மேலும் அறிய

விஜய்க்கு அம்மாவாக நடிக்காதது ஏன்? விளக்கமாக கூறிய நடிகை சரண்யா!

மீண்டும் 2003 ஆம் ஆண்டில் சினிமாவில் நடிக்க தொடங்கிய சரண்யா இம்முறை அம்மா கேரக்டரிலும், குணச்சித்திர வேடங்களிலும்  நடிக்க தொடங்கினார்.

1987 ஆம் ஆண்டு மணிரத்னம் இயக்கிய நாயகன் படத்தில் நடிகர் கமல்ஹாசனுக்கு ஜோடியாக அறிமுகமானவர் சரண்யா. நடிகர் பொன்வண்ணனை 1995 ஆம் ஆண்டு திருமணம் செய்துக் கொண்ட நிலையில் அதன்பின் 8 ஆண்டுகள் சினிமாவுக்கு இடைவெளி விட்டார். மீண்டும் 2003 ஆம் ஆண்டில் சினிமாவில் நடிக்க தொடங்கிய சரண்யா இம்முறை அம்மா கேரக்டரிலும், குணச்சித்திர வேடங்களிலும்  நடிக்க தொடங்கினார். ராம், எம்டன் மகன், தவமாய் தவமிருந்து, கிரீடம்,  வேல், தெனாவட்டு, யாவரும் நலம்,  தென்மேற்கு பருவகாற்று,  ஒரு கல் ஒரு கண்ணாடி, ஆல் இன் ஆல் அழகு ராஜா, நான் சிகப்பு மனிதன், வேலையில்லா பட்டதாரி, கோலமாவு கோகிலா, களவாணி என பல படங்களில் ஹீரோ, ஹீரோயினுக்கு அம்மா கேரக்டரில் நடித்துள்ளார். 

சொல்லப்போனால் அம்மா கேரக்டரா..சரண்யாவை கூப்பிடுங்கள் என சொல்லும் அளவுக்கு தமிழில் அஜித், தனுஷ், விஜய் சேதுபதி, சூர்யா, கார்த்தி, விஷால், ராம், பரத் என முன்னணி ஹீரோக்கள் பலருக்கும் அம்மாவாக நடித்துள்ளார். இதில் தென்மேற்கு பருவகாற்று படத்திற்காக தேசிய விருது பெற்று அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.  ஆனால் இத்தனை ஹீரோக்களுடன் நடித்த அவர் இதுவரை விஜய்யுடன் ஒருபடம் கூட நடிக்கவில்லை. விஜய்யுடன் குருவி படத்தில் ஒரு கேரக்டரில் நடித்திருந்தாலும் அது அம்மா கேரக்டராக அமையவில்லை. 

இதனால் ஏன் அவர் விஜய்யுடன் நடிக்கவில்லை என்ற கேள்வி அனைவருக்கும் எழுந்தது. இதனிடையே விருமன் செய்தியாளர் சந்திப்பில் ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்த நடிகை சரண்யாவிடம் விஜய்க்கு அம்மாவாக ஏன் நடிக்கவில்லை என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு எனக்கே தெரியவில்லை. இது தொடர்பாக வருத்தம் இருப்பதை விட ஏன் இதுவரை அமையவில்லை என தோன்றும். அது ஏதோ திருஷ்டி மாதிரி நடக்க மாட்டேங்குது. 

உலகம் சிறியது. அதனால் அப்படி ஒரு சம்பவம் நடக்கும் என நினைக்கிறேன். எனக்கு தெரிஞ்சி ஒரு நல்ல வாய்ப்புக்காக நானும், அவரும் காத்துக் கொண்டிருக்கிறோம் என நினைக்கிறேன். ஹீரோக்கள் லிஸ்டில் அவரை தவிர அனைத்து ஹீரோக்களுடனும் நடித்துள்ளேன். வெளியே எங்கேயாவது சந்திக்கும் போது நாம் இருவரும் ஒரு படம் பண்ணுவோம் என விஜய் சொல்லுவார். நானும் ஆமா ஆமா என சொல்லுவேன். ஆனால் இதுவரை நடக்கவில்லை என சரண்யா பொன்வண்ணன் தெரிவித்துள்ளார். 

விரைவில் விஜய்க்கு அம்மாவாக சரண்யா பொன்வண்ணன் நடப்பாரா என்பதை பொருத்திருந்து பார்க்கலாம் 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

 

 

தலைப்பு செய்திகள்

Dhanush: தமிழ் தெரியவில்லை என்பது பெருமை அல்ல.. அவமானம்தான் - மாணவர்களுக்கு தனுஷ் அட்வைஸ்
Dhanush: தமிழ் தெரியவில்லை என்பது பெருமை அல்ல.. அவமானம்தான் - மாணவர்களுக்கு தனுஷ் அட்வைஸ்
Karthigai Deepam: கனடா போகப்போகும் ரேவதி.. சாமுண்டீஸ்வரி போடும் ப்ளான் - அடுத்து நடக்கப்போவது என்ன?
Karthigai Deepam: கனடா போகப்போகும் ரேவதி.. சாமுண்டீஸ்வரி போடும் ப்ளான் - அடுத்து நடக்கப்போவது என்ன?
"ஒருவர் வேலை செய்தால், மற்றொருவர் குழந்தைகளுடன் இருப்போம்"... பெற்றோர்களாக சூர்யா–ஜோதிகா எடுத்த முடிவு
'கருப்பு' படத்திற்காக கடைசி நேரத்தில் வாங்கிய கடன்... மனம் திறந்த சூர்யா!
'கருப்பு' படத்திற்காக கடைசி நேரத்தில் வாங்கிய கடன்... மனம் திறந்த சூர்யா!

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: பட்ஜெட் கூட்டத்தொடர் முடியட்டும்... பறிபோகப்போகும் பதவி..! அச்சத்தில் அமைச்சர்கள்!
CM Vijay: பட்ஜெட் கூட்டத்தொடர் முடியட்டும்... பறிபோகப்போகும் பதவி..! அச்சத்தில் அமைச்சர்கள்!
Seeman: தவெக பட்ஜெட் வெற்று அறிக்கை... வெட்கக்கேடு - விஜய் அரசின் நிதிநிலை அறிக்கை விமர்சித்த சீமான்
Seeman: தவெக பட்ஜெட் வெற்று அறிக்கை... வெட்கக்கேடு - விஜய் அரசின் நிதிநிலை அறிக்கை விமர்சித்த சீமான்
MK Stalin on Budget: ‘'Blast Blast'-ஆக மக்கள் எதிர்பார்த்த பட்ஜெட்.. ‘Waste Waste' ஆக இருக்கு.!“ - விளாசிய மு.க. ஸ்டாலின்
‘'Blast Blast'-ஆக மக்கள் எதிர்பார்த்த பட்ஜெட்.. ‘Waste Waste' ஆக இருக்கு.!“ - விளாசிய மு.க. ஸ்டாலின்
Hyundai Creta EV On EMI: 475 கிமீ ரேஞ்ச் தரும் ஹூண்டாய் கிரெட்டா EV கார ரூ.2 லட்சம் முன்பணத்தில் வாங்கினால் EMI எவ்வளவு வரும்.?
475 கிமீ ரேஞ்ச் தரும் ஹூண்டாய் கிரெட்டா EV கார ரூ.2 லட்சம் முன்பணத்தில் வாங்கினால் EMI எவ்வளவு வரும்.?
தஞ்சை அரண்மனையில் தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்!
தஞ்சை அரண்மனையில் தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்!
ஒரே சார்ஜில் 150 கி.மீட்டர் மைலேஜ்.. வரப்போகிறது Ather Konarc இ ஸ்கூட்டர்! விலை எவ்ளோ?
ஒரே சார்ஜில் 150 கி.மீட்டர் மைலேஜ்.. வரப்போகிறது Ather Konarc இ ஸ்கூட்டர்! விலை எவ்ளோ?
Aadi Krithigai 2026: அரோகரா..! ஆடிக்கிருத்திகை நாளையா? நாளை மறுநாளா? விரதம் இருப்பது எப்படி?
Aadi Krithigai 2026: அரோகரா..! ஆடிக்கிருத்திகை நாளையா? நாளை மறுநாளா? விரதம் இருப்பது எப்படி?
iPhone 17 Pro Max Discount: ஏங்க, ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ்ல ரூ.17,000 தள்ளுபடிங்க.! அருமையான வாய்ப்ப விட்றாதீங்க; எங்க வாங்குறது.?
ஏங்க, ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ்ல ரூ.17,000 தள்ளுபடிங்க.! அருமையான வாய்ப்ப விட்றாதீங்க; எங்க வாங்குறது.?
Embed widget