ஒன்றிய பேசிய அவர், தன்னுடைய வாழ்க்கையில் நடந்த மறக்க முடியாத சம்பவம் பற்றி பேசியுள்ளார். அதாவது, “என் வாழ்க்கையில் ஒரு சம்பவம் நடந்தது. நான் மலையாளத்தில் கவர்ச்சி படம் பண்ணிக்கொண்டிருந்த நேரம் என்னுடைய தம்பி நண்பர்களுடன் வெளியே போகிறேன் என்று பாண்டிச்சேரி சென்றிருந்தான். சென்ற இடத்தில் சிடி வாங்கிக்கொண்டு வந்து ஆபாச படம் பார்க்கலாம் என முடிவு செய்திருக்கிறார்கள். படம் பார்க்க தொடங்கினால் அதில் நான் வந்துள்ளேன். என் தம்பி அதை பார்த்தவுடன் அழுதுக்கொண்டே பைக்கில் திரும்பி வந்துவிட்டான்.

3 நாட்களாக அவனுக்கு காய்ச்சல் வந்துவிட்டது. என்னடா ஆச்சுன்னு நான் கேட்டேன். நீ இந்த மாதிரி படம் பண்ணிருக்கன்னு அவன் சொல்ல, நான் இந்த மாதிரி படம் தான் பண்றேன்னு நான் திரும்ப சொன்னேன். இதுதான் எனக்கு தெரிஞ்ச வழின்னும் தம்பியிடம்  கூறினேன். நான் கிளாமராக தான் நடிக்கிறேன் என புரிய வைத்தேன். இதை விஜய் சேதுபதி நடித்த சூப்பர் டீலக்ஸ் படத்தில் கூட ஒரு காட்சி வைத்திருப்பார்கள். அப்படி ஒரு காட்சி என் வாழ்க்கையில் நடந்தது உண்மை தான்.  என்னுடைய தம்பியின் உணர்வுகளை அன்று தான் புரிந்து கொண்டேன். 

அதனால் தான் சமூக வலைத்தளங்களில் ஆபாசமாக உடை அணிந்து வீடியோ பதிவிடுபவர்களை நான் எச்சரிக்கிறேன். உங்களுக்கு திருமணமாகி நாளை குழந்தைகள் வந்து உங்களுடைய இந்த வீடியோக்களை  பார்த்து என்னவென்று கேட்டால் என்ன சொல்வீர்கள்?. எல்லாம் பண்ணிட்டு வந்து ஷகீலா பேசலாமா என நினைக்கலாம். நான் என்னுடைய குடும்பத்தின் சூழலுக்காக பண்ணினேன். ஆனால் அதன்பிறகு அந்த பெயரை மாற்றி எல்லாரும் என்னை அம்மான்னு அழைக்க நான் படாதபாடுபட்டு விட்டேன். தயவு செய்து சமூக வலைத்தளங்களில் வீடியோக்கள் பதிவு செய்து பெரிதாக சம்பாதிக்க எல்லாம் முடியாது. ஒரு அம்மாவின் அறிவுரையாக இதை எடுத்துக்கொள்ளுங்கள் என அந்த நேர்காணலில் ஷகீலா கூறியுள்ளார். 

தலைப்பு செய்திகள்

Karthigai Deepam: அடம்பிடிக்கும் சாமுண்டீஸ்வரி.. அடித்துச் சொல்லும் கார்த்திக் - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: அடம்பிடிக்கும் சாமுண்டீஸ்வரி.. அடித்துச் சொல்லும் கார்த்திக் - கார்த்திகை தீபத்தில் இன்று
முதல்வர் விஜயை டார்கெட் செய்த காட்சிகள் நீக்கம் ? மீண்டும் படப்பிடிப்பில் ஜெயிலர் 2
முதல்வர் விஜயை டார்கெட் செய்த காட்சிகள் நீக்கம் ? மீண்டும் படப்பிடிப்பில் ஜெயிலர் 2
துண்டோடு அலையவிட்டார்கள்...தன்னை மிகவும் காயப்படுத்திய சம்பத்தை பகிர்ந்த சூரி
துண்டோடு அலையவிட்டார்கள்...தன்னை மிகவும் காயப்படுத்திய சம்பத்தை பகிர்ந்த சூரி
Muthumani Song Lyrics : ஜென் Z மோடில் இளையராஜா..முத்துமணி பாடல் லிரிக்ஸ்
Muthumani Song Lyrics : ஜென் Z மோடில் இளையராஜா..முத்துமணி பாடல் லிரிக்ஸ்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Cabinet Reshuffle : ’தயாராகும் பட்டியல்’ பதவியை இழக்கப்போகும் அமைச்சர்கள் யார், யார் ?
‘மாற்றத்திற்கு தயாராகும் அமைச்சரவை’ HIT லிஸ்டில் இருக்கும் பெயர்கள்..!
Mettur Dam Opening : ‘கையெடுத்து கும்பிட்ட முதல்வர் விஜய்’ மேட்டூரில் இருந்து காவிரி நீரை திறந்து வைத்தார்…!
Mettur Dam Opening : ‘கையெடுத்து கும்பிட்ட முதல்வர் விஜய்’ மேட்டூரில் இருந்து காவிரி நீரை திறந்து வைத்தார்…!
Ration Shop Onion : அடி தூள்.! 3-ம் தேதி முதல் ரேஷன் கடையில் வெங்காயம் விற்பனை- ஒரு கிலோ இவ்வளவு தான்- அரசு அறிவிப்பு
அடி தூள்.! 3-ம் தேதி முதல் ரேஷன் கடையில் வெங்காயம் விற்பனை- ஒரு கிலோ இனி இவ்வளவு தான்- அரசு அறிவிப்பு
Japanese 7 Seater: ரூ.17 லட்சத்தில் புதிய 7 சீட்டரை இறக்கும் ஜப்பான் கம்பெனி - ஃபேமிலிக்கு செட்டாகுமா? மைலேஜ் வருமா?
ரூ.17 லட்சத்தில் புதிய 7 சீட்டரை இறக்கும் ஜப்பான் கம்பெனி - ஃபேமிலிக்கு செட்டாகுமா? மைலேஜ் வருமா?
Diwali 2026 Train Booking: தீபாவளிக்கு ஊருக்கு போறீங்களா? .. ரயில் டிக்கெட் முன்பதிவு எப்போது?.. தேதியை நோட் பண்ணுங்க!
தீபாவளிக்கு ஊருக்கு போறீங்களா? .. ரயில் டிக்கெட் முன்பதிவு எப்போது?.. தேதியை நோட் பண்ணுங்க!
CM Vijay: எந்த பலனும் இல்லை..! மேட்டூர் அணையை திறக்கும் CM விஜய், அதிருப்தியில் விவசாயிகள் - பிரச்னை என்ன?
எந்த பலனும் இல்லை..! மேட்டூர் அணையை திறக்கும் CM விஜய், அதிருப்தியில் விவசாயிகள் - பிரச்னை என்ன?
CM Vijay: முதல் வெளிநாட்டு பயணத்திற்கு தயாரான CM விஜய் - எங்கு? எப்போது தெரியுமா? காரணம் என்ன?
முதல் வெளிநாட்டு பயணத்திற்கு தயாரான CM விஜய் - எங்கு? எப்போது தெரியுமா? காரணம் என்ன?
புதிய தலைமைச்செயலகம்… சிஎம் விஜய்யின் மாஸ் பிளான்! 3 இடங்கள் ரெடி – எங்கெங்கே தெரியுமா?
புதிய தலைமைச்செயலகம்… சிஎம் விஜய்யின் மாஸ் பிளான்! 3 இடங்கள் ரெடி – எங்கெங்கே தெரியுமா?
Embed widget