மேலும் அறிய

Roja: விஜய்யுடன் நடித்தது தப்பு என நினைத்த ரோஜா - ஏன் அப்படி நினைத்தார்?

காவலன் படத்தில் நடித்தது தப்பு என நடிகை ரோஜாவை விஜய் நினைக்க வைத்த சம்பவத்தின் பின்னணியை காணலாம்.

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகை ரோஜா. இவர் ரஜினி, விஜயகாந்த், சத்யராஜ் என தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுடன் கதாநாயகியாக நடித்தவர். தற்போது அம்மா வேடங்களில் நடித்து வருகிறார். 

நம்ப மறுத்த விஜய்:

இந்த நிலையில், ரோஜா விஜய்யுடன் காவலன் படத்தில் நடித்தது குறித்து நேர்காணல் ஒன்றில் தனது அனுபவத்தை பகிர்ந்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, 

பாடிகார்ட் (காவலன் படத்தின் முதற்பதிப்பின் பெயர்) படத்துல அசினோட அம்மாவாக நடிச்சுருப்பேன். விஜய் தயாரிப்பாளர்கிட்ட யார் சார் அசினோட அம்மா?னு கேட்டாங்களாம். ரோஜா மேடம் நடிக்குறாங்க. நாளைக்கு வர்றாங்க. ரோஜா மேடமா? சான்சே இல்ல. அவங்க நடிக்கமாட்டாங்க. அவங்க என் கூட ஹீரோயினா நடிச்சவங்க. அவங்க எப்படி நடிப்பாங்க அம்மா கதாபாத்திரத்துல?னு சொல்லிருக்காரு.

தப்பு பண்ணிட்டோமா?

நான் அடுத்த நாள் காலையில கார்ல போயி இறங்குவேன். மேடம் இப்படி வாங்க என்று விஜய் என் பக்கத்துல வந்து உட்கார வச்சாரு. என்ன மேடம்? நீங்க சொன்னதை நான் நம்பவே இல்லை. நீங்க அம்மாவா? எப்படி மேடம்?னு சொன்னாரு.

தப்பு பண்ணிட்டோமோ? இவரே இப்படி சொன்னாருனா? ரசிகர்கள் எப்படி நினைப்பாங்க?னு எனக்கு ஒரு மாதிரி இருந்துச்சு. அதே நேரத்தில் நான் தெலுங்கில் கூட பண்ணியுள்ளேன். இரண்டு படம் சூப்பர் டூப்பர் ஹிட். கோலிமார் அந்த படத்துல பிரியாமணிவோட அம்மாவா நடிச்சுருப்பேன்.

இவ்வாறு அவர் கூறியிருப்பார்.

மிகப்பெரிய கதாநாயகி:

1992ம் ஆண்டு செம்பருத்தி படம் மூலமாக கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை ரோஜா. பிரசாந்த், பிரபுதேவா என அப்போதைய இளம் கதாநாயகர்களுக்கும், மறு பக்கம் ரஜினிகாந்த், விஜயகாந்த், மம்மூட்டி, சத்யராஜ், கார்த்திக் என பெரிய ஹீரோக்களுக்கும் ஜோடியாக நடித்தார்.

விஜய்க்கு அவர் நேரடியாக கதாநாயகியாக நடிக்கவில்லை என்றாலும் நெஞ்சினிலே படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடியிருப்பார். அந்த பாடல் தற்போது வரை பிரபலம் ஆகும். பின்னர், காவலன் படத்தில் அசின் அம்மாவாக நடித்திருப்பார். அதேபோல, அஜித்துடன் உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் என்ற படத்தில் நடித்திருப்பார். இந்த படத்தில் கார்த்திக் கதாநாயகனாக நடித்திருப்பார். ஆந்திர அரசியலில் தீவிரமாக ஈடுபட்டு வரும் ரோஜா அங்கு அமைச்சராகவும் பொறுப்பு வகித்துள்ளார்.

மலையாள பாடிகார்ட் படத்தின் ரீமேக்கான காவலன் படத்தை சித்திக் இயக்கியிருப்பார். விஜய், அசின் ஆகியோருடன் ராஜ்கிரண், ரோஜா, எம்எஸ் பாஸ்கர், வடிவேலு, மித்ரா குரியன் என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருப்பார்கள். வித்யாசாகர் இசையமைத்திருப்பார். சறுக்கலில் இருந்த விஜய்க்கு இந்த படம் மிகப்பெரிய வெற்றியைத் தந்தது.

தலைப்பு செய்திகள்

ரஜினியின் அந்த ஒரு குணம் தான் 'ஜெயிலர் 2' மாஸ் வெற்றிக்கு காரணம்: சூப்பர் ஸ்டாரைப் புகழ்ந்து தள்ளிய சீமான்
ரஜினியின் அந்த ஒரு குணம் தான் 'ஜெயிலர் 2' மாஸ் வெற்றிக்கு காரணம்: சூப்பர் ஸ்டாரைப் புகழ்ந்து தள்ளிய சீமான்
Jailer 2: ரஜினியின் ஜெயிலர் 2 Secret Of Success என்ன தெரியுமா? இதுதான் காரணமா?
Jailer 2: ரஜினியின் ஜெயிலர் 2 Secret Of Success என்ன தெரியுமா? இதுதான் காரணமா?
புஷ்பா 2, துரந்தர் 2 படங்களுக்கு அடுத்து ஜெயிலர் 2.. டிக்கெட் புக்கிங்கில் ரஜினி படைத்த சாதனை!
புஷ்பா 2, துரந்தர் 2 படங்களுக்கு அடுத்து ஜெயிலர் 2.. டிக்கெட் புக்கிங்கில் ரஜினி படைத்த சாதனை!
TCS வேலையை உதறிவிட்டு வந்த நடிகர்.. 75 படங்களுக்குப் பிறகு ஜெயிலர் 2 கொடுத்த அங்கீகாரம்!
TCS வேலையை உதறிவிட்டு வந்த நடிகர்.. 75 படங்களுக்குப் பிறகு ஜெயிலர் 2 கொடுத்த அங்கீகாரம்!

வீடியோ

Odisha Lorry Accident : அதிவேகமாக வந்த லாரி.. அடுத்தடுத்து மோதிய வாகனங்கள்! பகீர் சிசிடிவி காட்சி
Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
யாரும் அச்சப்பட தேவையில்லை! வி.எஸ்.பாபு உடல் நிலை குறித்து சபாநாயகர் முக்கிய அப்டேட்!
யாரும் அச்சப்பட தேவையில்லை! வி.எஸ்.பாபு உடல் நிலை குறித்து சபாநாயகர் முக்கிய அப்டேட்!
School Teachers: பள்ளி ஆசிரியர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது!
School Teachers: பள்ளி ஆசிரியர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது!
‘தவெக ஆட்சியை கழுவி ஊற்றுவதை கிளாம்பாக்கத்தில் பார்க்கலாம்’ ஆம்னி பஸ் கட்டணக் கொள்ளை - கொதிக்கும் கே.என்.நேரு
‘தவெக ஆட்சியை கழுவி ஊற்றுவதை கிளாம்பாக்கத்தில் பார்க்கலாம்’ ஆம்னி பஸ் கட்டணக் கொள்ளை - கொதிக்கும் கே.என்.நேரு
TVK Vs DMK: டம்மி அரசு! உளறிக் கொட்டும் உளறல்நிதி! உதயநிதிக்கு தவெக ஐடி விங் பதிலடி!
TVK Vs DMK: டம்மி அரசு! உளறிக் கொட்டும் உளறல்நிதி! உதயநிதிக்கு தவெக ஐடி விங் பதிலடி!
Parliament Session: அக்., சிறப்பு கூட்டத்தொடர் - தொகுதி மறுவரயறை மசோதாவை கையிலெடுக்கும் பாஜக, கரம் தரும் திமுக?
அக்., சிறப்பு கூட்டத்தொடர் - தொகுதி மறுவரயறை மசோதாவை கையிலெடுக்கும் பாஜக, கரம் தரும் திமுக?
Cauvery Issue: ”முதலமைச்சர் விஜய் உடனே இதை செய்ய வேண்டும்” - அரசுக்கு காங்., செல்வப்பெருந்தகை கோரிக்கை
”முதலமைச்சர் விஜய் உடனே இதை செய்ய வேண்டும்” - அரசுக்கு காங்., செல்வப்பெருந்தகை கோரிக்கை
TVK:
TVK: "டம்மி டாடி.. சாப்பிட்டு ஓய்வெடுங்கள்.." மு.க.ஸ்டாலினை தாறுமாறாக விமர்சித்த தவெக
Jailer 2: ரஜினியின் ஜெயிலர் 2 Secret Of Success என்ன தெரியுமா? இதுதான் காரணமா?
Jailer 2: ரஜினியின் ஜெயிலர் 2 Secret Of Success என்ன தெரியுமா? இதுதான் காரணமா?
Embed widget